நூல் அறிமுகம்: *மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ்* – நிகழ் அய்க்கண்நூல்: மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ்
ஆசிரியர்: ச மாடசாமி , மா. லைலா தேவி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 50
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/miruthuvai-oru-nerupu/

1619 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அடிமைமுறை உருவாகி, 1863 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது., இன்றைய அளவில், இனம், கல்வி, போக்குவரத்து, சுகாதாரவசதி குடிநீர், வீடு, வாக்குரிமை வேலைவாய்ப்பு உள்ளிட்டவகளில் சட்டங்களின் மூலமாகவும், போராட்டங்களின் மூலமாகவும் மாற்றங்கள் படிப்படியாக வந்திருப்பினும், அமெரிக்கர்களுக்கும் – ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் இடையே பாகுபாடுகள் எதோ ஒருவகையில் தொடர்ந்து நீடித்துவரவே செய்கின்றன.
1955 இல் அமெரிக்க நாட்டையே உலுக்கிய பேருந்து இருக்கைக்கான போராட்டத்தின் விதையாக திகழ்ந்து, அப்பாகுபாட்டினைக் களையவும் செய்தவர் ரோஸாபார்க்ஸ். அவரைப்பற்றியதுதான் இச் சிறு நூல்ரோ ஸாபார்க்ஸ் 04.02.1913 அமெரிக்காவின் ’அலபாமா’ மாநிலத்திலுள்ள ’தஸ்தகி’ எனும் ஊரில் பிறக்கிறார். அம்மா பள்ளி ஆசிரியை. அப்பா தச்சுவேலையும், கட்டிட வேலையும் தெரிந்தவர். அப்பாவும் அம்மாவும் பணி நிமித்தமாக வெவ்வேறு இடத்தில் இருந்து பணிபுரிவதால், ரோஸா பைன்லெவலிலுள்ள தனது தாத்தா-பாட்டி வீட்டில் வளர்கிறார். இவரது தாத்தாவின் தந்தை கருப்பினத்தவர் இல்லை. அவர் அயர்லாந்தைச்சேர்ந்த ஒரு வெள்ளையர். பிழைப்புத்தேடி அடிமையாக அமெரிக்கா வந்தவராவார். ஆறு வயதில் ’பைன்லெவலில்’ உள்ள பள்ளியில் சேருகிறார் ரோஸா. அப்போது கருப்பினக் குழந்தைகளுக்கும், வெள்ளையினக் குழந்தைகளுக்கும் படிப்பதற்கு தனித்தனியே பள்ளிகள் இருந்தன. வெள்ளையர் பள்ளிகள் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தன. மேலும், படிக்க – எழுத நாற்காலி, மேசைகள் இருந்தன. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருந்தார். பள்ளிக்கு அழைத்துச்செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், கருப்பினத்தவ குழந்தைகள் நன்கு பராமரிக்கப்படாத, தரையில் அமர்ந்து படிக்கவும் எழுதவும் செய்தனர். நடந்துதான் பள்ளிக்கு வரவேண்டும். அனைத்து வகுப்புக்களுக்கும் ஓராசிரியரே கற்பித்துவந்தார். வெள்ளையர் பள்ளிகள் ஆண்டுக்கு பத்து மாதங்கள் முழுமையாக நடந்தது. கருப்பினக் குழந்தைகளின் பள்ளிகளோ ஐந்து மாதங்கள் மட்டுமே நடந்தது. மற்ற நாட்களில் அக்குழந்தைகள் வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் செய்து வந்தனர். ரோஸா பள்ளிக்குச்சென்ற பிறகுதான் கருப்பின வெள்ளையின நிறவேற்றுமையையும், நிறத் துவேஷங்களையும் கண்டுணர்கிறார்.

ரோஸா ’பைன்லெவலில்’ தான் படித்துவந்த கருப்பினக் குழந்தைகளின் ஓராசிரியர் பள்ளியிலிருந்து மாறி அருகிலுள்ள ’மாண்ட்காமரி’ நகரத்திலுள்ள ஒரு கருப்பின பெண்கள் பயிலும் பள்ளியில் சேருகிறார்.இங்குள்ள பள்ளிகளில் குழந்தைகள் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் படித்திட முடியும். ரோஸாவின் அம்மாவுக்கு ’பைன்லெவலி’லிருந்து எட்டு மைல் தொலைவுள்ள ’ஸ்பிரிங் ஹில்’ எனும் ஊரில் ஆசிரியப்பணி கிடைக்கிறது. பள்ளி நாட்களில் அம்மா அங்கேயே தங்கி விடுவார். ரோஸாவும் அவளது தம்பியும் பைன்லெவலில் இருந்து எட்டு மைல் தொலைவுள்ள ’மாண்ட்காமரி’ பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று வீடு திரும்பவேண்டும். பள்ளிச்சேர்க்கையின் போது அம்மா கல்விக்கட்டணம் செலுத்தினார். அதன் பிறகு கட்டணம் செலுத்திட முடியவில்லை. நிர்வாகத்தின் கல்வி உதவித்தொகையைப் பெற்றே ரோஸா படிப்பினைத் தொடர்ந்து வந்தார். ரோஸா ‘மிஸ் ஒயிட் பள்ளி’ எனும் தொழிற்பள்ளியில்தான் படித்துவந்தார். அப்பள்ளியானது.

கருப்பினக்குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் எனும் நோக்கில் வெள்ளையர்களால் நடத்தப்பட்டுவருவதாகும். இதன் காரணமாக, வெள்ளைச்சமூகமானது, அப்பள்ளி நிர்வாகிகள் முதல் ஆசிரியர்கள்வரை சமூக நீக்கம் செய்து வைத்ததோடு அல்லாமல் வெள்ளையின வழிபாட்டுத் தலத்திற்குள்ளும் நுழைய தடை விதிக்கிறது. கருப்பினக்குழந்தைகளுக்கு ‘சுயமரியாதையை கற்றுத்தந்த : கருப்பினத்தவர் தாழ்வானவர்கள் இல்லை’ என உணர்த்திய அப்பள்ளியானது. வெள்ளையின தீவிரவாதிகளால் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நிர்வாகத்தினர் மனந்தளராது அப்பள்ளியை நடத்தி வருகின்றனர். ரோஸா, பள்ளியில் படிக்குபோது, மாண்ட்கமாரி வீதிகளில் குடிநீர் குழாய்களில்கூட வெள்ளையின-கருப்பினத்தவர்களுக்கென தனித்தனி குழாய்கள் இருப்பதை காண்கிறார். அதேபோல் வெள்ளையினச்சிறுவர்கள் வீண் வம்பிற்கிழுப்பதையும் பார்க்க நேரிடுகிறது. வெள்ளையின ஆதிக்க எதிர்ப்பு ரோஸாவிடம் இயல்பாக உருவாவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்திருந்தன.

Page 247 – Bookday

1932 ல் ரேமண்ட்பார்க்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவரும் ரோஸாவின் பாட்டனாரைப்போல் வெள்ளை நிறத்திலிருந்தார். பார்க்ஸ் அமெரிக்காவில் கருப்பினதவர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட என்.எ.எ.சி.பி எனும் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டவராவார். .நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிவந்த அவ்வமைப்பில் ரோஸாவும் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த நாளில், கருப்பு இனத்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை எளிதில் கிடைத்துவிடவில்லை. 1940-ஆம் ஆண்டு கணக்குப்படி, மாண்ட்கமாரியில் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தவர்கள் வெறும் 32 பேர்தான். கருப்பினத்தவர்கள் வாக்களிக்கும் உரிமை பெறுவதற்கு பல விதிகள் இருந்தன.குறிப்பாக,

• செல்வாக்குள்ள வெள்ளையர் ஒருவர் பரிந்துரைக்கவேண்டும்.
• சொத்து இருக்க வேண்டும்
• எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு எழுத வேண்டும்.
• அமெரிக்கர்களின் அரசியல் சட்டத்தை புரிந்திருக்கவேண்டும்.

ஆனால்,21 வயதான அனைத்து வெள்ளையருக்கும் வாக்களிக்கும் உரிமை எளிதில் கிடைத்தது. வாக்குரிமை பெறுவதில் ரோஸா உறுதியாக இருந்தார்.அதற்கான முயற்சியில் 1943-ஆம் ஆண்டு ஈடுபட்டார். முதலில் நிர்வாகத்தினர் இழுத்தடித்து பின்னர் எழுத்துத்தேர்வு வைத்தனர். அதன் பிறகு இருமுறை தேர்வெழுதியும் வாக்குரிமைக்கான அனுமதிகிடைக்கவில்லை. மூன்றாம் முறையே, அதாவது இரண்டு வருடகால போராட்டத்திற்குப்பிறகே வாக்குரிமை கிடைத்தது.
மாண்ட்கமாரி பேருந்தில் 36 இருக்கைகள் இருக்கும்.அதில் முன் வரிசையில் உள்ள பத்து இருக்கைகள் வெள்ளையர்களுக்கு உரியவை. இது எழுதப்பட்ட சட்டம். கடைசி பத்து இருக்கைகள் கருப்பு இனத்தவர்களுக்குரியது. இது எழுதப்படாத சட்டம். மீதமுள்ள 26 இருக்கைகளிலும் வெள்ளையர்களே அமருவர். இதில் வெள்ளையர்கள் யாரும் பேருந்தில் நின்றுகொண்டு பயணம் செய்தால் ,கருப்பினத்தவர்கள் தனது இடத்தை காலி செய்து வெள்ளையருக்கு கொடுக்கவேண்டும்.பேருந்தில் பயணச்சீட்டு பெறுவதிலும் கூட பாகுபாடுதான். வெள்ளையர் பேருந்தின் முன்புறம் ஓட்டுநரிடம் பயணசீட்டு பெற்றுக்கொண்டு முன்பக்கமே அமர்ந்துவிடுவர். ஆனால், கருப்பினத்தவர்களோ முன்பக்கம் போய் பயணச்சீடைப் பெற்றுக்கொண்டு, பேருந்தின் முன்பக்க படிக்கட்டிலிருந்து இறங்கி, பின்பக்கமுள்ள படிக்கட்டு வழியேதான் பேருந்தில் ஏறவேண்டும். பேருந்து ஓட்டுநர்கள் கருப்பினத்தவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வர். அவர்களிடம் துப்பாக்கிகளும் இருக்கும்.ரோஸாபார்க்ஸ் இரண்டாவது முறையாக வாக்களிக்க செல்வதற்கு, பேருந்தில் ஏறி ஓட்டுநரிடம் பயணசீட்டைப்பெற்றுக்கொண்டு, இறங்கி பின்பக்கம் வழியாக ஏறாமல் ,அப்படியே முன்பக்கம் நுழைய முயல்கிறார். ஓட்டுநர் கோபங்கொண்டு கத்துவதோடு மட்டுமல்லாமல், ரோஸாவின் மேல் கோட்டினைப்பற்றி இழுக்கிறார். ஓட்டுநரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு போகும்போது, வேண்டுமென்றே தனது பர்ஸை கீழே நழுவ விட்டு, பின்னர் வெள்ளையர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து அப்பர்ஸை எடுக்கிறார். இதனைப்பார்த்த ஓட்டுநர் கொந்தளித்துப்போகிறார். 1955 டிசம்பர் ஒன்றாம் தேதி, மாலை ‘கோர்ட் ஸ்கொயர்’ என்ற இடத்திலிருந்து பேருந்தில் ஏறுகிறார் ரோஸா பார்க்ஸ். பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பேருந்திலிருந்து இறக்கிவிட்ட அதே ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவதை கவனிக்கிறார்…பேருந்தின் மையப்பகுதியில் காலி இருக்கை ஒன்று இருந்தது. அங்குபோய் அமருகிறார் ரோஸாபார்க்ஸ். அடுத்து, எம்பயர் பேருந்து நிறுத்தம் வந்தது. வெள்ளையர் பலர் ஏறி இருக்கையில் அமர்ந்தனர். ஒரே வெள்ளையர் மட்டும் இடமின்றி நின்று கொண்டிருந்தார். ஒட்டுநர் இரு முறை சத்தம் போடுகிறார். ரோஸா பார்க்ஸ் எழவில்லை.’உன்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்போகிறேன்’ என்கிறார் ஓட்டுநர். ’செய்து கொள்‘ என்கிறார் ரோஸா பார்க்ஸ். பேருந்து நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் காவலர் வந்து,. அவரை கைது செய்து பிறகு சிறையில் அடைக்கின்றனர். ரோஸாபார்க்ஸ் கைதான செய்தி கருப்பினச்சமூகத்தின்ரிடையே வேகமாகப்பரவுகிறது. பிறகு, ரோஸாவின் கணவர் பார்க்ஸ் மற்றும் என்.எ.எ.சி.பி அமைப்பினர் சிலரும் வந்து அவரை மீட்கின்றனர். பின்னர் அமைப்பினருடன் ஆலோசனை நடக்கிறது கருப்பினத்தவர்களின் உரிமையினை நிலைநாட்ட, .நீதிமன்றம் செல்வதற்கு இச்சம்பவம் தகுதியானது என்பதால், வழக்கு தொடுக்கப்படுகிறது. பேருந்து புறக்கணிப்பு போராட்டம்’ தொடங்குகிறது.கருப்பினத்தவர்கள் யாரும் பேருந்தில் ஏறவில்லை. பெரும்பாலானோர் நடந்தனர். சிலர் வாடகைக்காரில் பயணஞ்செய்தனர். பேருந்துகள் காலியாகவே சென்றன.

1955 டிசம்பர் 5 ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்திற்கு வெளியே கருப்பினத்தவர் ஏராளமானோர் கூடுகின்றனர். ‘பின்னால் காலியாக இடம் இருந்தும் ரோஸா பிடிவாதமாக பேருந்தின் மத்தியப்பகுதியில் அமர்ந்திருந்தார்’ என நீதிமன்றத்தில் வெள்ளையர் ஒருவர் பொய்சாட்சியம் அளிக்கிறார். பொய்சாட்சியை ஆதாரமாகக்கொண்டு நீதிமன்றம் ரோஸாவுக்கு 14 டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கிறது. அன்று மாலை, கிறித்தவ தேவாலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த வழக்குக்கு எதிராக போராடவும் மக்களை அணிதிரட்டவும் எம்.ஐ.எ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக கிறித்துவ மதபோதகராக இருந்த 26 வயது இளைஞர் மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர் ) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

• பேருந்தில் கருப்பினத்தவர் மரியாதையாக நடத்தப்படவேண்டும்.
• முதலில் வருபவருக்கே முன்னுரிமை. முதலில் வந்து பேருந்தின் பின் பகுதியில் இடம் பிடித்தவர்களை எழச்சொல்லக்கூடாது.
• கருப்பினத்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒட்டுநர்களாக அவர்களையே நியமிக்கவேண்டும். என்கிற கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதென முடிவெடுக்கப்படுகிறது. போராட்டமும் தொடர்கிறது.

பிரெட் கிரே எனும் கருப்பின வழக்கறிஞர் ’பேருந்தில் பாகுபாடானது அமெரிக்க அரசியல் அமைப்புக்கு விரோதமானது’ என ஐந்து பெண்கள் சார்பில் வழக்கு தொடுக்கிறார். முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். பிறகு அரும்பாடுபட்டு உச்சநீதி மன்றத்திற்கு கொண்டு செல்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 13 ந்தேதி ’பேருந்துகளில் பாகுபாடு தவறானது அது அரசியல் அமைப்புக்கு எதிரானது என தீர்ப்பு வழங்கியது’. இதனையொட்டி, ஒராண்டுக்கும் மேலாக நடந்து வந்த பேருந்து புறக்கணிப்பு போராட்டமும் முடிவுக்கு வந்தது. பேருந்து புறக்கணிப்பு போராட்ட வெற்றிக்குப்பிறகு, ரோஸாபார்க்ஸின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. தினசரி மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அச்சமயத்தில் இவரின் தம்பி, டெட்ராய்டு நகரில் வசித்துவந்தார். அவர் அழைக்கவே அந்நகருக்கு 1957-ல் குடியேறினார்.

அதன் பிறகான காலகட்டங்களில் வெள்ளையர்-கருப்பினத்தவர்களுக்கிடையேயான பகைமை ஓயவில்லை அன்பையும் உரிமைகளையும் இரு கண்களாகக்கொண்டிருந்த மத போதகரான. மார்ட்டீன் லூதர் கிங், குடியரசுத்தலைவர் கென்னடி, கருப்பினப்போராளி மால்கம் எக்ஸ் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். இதற்கிடையே ரோஸா பார்க்ஸும் தன்னுடைய உறவுகளை இழக்கிறார். 1990 களில் ரோஸாபார்க்ஸ் அமெரிக்காவைத்திரும்பிப் பார்க்கும் போது, எவ்வளவோ மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. இருப்பினும் இவர்களுக்கிடையேயான பகைமை முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்கிறார்.