மீண்டும் தேயிலை வாசம் (Meendum Theillai Vasam) – நூல் அறிமுகம்
– சு.வினோத்குமார்
இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர்.எஸ்.இஸட். ஜெயசிங் (S.Z. Jayasingh)பற்றி பேசாமல், இந்த புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். தோழர்.எஸ்.இஸட். ஜெயசிங் (S.Z. Jayasingh) ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் பேசும்போது ” தோழர் என்னுடைய மீண்டும் தேயிலை வாசம் என்ற புத்தகம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுகிறேன் கண்டிப்பாக வாங்க” என்று அழைத்தார். நானும் “சரித்தோழர்” என்று சொன்னேன். ” தோழர் நீங்களும் வாழ்த்துரை வழங்க உங்கள் பெயர் போடலாமா” என்று எழுத்தாளர் புன்னகையோடு என்னிடம் கேட்டார். நானும் சிறு தயக்கத்துடன் ” தோழர் நம்மலாம் அந்த அளவுக்கு இல்ல தோழர்” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். ஆனாலும் புத்தகத்தின் தலைப்பு என்னை மிகவும் யோசிக்க வைத்து, தோழரிடம் வெளியீட்டிற்கு முன்கூட்டியே வாங்கி என்னை படிக்கவும் வைத்தது.
தோழர்.ஜெயசிங், இலங்கையில் வாழ்ந்து, பின்பு இந்தியாவிற்கு வந்து பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்தார் என்பது மட்டும்தான் நான் அறிந்தது. ஏற்கனவே ஒரு புத்தகம் இலங்கை குறித்து எழுதியுள்ளார். தீக்கதிரில் அவர் எழுதிய இலங்கையில் ஜனாதிபதி தேர்வு – ஆய்வு என்ற கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். அந்த ஆய்வின் அடிப்படையில் தான் இலங்கையின் இப்போதைய இருக்கும் நாடாளுமன்றம் அமைந்தது. அந்த அளவுக்கு எழுத்தாளரின் ஆய்வு துல்லியமாக இருந்திருக்கிறது. அவரது எழுத்துகள் அனைத்தும், எளிய உரைநடையிலும், இலங்கை தமிழிலும் புத்தகத்தில் இருக்கிறது.
“ மீண்டும் தேயிலை வாசம் (Meendum Theillai Vasam)” என்ற புத்தகத்தில் தன் வாழ்வில் நடக்கும் அனுபங்களையும், இலங்கை நாட்டிற்கு பயணம் செல்ல வேண்டும் என்ற தூண்டுதலையும், சிங்களர் மற்றும் தமிழர் இன வேறுபாடுகளையும் மிகவும் ஆழ்ந்த சிந்தனையோடு எழுத்தாளர் எழுதி இருக்கிறார். முந்தைய காலம் மற்றும் நிகழ்காலங்களோடு ஒப்பிட்டு நடைபெறும் மாற்றங்களையும் குறித்து புத்தகத்தில் இருக்கிறது.
மீண்டும் தேயிலை வாசம் (Meendum Theillai Vasam) புத்தகத்தில் தொடங்கும்போது மீண்டும் இலங்கை என்று ஆரம்பித்து, தன் இலங்கை பயணத்தை ஒவ்வொரு நடவடிக்கையும், எளிதாகச் சொல்லி, அதில் இருந்து எப்படி எழுத்தாளர் இலங்கையில் உள்ள விமான நிலையத்தில் வந்து அடைந்தார், அங்கு இருக்கும் புத்தர் சிலையை பார்த்து இலங்கைக்கு சென்றடைந்ததாக சொல்லும் காட்சிகள் கண்முன் நடப்பதுபோல் உள்ள உணர்வு எனக்கு கிடைத்தது. படிக்கும்போது மிகவும் சுவாரசியம் நிறைந்து புத்தகத்தில் இருப்பதையும் அறிய முடிந்தது.
இயற்கை என்றும் அழகுதான், அது எழுத்தாளர்கள் கையில் சேரும்போது, இன்னும் அழகாகவும் வர்ணித்தும், அந்த இயற்கையை மென்மேலும் அழகு சேர்ப்பார்கள். இந்தப் புத்தகத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு மற்றும் கடல்கள் நிறைந்த பகுதியையும், சமூக கட்டமைப்பையும், அங்கு இருக்கும் மக்களின் அணுகுமுறையும் இலங்கை நாட்டை அறிவோம் என்று புத்தகத்தில் தெளிவாக இருக்கும்.
இலங்கையின் பொருளாதாரம் எதற்காக நலிவடைந்து குறித்தும், தவறான அணுகுமுறைய முன்னெடுத்த அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையை இந்தப் புத்தகம் விமர்சித்துள்ளது. இலங்கையின் அதிபர் ஆட்சிமுறையும், நேரடியாக மக்கள் வாக்களிப்பதும், விகிதாச்சாரம் முறையில் தேர்வும், இரு மாகாணங்களின் முதலமைச்சர் தேர்வு பற்றியும் புத்தகத்தில் இருக்கிறது. சிங்கள அரசியல் உறவுகள் மற்றும் இலங்கை மக்கள் உறவுகள் எப்படி இருந்தது, அங்கு தமிழர்கள் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைந்தார்கள் என்று எழுத்தாளர் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்தில் நிறைய வார்த்தைகள் புதியதாகவும் பிடித்ததாகவும் இருக்கும். ” கதைப்போம், மரக்கறி உணவுகள்” என்று நிறைய இடங்களில் இருக்கும்.
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று”.
என்று திருக்குறளில் திருவள்ளுவர் கூறியது போல, எழுத்தாளர் அவருக்கு உதவி செய்த சிங்களர்கள் முதல், மலையக மக்கள் நெருங்கிய உறவுகள் வரை கதைத்துக் கொண்டே புத்தகத்தில் பயணம் செய்கிறார்.
கொழும்பிற்கு எழுத்தாளர் பயணம் செய்யும்போது சீன துறைமுகத்தைப் பார்க்க சென்றது. இலங்கை மிகவும் பிடித்த உணவாக பான் இருந்தது. பெட்ரோல், மஞ்சள், மாத்திரைகள் விலைகளின் எப்படி உயார்ந்து. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு, இந்தியாவில் விசா இல்லாமல் அனுமதி பெறுவது எப்படி? என்பது குறித்து இந்த புத்தகத்தில் இருக்கிறது.
இடம்பெயர்ந்த மலையலக தமிழர்களை சந்திக்க வவுனியாவுக்கு செல்லும் எழுத்தாளர் பேருந்துகளில் வித்தியாசமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. காணி பத்திரம் பெறுவது இலங்கையில் முக்கியான ஒன்றாக பார்ப்பதாக புத்தகத்தில் இருக்கிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இலங்கைத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி, குறிப்பாக 2009 போரில் நிறைய பாதிப்புகள் நடந்திருப்பதையும், அங்கு இப்போது இருக்கும் தமிழர்கள் அது குறித்து எழுத்தாளரிடம் விரிவாக கூறியதும் இருக்கிறது.
என்றும் மனதில் நிற்கும் தலைமன்னார் இடத்தில் இருந்து 27வயதில் தான் பிறந்த மண் இலங்கையில் இருந்து ஒரு இளைஞன் பிரிந்து வந்த சூழ்நிலையை மரணத்துக்கு சமம் என்று எழுத்தாளர் சொன்னவிதம் நெகிழ்ந்தது.இலங்கையில் மோசமான உடன்படிக்கையின் விளைவாக மக்கள் அனைவரும் தலைமன்னாரில் இருந்து பிரிய மனமில்லாமல் அழுகையோடு கிளம்பியதாகவும் புத்தகத்தில் கூறுகிறார்.
யாழ்ப்பாணத்திற்கு எழுத்தாளர் மீண்டும் செல்கிறார். அதைத்தொடர்ந்து ஒரு புகழ்பெற்ற யாழ் நூலகத்தைப் பற்றியும் சில கருத்துக்களை முன் வைக்கிறார். அந்தப்பகுதி JVPன் தலைவர்களை சந்தித்து முக்கியமான கருத்துக்களை முன் வைத்து பேசிவிட்டு, புத்தகங்களைப் பரிசாக பெறுகிறார். யாழ்ப்பாணம் தமிழர் அதிகம் வாழும் பகுதியாகவும், 2009ல் போரின் பின்பு இப்போது இயல்புநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது என்பதை எழுத்தாளர் எழுத்துகளில் புரிய முடிந்தது.
மலையக நோக்கிய பயணத்தில் அங்கு அவர் படித்த கல்லூரிகள், ஒரு பேராதானைப் பல்கலைக்கழக விரிவுரையாளரைச் சந்தித்து தொடர்ந்து பேசிக்கொண்டே அனுபவங்களையும் புத்தகத்தில் கூறுகிறார். மலையலகம் என்பது உயரமாக மலைகளும், நிறையப் பெருந்தோட்டங்கள் நிறைந்து காணப்பட்டது. இங்கு மலையக காந்தி எனப் பெயர் சூட்டப்பட்ட தோழரின் கதையும், லயன் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை குறித்து புத்தகத்தில் எழுதிருக்கிறார்.
இலங்கையின் முதல் தேயிலைத்தோட்டம் ஜேம்ஸ் டெய்லர் உருவாக்கினார். மலையக மக்கள் தேயிலை தோட்டத்தில் பிரதானமான வேலையாக இருந்தது. அதில் ஆங்கிலேயரான ஜேம்ஸ் டெய்லர் பங்கு முக்கியமானது. அங்கு அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பட்டதாக இருக்கிறது.
அட்டன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலையக மக்கள் முன்னேற்றத்திற்காக செயல்படும் அமைப்புகளோடு எழுத்தாளர் உரையாடல்கள் நடந்தினார். கித்துள் மரத்தில் கிடைத்த கருப்பட்டிகள் வாங்கிய எழுத்தாளர், அது தமிழ்நாட்டில் உடன்குடி கருப்பட்டிக்கு இணையானது என்று புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்.
மீண்டும் கொழும்பிற்கு சென்ற எழுத்தாளர், அங்கு இருக்கும் தமிழ் சங்கத்தின் நூலகத்தை பார்த்து, அங்கு உரையாடல்களையும் நிகழ்த்தினார்.அதன் பின்பு கொழும்பில் இருக்கும் தாமரை கோபுரங்களையும் பார்த்து கொண்டே இறுதிச்சுற்றை முடித்து கொண்டார். பின் இணைப்பு என்று புத்தகத்தின் கடைசி 17 பக்கங்கள் இலங்கையின் சுற்றுலாதலங்கள் குறித்து எழுதிருக்கிறார். கடைசியாக அரசியலில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அதிபர் தோழர்.அனுர குமார திஸாநாயக்க மீது ஒரு நம்பிக்கை வைத்து புத்தகத்தை எழுத்தாளர் முடித்திருப்பார்.
எழுத்தாளர் தன் பதினைந்து நாள் பயணத்தை துவங்கும்போதும், முடிக்கும்போது தேநீருடன்( Plain Tea) உடன் இருந்திருப்பதை நம்மால் அறிய முடிகிறது. சிலோன் டீ என்பது மிகவும் முக்கியமான தேயிலை வாசம் கொண்டது. மலையக மக்கள் அந்த தேநீர் வாசத்தைப் பெற்றுக் கொண்டே வாழ்த்திருக்கிறார்கள் என்று புரிய முடிகிறது. அந்த தேயிலை வாசத்தை நுகர்ந்த எழுத்தாளர்.ஜெய்சிங் இந்த புத்தகத்தை அதன் வாசத்தோடு எழுதியுள்ளார்.
” மீண்டும் தேயிலை வாசம் (Meendum Theillai Vasam)” உலகம் முழுவதும் வீசட்டும், பரவட்டும்.
செவ்வணக்கம் தோழர்.எஸ்.இஸட். ஜெயசிங் (S.Z. Jayasingh). இலங்கையில் போராடிய உங்கள் வாழ்க்கைக்கும், இன்னும் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற குரல்களுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்.
மொத்தத்தில் அருமையான அனுபவம். அடுத்தமுறை இலங்கைக்கு செல்லும்போது என்னை அழைத்து செல்லுங்க தோழர்.
நானும் கதைக்கனும் தோழர்.
நூலின் தகவல்கள் :
நூல் : மீண்டும் தேயிலை வாசம் (Meendum Theillai Vasam)
ஆசிரியர் : எஸ்.இஸட். ஜெயசிங் (S.Z. Jayasingh)
விலை : ₹162.00
பக்கங்கள் : 182 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/meendum-theillai-vasam/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.