ஆகஸ்ட் 25 ஜேம்ஸ் வாட், மைக்கேல் ஃபாரடே, ஹென்றி பெக்கொரல் ஆகியோரின் நினைவு நாள்
இன்றைய நாள் (ஆகஸ்ட் 25) அறிவியல் உலகில் மாபெரும் மாற்றங்களுக்குக் காரணமான மூன்று அறிவியலாளர்களின் நினைவு நாள் ஆகும். ஆம். ஜேம்ஸ் வாட், மைக்கேல் ஃபாரடே, ஹென்றி பெக்கொரல் ஆகியோரின் நினைவு நாள் ஆகும். இவர்கள் அறிவியல் உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை இக்கட்டுரையில் காண்போம்.
ஜேம்ஸ் வாட் (James Watt):
இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அறிவியலாளர் ஆவார். 1765 ஆம் ஆண்டில் இவர் நீராவி இயந்திரத்தின் வடிவமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்தார். இருப்பினும் 1776 ஆம் ஆண்டிலேயே முதல் நீராவி இயந்திரங்கள் வர்த்தக நிறுவனங்களில் நிறுவப்பட்டு வேலை செய்யத் தொடங்கின. நீராவி இயந்திரத்தின் வடிவமைப்பில் இவர் செய்த மேம்பாடுகளே இங்கிலாந்திலும் உலகின் பிற பகுதிகளிலும் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குக் காரணமாக இருந்தது. இவர் 1819 ஆம் ஆண்டின் இதே நாளில் இறந்தார்.
மைக்கேல் ஃபாரடே (Michael Faraday):
இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஆவார். இவர் மின் காந்தவியல், மின் வேதியியல் துறையில் மிகச்சிறந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் மின்காந்தத் தூண்டல், பாரடே விளைவு, மின்னாற்பகுப்பு, முதல் மின்னியற்றி ஆகியவற்றைக் கண்டறிந்தவர் ஆவார். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.
இவர் 1867 ஆம் ஆண்டு இதே நாளில் இறந்தார்.
ஹென்றி பெக்கொரல் (Henri Becquerel)
ஹென்றி பெக்கொரெல் ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக 1903 ஆம் ஆண்டில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. பெக்கொரெல் 1896 ஆம் ஆண்டில் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence ஐ) ஆராயும் போது தற்செயலாகக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். 1908 ஆம் ஆண்டு இதே நாளில் இவர் இறந்தார்.
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான கட்டுரை சார்.மூன்று அறிவியலாளர்களின் நினைவுநாள் ஒரே நாள் இருப்பது தங்களின் கட்டுரை வாயிலாக அறிந்து கொண்டேன் சார்.