எனக்கு எப்போதும் Curriculum தான் ஆர்வம், அது பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன். இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள் , Multilingual skills & Rich traditions of India….இதில் மொழியை , சமஸ்கிருதத்தை முக்கியப்படுத்தறாங்கன்னு நல்லாத் தெரியுது.
கணக்குப் பாடத்தில் கூட ஸ்லோகன் மனப்பாடம் செய்வது குறித்து பேசப்படுது. எல்லாப் பாடங்களிலும் சமஸ்கிருத மொழியையே கொண்டு வர முயற்சிப்பது போல இருக்கு இது . Ethics நிறைய நீதிக் கதைகள் கொண்டு வர பேசப்படுது இந்தக் கல்விக் கொள்கையில் , ஏற்கனவே இது பற்றி ஆசிரியர்களுக்கு புரிதலில்லாத நம்பிக்கை இருக்கு , நீதிக் கதைகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பஞ்ச தந்திரக் கதைகள் உள்ளிட்ட பல கதைகளே, அங்கே ஏமாற்றுதல் தானே கதையில் சொல்லப்படுகிறது.
பாடத்திட்டம் , பாடநூல் தயாரிப்பு அனைத்தும் NCERT செய்து விடுவதாகவும் சில மாற்றங்களை அந்தந்த மாநில SCERT செய்து கொள்வதும் என்பதாகத் தரப்பட்டுள்ளது , காந்தி , அம்பேத்கர் பற்றி மட்டும் குறிப்பிட்டு மற்றவர்கள் பாடங்களில் சேர்ப்பது பற்றி சூசகமாகக் கூறப்படுகிறது.
பள்ளிகளுக்குள் ஒரு சாரரைத் தன்னார்வலர்களாகக் கொண்டு வந்து விடும் சூழல் உள்ளது.
ஆகவே Aruna Rathnam சொல்வது போல நாம் Work force ஐ தயாரிக்க வேண்டும். சமூகம் , பள்ளி இரண்டும் இணைய வேண்டும் ,TNSF அறிவொளி போன்ற இயக்கங்கள் இதோடு இணைய வேண்டும். இதில் 8 பகுதிகள் உள்ளன , எல்லாவற்றிலும் எல்லோருக்கும் ஆர்வம் இருக்காது , எல்லோராலும் எல்லாவற்றையும் வாசிக்கவும் முடியாது ஒவ்வொரு தலைப்பும் ஒரு குழுவாகப் பிரிந்து கலந்துரையாடல் தொடர வேண்டும் என்று மாடசாமி தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.