Mental cooking (மனச் சமையல்) Poetry By Geetha Sundar in Tamil. Book Day is Branch of Bharathi Puthakalayam.

மனச் சமையல் – பூ. கீதா சுந்தர்



சோர்வைக் களைந்து
சோறாக்கினேன்

சவால்களைச்
சாம்பார் வைத்தேன்

பொறாமையைப்
பொங்கல் வைத்தேன்

ஆற்றாமையை
அவியல் செய்தேன்

அவமானத்தை
அரைத்தெடுத்தேன்

துரோகத்தைத்
துருவிப் போட்டேன்

பகைமையைப்
பாயசம் வைத்தேன்

குமுறல்களைக்
கூட்டு வைத்தேன்

வேதனையை
வேக வைத்தேன்

வஞ்சனைகளை
வடை சுட்டேன்.

ஊர் பேச்சை
ஊறுகாய் போட்டேன்

அத்தனையும் தின்று
திடமானேன்,
மீண்டும் எழுந்து
வீர நடை நடந்து
வெற்றிகளைச் சூடுவேன்…

பூ. கீதா சுந்தர்
சென்னை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 6 Comments

6 Comments

  1. சாந்தி சரவணன்

    மிகவும் சிறப்பான கவிதை. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்

  2. Geetha padmanaban

    கவிதை நன்றாக சமைத்துள்ளீர் அருமை

  3. Rathika vijayababu

    சிறப்பு👏👏👏

  4. இரா.செந்தில் குமார்

    மகளிர்களின் மன வேதனையை அழகான கவிதை வடிவமாக வடித்து புதிய கோணத்தில் சிறப்பாக உள்ளது தோழர். தொடர்ந்து எழுதுங்கள் தோழர் வாழ்த்துகள்….

  5. Neya Puthuraja

    மிக அருமையான வரிகள் தோழர்…பல இடர்களை தாண்டி வாழ்க்கையை சவாலோடு ஏதிர்கொள்வோர்க்கு ஊக்கம் தரும் வகையில் வரிகள் உள்ளது சிறப்பு👌👌💐💐💐

    நேயா புதுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *