கருப்பு அன்பரசன் எழுதிய மேலெழும் சொற்கள் - நூல் அறிமுகம் | Karuppu Anbarasan - melezhum sorkal book published by Bharathi Puthakalayam - https://bookday.in/

மேலெழும் சொற்கள் – நூல் அறிமுகம்

மேலெழும் சொற்கள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : மேலெழும் சொற்கள்
ஆசிரியர் : கருப்பு அன்பரசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
விலை : ரூ . 120

தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதியது. தபால் வந்திருந்த போது முதலில் இதை கவிதைப் புத்தகம் என்று நினைத்தேன். தலைப்பு அப்படித்தான் உணர்த்தியது. உண்மையிலே, இந்த புத்தகம் அல்ல பொக்கிஷம். தினசரி ஒரு புத்தகமோ அல்லது சில பக்கங்களோ வாசிப்பது என் வழக்கம். எனக்குப் பிடித்தமானதும் கூட, புஸ்தகா, ஸ்டோரிடெல், குக்கூ, பாக்கெட் எப்.எம். என் அலமாரியில் புத்தகங்கள் என்று அத்தனை ஆர்வம் வாசிப்பிலும், கதை கேட்டலிலும்.

அத்தனை புத்தகங்களையும் ஒரே நேரத்தில் வாசிக்க இயலாது. சில சமயம் ஊருக்குச் செல்லும்போது, நாலைந்து புத்தகங்கள் எடுத்து வைத்துக்கொள்வேன். ஐபேடில் புத்தகங்கள் இருக்கும். பலமுறை படிக்காமல் அப்படியே எடுத்துவருவேன். சிலசமயம் ஒன்றாவது முடித்துவிடுவேன்.

வாசிக்க விரும்பிய புத்தகத்தின் சாரத்தை சுவை மாறாமல் மினிமீல்ஸ்ஸாக கொடுத்தால்….அத்தனை ருசியாக இருந்தது மேலெழும் சொற்கள் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது. வாசிக்க சில புத்தகங்கள் சிலதை அறிமுகப்படுத்துங்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு தோழர் கருப்பு அன்பரசனை கேட்கலாம். மனிதர் அத்தனை வாசித்திருக்கிறார். அதற்கு சான்று…இந்த மேலெழும் சொற்கள்.

இதில் நட்சத்திர வாசிகளை நான் குக்கூவில் ஆடியோ பைலாக கேட்டு இருக்கிறேன். உப்புவேலி….வரலாற்றுக் கொலைகளில் மிக முக்கிய பங்கு வாய்ந்த உப்பின் சரித்திரம். ஒரு புத்தகத்தின் அறிமுகமென இன்றி அது பேசும் சமூக, குடும்ப, உளரீதியான, மனரீதியான, அரசியலை அறிமுகம் செய்திருக்கிறார்.

எழுத்தும் படைப்பும் வாசிப்பவர்களின் மனநிலையை சமன்குலையச் செய்ய வேண்டும். தில்லையின் விடாய் 48 வலிமிகுந்த உயிர் கவிதைகளை சுமந்திருக்கிறது என்று சொல்லி, அந்த கவிதைகளின் தீர்க்கத்தை, அபயம் தேடி அலையும் பெண்களின் சதையை ருசி பார்க்கத் துடிக்கும் வல்லூறுகளின் வக்கிரத்தை, நான் ஒரு பறவை, புறத்தலைதல்…. என்னும் தலைப்புகளின் வரிகளை விவரித்து இருக்கிறார்

கருப்பு அன்பரசன் எழுதிய மேலெழும் சொற்கள் - நூல் அறிமுகம் | Karuppu Anbarasan - melezhum sorkal book published by Bharathi Puthakalayam - https://bookday.in/

அரம்பையில் வரலாற்றின் நிஜங்கள் பலவற்றை மாயாவும் சாலமனும் தங்கள் முகநூல் வழியாகப் பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்களின் விவாதங்கள்தான் கதை….. காலா பாணி….நாடுகடத்தப்பட்ட முதல் அரசனின் கதை…. உப்புவேலியில் தொடங்கி, இருண்ட காலக் கதைகளில் முடிகிறது.

மொத்தம் 19 மெகா நாவல்களை மினி நாவல்களாக, தன் பார்வையில் அதற்கு விமர்சனம் எழுதி, எழுதியவரைப் பாராட்டி, எழுத்துக்களையும் வெளிப்படுத்தி, எட்டாதிருக்கும் பல்வேறு புத்தகங்களினை அடுத்தமுறை வாங்கி வாசிக்கும் ஒரு ஆர்வத்தை தூண்டியிருக்கிறார் இந்த புத்தகத்தின் மூலம். புத்தகம் வாசிக்க தேடுபவர்களுக்கு இருளின் ஒளிக்கீற்றாய் இந்த தொகுப்பு நிச்சயம் இருக்கும் என்று அ.கரீம் அவர்கள் சொல்லியிருப்பது நூறுசதவிகிதம் சரியானதே. வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி..

நூல் அறிமுகம் எழுதியவர் :

லதா சரவணன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *