Writer Devikapuram Siva in Meghnad Saha the story of a revolutionary scientist book reviewமேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை
ஆசிரியர் : தேவிகாபுரம் சிவா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : 2015 முதல் பதிப்பு
விலை: ரூ.230
பக்கம் : 288
புத்தகத்தை பெற : 044 24332924 அல்லது https://thamizhbooks.com/product/meghnad-saha-devikapuram-siva/

மக்கள் விஞ்ஞானியை எப்படி இந்திய சமூகம் மறந்து போச்சு என்கிற கோபம் இயல்பாக எழுகிறது தோழர்களே இந்நூலை வாசித்த போது.

*வானியிற்பியலின் தந்தையை ஏன் கொண்டாட மறந்தது?

*இந்த பேரண்டத்தை உள்ளங்கையில் ஆராயும் அறிவியலை வளர்த்த விஞ்ஞானியை ஏன் மறந்தோம்?

*மக்கள் அறிவியல் நாள் அக்டோபர் 6ல் வருடா வருடம் கொண்டாடியிருக்கனுமே ஏன் செய்யவில்லை?

*உலக நாடுகளை விட அறிவியலில் மிகப்பெரிய சாதனையை மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா செய்திருக்கும்போது ஏன் இன்னும் நமது அறிவியல் சிந்தனையை ஏன் இந்தியாவில் கட்டமைக்காமல் இருக்கிறோம்? இன்னும் எவ்வளவு நாளைக்கு உலக நாடுகளில் உள்ள ஆய்வகங்களைத் தேடி அலையப் போகிறோம்?

*நோபல் பரிசை விட பல ஆயிரம் மடங்கு விலைமதிப்பற்ற மேக்நாட் சாகா பெயரில் இன்னும் ஏன் விருது வழங்காமல் இருக்கிறோம்?

*இதற்கெல்லாம் காரணம் என்ன? மேக்நாட்சாகா ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததாலா?

ஆம் அதுதான் காரணம். அவர் ஒடுக்கப்பட்ட என்ற சாதியில் பிறந்தார் என்பதற்காக அவரின்

*அயனியாக்கக் கோட்பாடு
*தெரிவு செய் கதிர்வீச்சு கோட்பாடு

இரண்டையும் உலக நாடுகள் கள்ளத்தனமாக, சூழ்ச்சி செய்தும், இருட்டடிப்பு செய்தும் பல விஞ்ஞானிகள் நல்ல பெயரை எடுத்து அவர்கள் பெயரில் உருவான கோட்பாடாக மேக்நாட் சாகாவின் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சி அவரின் மனைதை வேதனையடையச் செய்தனர். 1917ல் அவர் உருவாக்கிய கோட்பாட்டை வெளிநாட்டு ஆஸ்ட்ரோ பிஸிகள் இதழில் வெளியிட அனுப்பிய போது மிக நீண்ட பக்கங்களைக் கொண்டுள்ளதால் அதை வெளியிடுவதற்கான தொகை கொடுத்தால் போடுகிறேன் என்று அந்த இதழ் நிறுவனம் கூறியதால், மறுபடியும் சுருக்க முறையில் எழுதி அனுப்பிய கட்டுரையை அவ்விதழ் வெளியிட, அதைக் கொண்டு ஆய்வு செய்த வெளிநாட்டு விஞ்ஞானிகள் ராயல் நிறுவனத்தில் சாகாவிற்கு முன்னதாக உறுப்பினராகி விடுகின்றனர்.

இது எதைக் குறிக்கிறது என்றால் வெள்ளை இனத்தவரின் நிறவெறியே ஆகும். அங்கே அந்த நிலையென்றால் இந்தியாவில் சாதியால் ஒதுக்கப்படல் என இருவேறு கூர் நிறைந்த கத்தியால் சாகா கலங்கடிக்கப்பட்டார். இருப்பினும் சாகா எதையும் கருத்தில் கொள்ளாமல் மேலும் மேலும் தன் மக்கள் சார்ந்த சமூகப் பணிகளில் தனது கவனத்தை செலுத்தி, ஒடுக்கப்பட்டவர்களின் கல்லாமை, இல்லாமை, தீண்டாமை ஆகியவற்றிறை ஒழிக்க மாணவர்களுக்கு அறிவியல் கல்வியை வழங்குவதில் மிகுந்த அக்கறை செலுத்தினார். அதற்காக கல்லூரி பேராசிரியர் பதவியை ஏற்று மிகவும் போதாமையான அக்கல்லூரியின் பொருளாதார சூழலிலும் மிகுந்த ஆராய்ச்சி செய்து மாணவர்களுக்கு மறுநாள் வகுப்பறையில் வழங்குவார்.

புரட்சிகர விஞ்ஞானியின் கதை | Read Book ...
மேக்நாட் சாகா

ஒரு உதாரணம் சொல்லலாம். தான் பணிபுரியும் கல்லூரிக்கு சாகா கடிதம் எழுதுகிறார் இப்படி, உலக நாடுகளின் ஆராய்ச்சி கூடங்களில் தன்னுடைய கோட்பாட்டை வைத்து மிகப்பெரும் பொருட்செலவில் ஆய்வுகள் செய்துகொண்டே முன்னேறுகின்றனர். ஆனால் இங்கு ஆய்வு செய்வதற்காக ஒரு கையால் அடிக்கும் எரியும் கைப்பம்பு கிடைப்பதில் கஷ்டமாக இருக்கிறது என்று எழுதுகிறார்.

இது ஒரு அவரின் தடைக்கு சான்று. அவரை செயல்பட விடாமல் தடைசெய்யப்பட்ட வஞ்சக செயல்பாடுகள் நிறைய உண்டு. அதற்கு நேரு, சி.வி.ராமன், மேற்கத்திய இனவெறி, காலணிய வெறி உள்ளிட்ட கொடும் ஆக்டோபஸ் கரங்கள் அவரின் செயல்பாட்டை முடக்கப் பார்த்தனர். சொல்லி மாலாது அவரின் துயரம்.

போகட்டும் இனிமேலாவது நம் நாடு மேக்நாட் சாகாவை கொண்டாட வேண்டும். அதற்கு எளிய மக்களின் கோரிக்கைகள் மேலெழும்ப வேண்டும்.

அவரின் அக்டோபர் 6ல் அவருடைய பிறந்த நாளில் ‘மக்கள் அறிவியல் நாள்’ என கொண்டாடப்பட வேண்டும். இன்னும் என்னென்ன பேரில் கொண்டாடினாலும் மகிழ்ச்சியே. இந்நூலில் உள்ள செய்திகளில் நூறில் ஒரு பங்கு கூட நான் சொல்லவில்லை அவ்வளவு இருக்கிறது.

ஐன்ஸ்டின், தாகூர், டார்வினின் பேரன், சக மாணவ தோழர்களாய் இறுதி வரை உடன் வந்த அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஐரோப்பா, ஜெர்மன், ரஷ்யா என பலநாடுகளின் அறிஞர்களுடனும், கம்யூனிஸ்ட் தோழர்களுடனும் நெருங்கி பழகி சமூக விஞ்ஞானியாக வலம் வந்த பரந்துபட்ட திறமைகளுக்குச் சொந்தக்காரர் தான் மேக்நாட் சாகா.

இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்று அது சாகாவின் கல்வி! கல்வி!! கல்வி!!! கல்வியைத் தவிர வேறொன்றும் இல்லை.

இந்நூலை எழுதிய தேவிகாபுரம் சிவா அவர்களுக்கு அவரின் ஐந்து வருட உழைப்பிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியும், நல்வாழ்த்துகளும். இந்நூலை வாங்கியது 2016. வாசித்தது 2021. எப்படி மறந்து போனேன் என்று தெரியவில்லை. நினைவுபடுத்திய கள்ளக்குறிச்சி அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் அருமைத் தோழர் வை.கருணாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி!

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முழு கட்டுரையோடு சந்திப்போம். உடன் பாரதி புத்தகாலயத்தை தொடர்பு கொண்டு நூலைப் பெற்று வாசியுங்கள் நண்பர்களே! தோழர்களே!! வாசித்தவர்கள் விவாதியுங்கள்,

வாசிப்போம்! விவாதிப்போம்!!Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *