பல்வேறு மாநிலங்களில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க ரயில்வே சிறப்பு சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது .சிங்கப்பூர் போல மத்திய அரசு கால அவகாசம் கொடுத்து லாக்டவுன் அறிவிக்காததால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையும் இன்றி சம்பளமும் இன்றி தெருவில் நிற்கிறார்கள் இவர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைப்பது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும். மத்திய அரசு ரயில் ஓட்ட அனுமதி வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டது.
ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்தது. இந்த சிறப்பு ரயில்களில் ரயில் கட்டணம் மெயில் எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் கிளாஸ் கட்டணமும் அத்துடன் வண்டி எங்கும் நிற்காமல் பாயிண்டு பாயிண்ட் செல்வதால் சூப்பர் பாஸ்ட் சர்சார்ஜ் ரூபாய் 30-ம் அத்துடன் ரிசர்வேஷன் சார்ஜ் ரூபாய் 20-ம் ஒவ்வொரு பயணிக்கும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது .இந்த கட்டணத்தை மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வசூல் செய்து ரயில்வேக்கு கட்ட வேண்டும். இந்த கட்டணம் 100 ரூபாய் என்றால் அந்த நூறு ரூபாயையும் புலம்பெயர் தொழிலாளியிடம் இருந்து வசூலித்து மாநில அரசு ரயில்வே இடம் செலுத்த வேண்டும்.
எந்த மாநிலத்துக்கு ரயில் செல்கிறதோ அந்த அந்த மாநிலத்தின் அரசு அவர்கள் அங்கே வருவதற்கான அனுமதி புறப்படும் மாநில அரசுக்கு வழங்கவேண்டும். அந்த அனுமதியை கட்டணத்தோடு சேர்த்து புறப்படும் மாநிலத்தின் அதிகாரிகள் ரயில்வே இடம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஸ்லீப்பர் வகுப்பிலும் 72 படுக்கை கள் இருக்கும். இதில் சமூக இடைவெளி கடை பிடிப்பதற்காக நடு படுக்கை கள் புக் பண்ண மாட்டார்கள். எனவே ஒரு கோச்சில் 72 படுக்கை களுக் கு பதிலாக 54 பேருக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். இது மட்டும்தான் ரயில்வே கொடுக்கும் சலுகை ஆகும் அதாவது மொத்த 72 படுக்கை கட்டணத்தில் நாலில் ஒரு பாகம் அல்லது 25 சதமானம் சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த சலுகையும் சமூக இடைவெளி கடை பிடிப்பதற்காக 18 படுக்கை கள் புக் பண்ணாமல் விடுவதன் காரணமாக ஏற்படும் இழப்புதான். இதைத்தவிர இந்த 100 ரூபாய் கட்டணத்தில் எந்த சலுகையும் ஒரு புலம்பெயர் தொழிலாளிக்கு வழங்கப்படவில்லை ஒரு வண்டியில் 1600 படுக்கை கள் இருந்தாலும் 1200 படுக்கை கள் தான் புக் பண்ண படுகின்றன .இந்த 1200 படுக்கைகளுக்கு 1200 பேரிடம் 100 சதம் கட்டணத்தையும் வசூல் செய்து மாநில அரசு ரயில்வே இடம் ஒப்படைக்க வேண்டும் .மாநில அரசு 1200 பேரை மட்டும் புக் செய்து அந்த கட்டணத்தையும் அதைப்போல அவர்களின் பட்டியலையும் சென்று சேரும் மாநிலத்தின் அனுமதியையும் ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் இதில் ஒரு புலம் பெயர் தொழிலாளிக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால் 100 ரூபாய் தான் அவர் செலுத்த வேண்டும் .மாநில அரசும் அந்த நூறு ரூபாயை தான் ரயில்வேக்கு செலுத்த வேண்டும்.
இதில் எந்த சலுகையும் கிடையாது .இதில் 85 சதமானம் ரயில்வே கொடுப்பதாகவும் 15 சதமானம் தான் மாநில அரசு கொடுப்பதாகவும் கூறுவது உண்மையை மூடி மறைப்பது ஆகும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் ரயிலில் 18 படுக்கை புக் பண்ணாமல் விடுகிறோம் ரிட்டர்ன் கட்டணம் இல்லாமல் ரயில் பயணிகள் இல்லாமல் திரும்பி வருகிறது அதற்கு ரயில்வேக்கு இழப்பு ஏற்படுகிறது. என்று சொல்கிறார்கள் இந்த இழப்புக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது மாநில அரசுகளும் ஏன் ஈடு கட்ட வேண்டும் .மாநில அரசுகள் இப்படி திடீரென்று லாக் டவுன் அறிவித்தன வா? அல்லது ரயில்களை திடீரென்று ரத்து செய்தன வா? சிங்கப்பூர் அரசு 7 நாள் மக்களுக்கு அவகாசம் கொடுத்து லாக் டவுன் அறிவித்தது. இதனால் அவரவர் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கும் தயாரிப்புகள் செய்வதற்கும் வசதி ஏற்பட்டது.
அந்த நிலைமை இந்தியாவில் ஏற்படாததற்கு காரணம் யார்? மத்திய அரசு தானே !ஆகவே இந்த கட்டணம் இல்லாமல் திரும்பி வருவதற்கான செலவை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும். அதைப்போல மத்திய அரசு தான் இப்படி வேலையின்றி சம்பளமின்றி தங்க இடமின்றி பட்டினியில் வாடிய தொழிலாளர்களை அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வது அநியாயமானது அவர்கள் செய்யாத தவறுக்கு அவர்களை பலிகடா ஆக்குவது மிக மோசமான ஒன்றாகும். ரயில்வே நிர்வாகம் ஊழியர்களிடம் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்து 150 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு செலுத்தி இருக்கிறது .
இந்த பணத்தை பிரதம மந்திரி ரயில்வேக்கு திருப்பிக்கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக ரயில் ஓட்டலாம். அதை விடுத்து அவர்களை கட்டணத்தை முழுமையாக செலுத்தச் சொல்வது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது .அத்துடன் கட்டணம் 100 சதம் புலம்பெயர் தொழிலாளி கட்ட வேண்டி இருக்க 85 சதமானம் அதில் மத்திய அரசு கட்டுவதாக கூறுவது கட்டுக்கதை. மாநில அரசு 15 சதம் தான் செலுத்துகிறது என்பது கட்டுக்கதை இதற்கு எந்த ரயில்வே உத்தரவும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதுவரை போடப்பட்டுள்ள உத்தரவுகளிலும் வழிகாட்டுதல் களிலும் உள்ளது என்னவோ மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் எந்த ஊருக்கு செல்கிறார்களோ அதற்கு உரிய மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் அவர்கள் செலுத்தி தான் ஆக வேண்டும் இந்த கட்டணத்தில் 50 ரூபாய் கூடுதலாக சேர்த்து வரும் தொகை நூறு சத மானத்தையும் புலம்பெயர் தொழிலாளி தான் கட்ட வேண்டும் என்றும் அதனை மாநில அரசு வசூலித்து கட்ட வேண்டும் என்றும் உத்தரவுகள் கூறுகின்றன அப்படி இருக்க அந்த கட்டணத்தில் 85 சதமானம் மத்திய அரசு கொடுப்பதாக கூறுவது மோசடி பேச்சாகும் 15 சதம் தான் மாநில அரசு வாங்கிக் கொடுக்க வேண்டும்என்று கூறுவது படு மோசடியாகும். கட்டணம் 100 ரூபாய் என்றால் அந்த நூறு ரூபாயையும் புலம்பெயர் தொழிலாளி கொடுக்க வேண்டும் .மாநில அரசு வசூல் செய்து கொடுக்க வேண்டும்.
இந்த நூறு ரூபாயில் எந்த சலுகையும் கொடுக்கப்படாத போது இப்படி தவறாக மோசடி தனமாக கணக்கு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ரயில்வே இந்த இந்த ஊரடங்கால் பயணிகள் ரயில் ஓட்ட முடியாததால் 6,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.சரக்கு ரயில் முழுமையாக ஓடாததால் 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே இந்த இழப்பை சமாளிக்க முடியாது .எனவே இந்த கட்டணத்தில் 100 சத மானத்தையும் மத்திய அரசு நிதியமைச்சகத்தின் மூலம் ரயில்வேக்கு செலுத்தவேண்டும் .மாநில அரசுகள் இந்த கட்டணத்தை செலுத்த முடியாது அவர்கள் ஏற்கனவே மத்திய அரசு அவர்களின் பங்கு தொகைகளை கொடுக்காமலே அவர்களை மிகவும் சிரமத்தில் தள்ளியுள்ளது.
இந்த சூழ்நிலையில் அவர்களுடைய தலையில் சுமையை சுமத்துவது மத்திய அரசின் மோசடியாகும். ஏற்கனவே 67 ரயில் வண்டிகள் ஓட்ட பட்டுவிட்டன தேவையான அளவுக்கு மாநில அரசு தீர்மானிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல ஆகும் கட்டணத் தொகை முழுவதையும் மத்திய அரசு ரயில்வேக்கு கொடுக்க வேண்டும். இதில் மத்திய அரசு மோசடி அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்.
– கட்டுரையாக்கம்: ஆர்.இளங்கோவன்
உதவி தலைவர் DREU