மீசை என்பது வெறும் மயிர் அந்த நூலில் சந்திப்பு நேர்காணல் நாவல் சுருக்கம் என அனைத்தையும் தொகுப்பாக மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
நாடு திரும்பாத எழுத்தாளர்களின் வரிசையில் வந்த நந்த ஜோதி பீம்தாஸ் இந்த நூல் நாம் படிக்கவேண்டிய வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்தது
முதற்பதிப்பு உரையும் மொழிபெயர்ப்புக்கான அனுமதியும் வாழ்த்தும் எழுதிவிட்டு மொழிபெயர்ப்பின் அரசியல் என்று துவங்கும் இந்த புத்தகத்தில் மொழிபெயர்ப்பை பற்றி சொல்லும்போது எழுத்தாளரும் உதாரணங்கள் சிந்தனையையும் சிரிப்பையும் ஒன்றாகவே தூண்டுகிறது.
ஒரு கவிஞரின் கவிதையை மொழிபெயர்க்கும்போது தட்டுக்குருவி என்பதை பிளேட் பேர்டு மொழிபெயர்த்திருப்பதை கண்டு வருந்திய தாகவும், ஒரு பிரபல ஊடகம் மாசு செட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும் மொழியியல் வல்லுநரும் அமெரிக்காவின் ஆளடி கொள்கைகளை அம்பலப்படுத்தி உறுதியுடன் குரல் எழுப்புகிற வருமான நோம் சாம்ஸ்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்த பொழுது அவரிடம் பேட்டி எடுத்த நேர்காணல் தொலைக்காட்சியில் போடப்பட்டது.
ஆனால் அதற்காக மொழிபெயர்ப்பும் (சப் டைட்டில்) எதுவும் செய்யவில்லை. ஆனால் அதே தொலைக்காட்சியில் 50 60 கிலோ தாஜ்மஹால் ஆன ஐஸ்வர்யாராயின் பேட்டியை ஆங்கிலத்தில் இருந்து அருளப்பட்ட முக்கிய கருத்துக்களை தமிழுக்கு இந்த உலகத்திற்கு எட்டாமல் போய் விடக்கூடாது என்று வாசகர்களுக்காக தமிழில் மொழிபெயர்த்து(சப் டைட்டில்) போட்டனர் என்ற எழுத்தாளர் கூறும்பொழுது தன்னை அறியாமலேயே சிரிப்பு வருகிறது.
மொழிபெயர்ப்பில் பற்றி சொல்லும் போது பல்வேறு மொழிபெயர்ப்பாளர் களைப்பற்றி சொல்லி அதனால் தான் மொழிபெயர்ப்பு செய்கிறேன் என்று சொல்லும்போது எழுத்தாளரின் மிகை ஆர்வம் வெளிப்படுகிறது. அவை தேவையற்றது என்று தோன்றுகிறது.
ஜெர்மானியம் அல்லாத போக்கிற்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அழிக்கப்பட வேண்டிய கருப்புப் புத்தகங்களின் பட்டியலை உல்ஃப்காங் ஹெர்மனும் வில்லியம் ஸ்கூட்டரும் வெளியிட்ட கணத்தில் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் (1933 மார்ச் 26) அவர்களின் மாணவர் அமைப்பினரால் எரிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில் ஜெர்மனி மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எண்ணி பதுங்குகுழியில் தான் சாகும் வரை அந்த புத்தகங்களை பாதுகாத்து அந்தக் குழியிலே இறந்தவர் ஈஜின் லிப்னெட்.
யுத்தம் முடிந்து ஓராண்டுக்குப் பிறகு மிகவும் தற்செயலாக நிலவறையைக் கண்ட துப்புரவு பணியாளர் திருமதி பிரிகாட் அவர்கள் உள்ளே இருந்த புத்தகங்களையும் மேசையில் அமர்ந்த படியே இறந்து கிடந்த சடலத்தின் அருகாமையில் இருந்த டைரியை எடுத்து படித்துப் புரிந்து கொள்கிறார் இப்படிப்பட்ட புத்தகங்களை பாதுகாக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் வந்து புத்தகங்களை படிப்பதும் ஒரு பணியாக மேற்கொண்டவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்குப் பிறகு இந்த புத்தகங்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்று எண்ணி தனது குடும்பத்திடம் இந்த நிலவறையை பற்றிக் கூறி 1947 மே மாதம் பத்தாம் நாளில் தடைசெய்யப்பட்ட நூலகத்தை துவங்கியுள்ளார். அதுவே உலகப் புகழ்பெற்ற ஈஜின் லிப்னெட் நூலகம்.
நிலத்துக்கு அடியில் இறந்த சடலத்தோடு அமர்ந்து அந்தப் புத்தகங்களை ஓராண்டுக்கும் மேலாக வாசித்திருப்பது நினைக்கும்பொழுது மெய் சிலிர்க்கிறது.
தடை செய்யப்பட்ட அந்த நூலகத்திற்கு எழுத்தாளர் சென்றதும் நந்த ஜோதி பீம் தாஸ் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவளோடு அவரைத் தேடிச் செல்லும் பயணமும் அவரைச் சந்தித்ததும் அவர் தோற்றம் பற்றியும் அவர் வசித்து இருக்கக்கூடிய ஆளில்லாத தீவை பற்றியும் என சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறார் தீட்சண்யா அது மட்டுமில்லாது அவரை சந்தித்து பேசும் உரையாடல்களும் உரையாடலின்போது அனுபவமும் அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களும் இன்னும் சுவாரசியமாக நம்மை இழுத்துச் செல்கிறது.
அதில் குறிப்பிடத்தக்க சுத்த ரத்தத்தில் அழுகும் தொப்புள் கொடி என்ற தலைப்பின் கீழ் ரவி தர்மகீத்தின் இரண்டு நாவல்களை பற்றிய பேசும்பொழுது நம்மை வியப்புக்கு உள்ளாக்கியது.
இந்தியாவிற்கு திரும்ப வராத எழுத்தாளரைப் பற்றி தெரிந்து கொள்ள சென்ற நமக்கு அவரிடம் பேசும்பொழுது அவர் தன்னைப் பற்றி விவரிக்கும் பொழுது இந்தியாவின் சாதிய கொடுமைகளும் பாலியல் வன்முறை நிகழ்வுகளும் மதக்கலவரங்களையும் குறிப்பிட்டு வர மனமற்று இருப்பதை சொல்லும் பொழுது நம்மை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.
அவர் பள்ளிப் பருவம், சாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டதும், வீட்டை விட்டு வெளியேறிய சம்பவங்கள், அவர் வாழ்வின் பாதையில் இந்தியாவிலும் சிலோனிலும் நடைபெறும் மாற்றங்களை கூறும்பொழுது நம்மை வியப்புக்கு உள்ளாக்கி கண்ணீரை வரவழைக்கிறது.
மீசை வெறும் மயிர் என்ற நாவலின் சுருக்கம் நாம் நாவிதர்கள் மீது வைத்திருக்கும் அபிப்பிராயங்களை எண்ணங்களையும் உடை தெரிகிறது. நாவலின் சுருக்கத்தைப் படிக்கும்பொழுது யாராக இருந்தாலும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் மீசை என்பது வெறும் மயிர் தான்.
மீசை என்பது வெறும் மயிர்
ஆதவன் தீட்சண்யா
முதற் பதிப்பு 2014
பக்கம் 176
விலை 130
சந்தியா பதிப்பகம் புதிய எண் 77
53வது தெரு
9வது அவென்யூ அசோக் நகர்
சென்னை 600 083 தொலைபேசி 044 24896979
மின்னஞ்சல் [email protected]
www.sandyapublications.com
நா. விஜயன் வழக்கறிஞர்
உயர் நீதிமன்றம் சென்னை