மன ஆரோக்கியம் என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு: தனிநபர் பிரச்சினை அல்ல – எஸ்.சிந்து

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டத்திலிருந்திலிருந்து பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாக இருப்பதை சமீபத்தில் சுஷாந்த சிங்கின் மரணம் எல்லோரும் பேச தொடங்கி உள்ளனர்.

இதற்கு பல்வேறு காரணங்கள் என்றாலும் மக்கள் பிரபலங்களின் மரணக்குறித்தும் மன அழுத்ததை அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது ஏதோ பணக்காரர்களின் நேராக பார்ப்பது அதைப்பற்றி புரிதல்யின்மையின் வெளிப்பாடு. பொது முடக்கம் அறிவித்தலிருந்து மக்கள் நெடுஞ்சாலை முழுவதும் கால்கள் தேய தேய நடந்துக்கொண்டுயிருக்கிறார்கள். அவர்களை பற்றியெல்லாம் பேச நம்மிடம் நேரமில்லை. உயிர் என்பது பிரபலமோ அல்லது அன்றாட தினக்கூலியோ இரண்டுமே ஓன்று தான். சமீபத்தில் இந்த ஊரடங்குச் பெரும்பாலான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது, சுயத்தொழில், சுற்றுலாத்துறை கேளிக்கைத்துறை என எல்லாம் முடக்கத்தில் உள்ளது. இதில் பெரியே கேள்வியே வாழ்வை எப்படி கடக்கப்போகிறோம் என்ற பயம் இலட்சக் கணக்கானவர்கள் வாழ்வை கேள்விக்குள்ளாக்கிறது. இதில் பெண்களும்   பெரிதாக பாதிக்கபட்ட உள்ளனர் என்பதையும் பார்க்க முடிகிறது.

இதைப்பற்றி பெங்களூருவை சேர்ந்த புகைப்படக்கலைஞர் மற்றும் திரைப்பட  இயக்குனரான அர்ஜுன் கமத் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியாட்டுயிருந்தார். அதில் மனநலம் சார்ந்ததாக  விழிப்புணர்வை நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 11வருடக்களாக  முன்வைத்துள்ளார்.

மன அழுத்தம் குணமாக... | Dinamalar

இந்தியாவில் 7ல் ஓருவர் மன எழுத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனார் என்பது 2019ல் டிசம்பரில்  Indian Council of Medical Research, Lancet Psychiarity ஆய்வறிக்கை  சமர்ப்பிக்கிறது. அதாவது  The Global burden of disease study 1990-2017  பில்கேட்ஸ் குழுமம் இனைந்து  முன்னேடுத்துக்கொண்டுள்ளது. இதில் மனநலம் சார்ந்த பிரச்சனையில் 15-40  உள்ளானவர்கள்  Anxiety and depression,schizophernia   மற்றும் bipolar disorder  போன்றவற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

Indian psychiatry society  ஊரடங்கு காலத்தில் சராசரியாக 20 சதவிதம் மன அழுத்தம் உள்ளதாக தெரிவிக்கிறது. மருத்துவர்கள் இதை அரசு மனநலம் சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் பொது நலம் சார்சார்ந்த விஷயமாக கையில் எடுக்க  வேண்டும் என்பதே எல்லோரின் வேண்டுகோள். இதைப்பற்றி நந்திதா தாஸ் ஓரு குறும்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்த பொது முடக்கம் திருமாண பெண்கள்  Domestic violenceல் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளார்கள் என சொல்கிறார். பார்க்காதவர்கள் கட்டாயம் Listen to her  பார்த்து விடுங்கள். அடுத்தாக இளம் பெண்கள் அதாவது திருமணத்தை நோக்கி காத்திருக்கும் பெண்களின் உளவியல் ரீதியாக மன அழுத்திற்கு  உள்ளாகுதின்றனார். அதிலும் 25-30 வயதுக்குள் இருப்பதை பார்க்க வேண்டும்.

ஓரு பெண்ணின் உளவியல் பார்வை

ஓரு சராசரி பெண் அவள். பெண் பெண்களுக்கு வார்க்கப்பட்ட பிம்பத்தில் வளர்க்கப்படுகிறாள். அவளுக்குள் சாதி, மதம் போன்ற சாயம் பூசப்படுகிறது. பள்ளி முதல் கல்லூரி வரை பெண்களுடான  படிப்பு மட்டுமே ஆகையால் ஆண்கள் உலகம் என்பதே தெரியாமல் போனது. சிறு வயது முதல் அப்பா மட்டுமே உலகம் கடலை கரம்பிடித்த  அலையின் அழகை காண்ப்பித்தவர்.  அப்படியான அப்பாவிடம் சில பிரச்சினையால் பேசுவது இல்லை. ஆனாலும் இப்போதும் அப்பா என்ற பிம்பம் அவளுக்கு நெருக்கமானது அதற்காக வருத்தப்படுகிறாள். பணிரெண்டாம் வகுப்பு முடிந்து சென்னையில் உள்ள ஓரு பெரிய  பேஷன் டிசைனில் ஸ்கூலில்  சேர விண்ணப்பித்த இடமும் கிடைத்தது.சேருவதற்கு சென்ற அவள் சேராமல் திரும்புகிறாள் . பின்பு பட்டப்படிப்பு முதல் முதுகலைப்பட்டம் வரை படித்து  நல்ல வேலையில் சேர்கிறாள். அங்கு எல்லோரும் வட இந்தியர்கள் இருந்தும் எந்த பாகுப்படும் இல்லாமல் எல்லோரிடமும் கிடைத்த நட்பு. எப்போதும் சிரிப்புடனே  சற்றியவளை ஒருவர் அவளை காதலிக்கிறேன் என்றவுடன்  பேசுவது குறைந்தது.

அங்கிருந்து உடனே வேறு ஊருக்கு பணிவிடை மாற்றம் முன்று வருடங்கள் காத்திருப்பிற்கு பின்பும் ஏனோ அவனிடம் அவளுக்கு காதல் வரவில்லை. அவருக்கு திருமணமும் முடிந்தது. இதனிடையே முற்போக்கு இயக்கத்தால் நிறைய படிக்கவும் ,பேசவும் வாய்ப்பு கிடைக்கிறது.விட்டில் திருமணம் பற்றி பேசும் போதெல்லாம் ஏதோ ஓரு பயம்.வாழ்கை ஓவ்வொருக்கும் வெவ்வேறு புரிதலை தருகிறது.  நிறைய பயணம் எல்லாம் வேறென்றை தேடச்சொல்லியது. அப்படி ஒருவர் மீது ஓரு கரஷ்  இருந்தது. ஆனால் பிறகு தான் தெரிந்து அவர் வேறு யாரையோ காதலிக்கிறார் என்று அதோடு பேசியதே இல்லை. காதல்  என்பது புகைப் போட்டு பழுக்கும் பழமல்ல என்ற புரிதலுக்கு உட்பட்டவள் அவள். திருமண சடங்கு முறையில் பெண்யெல்லாம் நுகர்வு பொருளே அங்கு ஆணின் தேவையே பிரதானம் நல்ல  குடும்ப  பெண் இதற்கான அர்த்தம் பெண்ப்பார்த்து அவனுக்கேற்ற மாதரி அவளை தகவமைத்துக் கொள்வது என்பதே. வரன் பார்கும் ஆண்கள் பெண்களை அவர்களின் தேவையாக கருதுவது தான் யதார்த்தம். இங்கு யாரும் அவளின் கனவுகளையெல்லாம் கேட்க வாய் திறப்பதுமில்லை.

பெண்களுக்கு எதனால் மன அழுத்தம் ...

அப்படி அவள் யாரையும்  பார்த்துமில்லை. எல்லோரின் ஓரு வருட கேள்வியாக இந்த திருமணம் மட்டுமே உறவினார்கள் கேட்கும் போதெல்லாம் ஏதோ அப்படியான வேதனை. வெளிநாட்டில் திருமண வாய்ப்பு என எல்லாம் அவள் வேண்டாம் என்றவுடன் பெற்றோர் காது கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு வீடு,காசு, பணமெல்லாம் மகிழ்ச்சியை தந்து விடும் என்பதில் நம்பிக்கையில்லை. அதைத் தாண்டி அவளை புரிந்தக்கொள்ள யாரோ ஒருவரை தேடுகிறாள். இந்த இடைப்பட்ட நாட்களில்  சுமார் ஓரு வருடமாக என்பதே இரவு தூக்கம் தொலைந்துப்போனது(ismonia).  இப்போதெல்லாம் எதன் மீதும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதாக பெரும் மன அழுத்திற்கு ஆளானதாக  உணர்கிறாள். அப்போதெல்லாம் பயணம் ஓரு பெரிய நிவாரணி. ஆனால் இப்போது இந்த லாக்டிக் வேலை மற்றும் இதர பணி லிருந்து திரும்ப ஓரு விஊ தனிமையை தருகிறது.  தற்போதெல்லாம்  இது பெரும் பாதிப்பாக தெரிகிறது. பின் ஓரு தோழரிடம் இவற்றை சொல்லும் போது அவரின் பதிலும் எதர்தார்த்த மனிதனின் பதிலாகவே இருந்தது. திருமண செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.

விட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து ஓப்புக்கொள் என்பதே. இருந்தும்  அவள் நம்பிக்கை நினைத்தை  பேச ஓருவர் இருக்கிறார் என்பது போன்று. வீட்டில் திருமணம் பற்றி பேசினாலே ஏதோ ஓரு பயம் துரத்திக்கொண்டுயிருப்பது போது போல இருக்கிறது. வீட்டில் எல்லோருக்கும் அவள் மீது ஓரு வெறுப்பு சொன்னதை கேட்க மறுக்கிறாள் என்ற சாதாரண மனநிலையில் எல்லோரின் பேச்சு. இந்த லாக்டவுன் எல்லோரையும் புட்டி வைத்திருக்கிறது ஆனால் அவர்களின் வலியெல்லாம் கடந்து வெளியே யாரிடமாவது பேச நினைத்து என்னிடம் சொன்னது. இப்போது தவறு யார் மீது என்று தெரியவில்லை .ஆனால் தனிமை சில சமயங்களில்  அவளை கொள்கிறது என சொல்லும் போது கண்கள் கலங்கியது.  புரிந்த கொள்ள முடியாத இந்த வாழ்க்கையை புரிந்துக்கொள்ள முற்படுவது தெரிகிறது .

சமிபத்தில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளை கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் பேச முற்ப்படுவது பாராட்டிற்க்குரியது. ஏதோ மன அழுத்தம் நோய் அல்ல. அவற்றில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் சமூக பார்வையை உடைத்தெரிவதன் முலம் பலரை அதிலிருந்து மீட்க முடியும் என்பதே எனது நம்பிக்கை. உரையாடுவோம் உடைத்தெரிவோம் மனநலம் காக்க…….