சில நாட்களுக்கு முன்பு கூட கிள்ளியூர் மீனவர்கள் தொழிலுக்கு போய் திரும்பவில்லை அரசுகள் வழக்கம்போல் மெத்தனமாகவே இருக்கிறது
மீனவர்களின் பிரச்சனைக்கு இன்னமும் முழு தீர்வை நோக்கி மத்திய அரசும் மாநில அரசும் செல்லவில்லை இதை சுட்டிக்காட்டும் விதமாக  “மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்” என்கிற இந்த  சிறிய புத்தகம் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கொள்கை முடிவு எடுப்பதற்கு முக்கிய புத்தகமாக அமையும்.
1076கி.மீ பரப்பளவு கொண்ட தமிழக கடற்கரையில் 608 மீனவ குப்பங்களில்  வாழும் மீனவர்களின் வாழ்நிலை, அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம், கண்டுகொள்ளப்படாத முக்கிய பிரச்சணைகள் என அனைத்தையும்  வலுவாக  பேசிகிறார்  இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு.லிங்கன்…
தமிழகத்தில் 37சட்டப்பேரவை தொகுதிகள் 15 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மீனவர்கள் கனிசமாக  வாழ்கிறார்கள். ஆனாலும்  தமிழகத்தில் இதுவரை  தேர்ந்தெடுக்கப்பட்ட 3000 MLAக்களில் 26 பேரும் 600 MPக்களில் ஒரே ஒருவர் மட்டும்  தான் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். ராயபுரத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையம் செயல்படுகிறது அதோடு பாண்டிச்சேரி வரை மீனவ குப்பங்களில் ஆரம்ப சுகாதார மையங்களே கிடையாது. ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு 60ஆயிரம் கோடியும் மாநில அரசிற்கு 4ஆயிரம் கோடியும் அந்நிய செலாவணி மூலம் வருமானத்தை பெற்றுத்தரும் மீனவர்களுக்கு அரசு தரப்பில் சொல்லும்படியாக  எந்த சிறப்பு நலத்திட்டங்களும் இல்லை மத்தியில் தனி அமைச்சகமும் இல்லை.


அரசு வேலைவாய்ப்பு பெறுவதில் வெறும்  0.01% தான் மீனவர்கள் பெறுகிறார்கள். இந்த விவரங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது
வெறுமனே கடந்து  போக கூடியதல்ல. 51 ஆண்டுகளுக்கு முன்பே மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மண்டல் கமிசனால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் உட்பட சாதி சிறுபான்மையினர்க்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தனியாக தொகுதிகளை  மறுசீரமைப்பு செய்வது குறித்தும்  அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மண்டல் அறிக்கையில் பிற பகுதிகள் விவாதிக்கப்பட்ட அளவிற்கு இது விவாதிக்கப்படவில்லை.
கன்னியாகுமாரி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 35% மீனவ மக்கள்  வசிக்கிறார்கள் இதை மீனவர்களுக்கென்று தனியாக ஒதுக்கலாம். ஆனால் இது எதுவுமே இன்று பொது விவாதத்திற்கு வரவில்லை. இனியும் வராமல் இருந்தால் சமத்துவம் பேசி பயனில்லை.
அனைவரும் இப்புத்தகத்தை வாசியுங்கள்…
விவாதியுங்கள்…
-S.மோசஸ் பிரபு
புத்தகம் வேண்டுமெனில்
தொடர்புகொள்ளுங்கள்
துறை வெளியீடு
மயிலாப்பூர் 
நொச்சிக்குப்பம்
9176848877


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *