மா.லைலா தேவி மற்றும் ச.மாடசாமி எழுதிய மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ் | S. Madasamy 's Miruthuvaai Oru Neruppu Rosa Parks Bookreview - https://bookday.in/

மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ் – நூல் அறிமுகம்

மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள்: 

நூல்  : மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ்
ஆசிரியர்கள்: மா.லைலா தேவி மற்றும் ச.மாடசாமி
பக்கங்கள் : 64
விலை : 50
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com

 

நமது பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் விடாமுயற்சியையும் எடுத்துக் கூற மிக அழகாக மாடசாமி ஐயா அவர்களால் எழுதப்பட்டது இந்தப் புத்தகமாகும்.

அமெரிக்க கறுப்பின மக்களின் மகத்தான தலைவர்களில் ஒருவரான ரோஸா பார்க் அவர்களைப் பற்றிய எளிய உணர்ச்சிகரமான அறிமுகமாக இந்த சிறு புத்தகம் அமைந்துள்ளது.

வெள்ளை அகம்பாவத்தின் காலடியில் சிக்கிச்சிதைந்து கொண்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ரோஸாபார்க்கின் வாழ்வின் சில கொந்தளிப்பான பக்கங்களை அழகாய் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

இந்த நூல் மொத்தம் 12 பகுதிகளை உடையது.

 

 மா.லைலா தேவி மற்றும் ச.மாடசாமி எழுதிய மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ் | S. Madasamy 's Miruthuvaai Oru Neruppu Rosa Parks Bookreview - https://bookday.in/

எனக்குப்பிடித்த பகுதி “வெற்றியை நோக்கி” என்னும் பகுதியாகும்.

எனக்கு வயது 42 தான் உடலாலும் மனதாலும் நான் களைத்துப் போகவில்லை விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்துத்தான் நான் கலைத்துப் போனேன் என்று ரோஸாபார்க் கூறிய வார்த்தை வரலாற்றையேத்திருப்பி போட்டது.

வெற்றி எப்போதும் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதில்லை.

வெற்றியை அடைவதும் எளிதல்ல நியாயமான வெற்றிகள் எப்போதும் தடைகளைச் சந்திக்கின்றன.

தனது இடைவிடாத போராட்ட மூலம் பஸ்களில் பாகுபாடு தவறானது என்று நீதிமன்ற தீர்ப்பு பெற்றார் ரோஸாபார்க்.

கறுப்பின  கொண்டாடிய தீர்ப்பு பஸ்ஸில் கறுப்பர்களும் அமர்ந்து செல்லலாம் என்பதே ஆகும்.

ரோசா தனது வாழ்க்கை வரலாற்றை 79 வயதில் மை ஸ்டோரி (My Story) என்ற தலைப்பில் எழுதினார்.

அமைதி ,ஒற்றுமை ,அன்பு கொண்டு மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் காலம் குறித்த கனவோடும் ஆசையோடும் ரோஸா தன் சுயசரிதையை முடிக்கிறார்.

உட்கார்ந்திருப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்ச்சி ஆனால் ரோஸாபார்க் இந்த சிறு நிகழ்ச்சியை சரித்திரம் ஆக்கினார்.

92 வயதில் இறந்தார் முதலில் வெள்ளையர்களால் புறக்கணிக்கப்பட்ட ரோசா இறந்த பிறகு ஜனாதிபதிகளுக்கு அளிக்கக்கூடிய இறுதி மரியாதையைஅமெரிக்க தேசம் வழங்கியது*எழுச்சிமிக்க இருபதாம் நூற்றாண்டு பெண் என்று ரோசாவை அமெரிக்க அதிபர் புஷ் புகழ்ந்தார்.

ரோசா பயணம் செய்த பேருந்து இன்று வரை டெட்ராய்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 மா.லைலா தேவி மற்றும் ச.மாடசாமி எழுதிய மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ் | S. Madasamy 's Miruthuvaai Oru Neruppu Rosa Parks Bookreview - https://bookday.in/

சிந்தனை தளம் ,செயல்பாட்டு தளம் ஆகிய இரு தளங்களிலும் விவாதித்து கற்க வேண்டிய வாழ்க்கையாக ரோஸாவின் வாழ்க்கை இருக்கிறது.

கறுப்பின  பெண்ணாக பிறந்தது தவறில்லை என்று தனது உரிமைக்காகவும் உணர்வுக்காகவும் போராடி தனது உரிமைகளை பெற்றது அனைவருக்கும் ஒரு படிப்பினை ஆகும்.

போராடினால் உண்டு பொற்காலம் போராட்டமே விடியலுக்கு வழி என்பதை ரோஸாவின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது ஆகும்.

நமது மாணவிகளுக்கும் நமது பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கூற வேண்டிய ஒரு வரலாறு ஆகும்.

 

 நூல் அறிமுகம் எழுதியவர்:

வ.பெரியசாமி

புத்தக ஆர்வலன்
தன்னம்பிக்கை பேச்சாளர்&போட்டித்தேர்வு பயிற்சியாளர்,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 1 Comment

1 Comment

  1. ரோசா பார்க் வாழ்க்கை தன்னம்பிக்கையை தூண்டும் நம்பிக்கை
    மட்டுமல்ல அவர் வாழ்க்கையின் போராட்டத்தின் ஆதாரம் .அறிமுகம் நல்லாவே இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *