காணாமல் போன நாடுகளும், அதன் தபால் தலைகளும் – அருண் குமார் நரசிம்மன்

காணாமல் போன நாடுகளும், அதன் தபால் தலைகளும் – அருண் குமார் நரசிம்மன்



இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சில மாகாணங்கள் தனி நாடுகளாக இருந்து அவர்கள் தங்கள் நாட்டின் பயன்பாட்டிற்கு தபால்தலைகளை வெளியிட்டு அஞ்சல் சேவையை செய்துவந்துள்ளன. ஆனால் பிற்காலத்தில் ஏதோ சில காரணங்களால் அந்த மாகாணம் அல்லது நாடு மற்றொரு நாட்டுடன் சேர்ந்திருக்கும். இப்படிப்பட்ட மாகாணங்களையும் நாடுகளையும் “இல்லாத நாடு” என்று தபால் தலை சேகரிப்பவர்கள் கூறுவார்கள். அந்த வரிசையில் பஹவல்பூர் தன் தபால் தலையை அச்சிட்டு அஞ்சல் சேவைக்கு பயன்படுத்தி வந்தது. இந்த நாட்டின் அஞ்சல் சேவை பற்றியும் அந்த மாகாணத்தின் சரித்திரம் பற்றியும் பார்ப்போம்.

பஹவல்பூர் சுதந்திரத்திற்கு முன் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு மன்னார் ஆளும் மாகாணம் பஞ்சாப் மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இந்த மாகாணம் நவாப் முகமது பஹவால் கான் அப்பாஸி என்ற மன்னரால் 1802யில் ஆப்கானிஸ்தானின் கடைசி சாம்ராஜியமான துர்ரானி சாம்ராஜியம் பிரியத்துவங்கியபோது உருவாக்கப்பட்டது.

Calcutta, Bombay & Simla : Bourne & Shepherd (active 1864-1900s) - Muhammad  Bahawal Khan V, Nawab of Bahawalpur (1883-1907)
Muhammad Bahawal Khan V, Nawab of Bahawalpur (1883-1907)

நவாப் முகமது பஹவால் கான் அப்பாஸிக்கு பின் வந்த அவரின் வாரிசான நவாப் முகமது பஹவால் கான் அப்பாஸி III பிப்ரவரி 22, 1833யில் பிரித்தானியர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தத்திதின் மூலம் நவாப் இந்த மாகாணத்தின் உள் விவகாரங்களை கவனிப்பார் பிரித்தானியர்கள் இந்த மாகாணத்தின் வெளி விவகாரங்களை கவனித்துக்கொள்வார்கள். பஹவல்பூர் பிரித்தானியர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும் அந்த மாகாணம் ஆங்கிலேயர்களின் உடைமையாக மாறாமல் இந்தியாவின் ஒரு நிலப்பிரபுத்துவ மாகாணமாவே இருந்துவந்தது.

1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது நிலப்பிரபுத்துவ மாகாண மன்னர்கள் அவர்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தனோ சேர வாய்ப்பளிக்கப்பட்டது. பஹவல்பூரை இந்தியாவுடன் சேர இந்திய அரசு பல சலுகைகளை அந்த மாகாணத்தின் அரசர் நவாப் சாதேக் முகமது கான் Vக்கு அறிவித்தது ஆனால் அந்த மன்னரும் அந்த மாகாணமும் இஸ்லாமியத்தை பின்பற்றிவந்ததாலும் பாகிஸ்தானின் முதல் தலைவரான காயிட்-இ-ஆசாமுடன் நவாப் கொண்டிருந்த நெருங்கிய நட்பு கொண்டிருந்ததாலும் பஹவல்பூரை பாகிஸ்தானில் ஒரு மாநிலமாக சேர்த்தார். இதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 5, 1947யில் செய்யப்பட்டது இதன் மூலம் பஹவல்பூர் பாகிஸ்தானில் இணைந்த முதல் மாநிலமாக ஆனது.

நவாப் சாதேக் முகமது கான் 5 பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு மிகவும் உதவியாகவும் தாராளமாகவும் இருந்தார். அவர் பஹவல்பூரின் கருவூலத்திலிருந்து 7 கோடி ரூபாயும் அனைத்து அரசு துறை ஊழியரைகளின் ஒரு மாத சம்பளத்தையும் பாகிஸ்தானிடம் வழங்கினார். அதுமட்டுமல்லாது தன்னுடைய தனிப்பட்ட சொத்திலிருந்து பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கும், கிங் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் லாகூரில் உள்ள அட்ச்சன் கல்லூரியின் மசூதிக்கு இடங்களை வழங்கினார்.

1955 ஆம் ஆண்டில், நவாப் சாதிக் முஹம்மது மேற்கு பாகிஸ்தானின் மாகாணத்தில் பஹவல்பூரை சேர்ந்தார், இதனால் நவாபின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Bahawalpur Stamps Id. - Stamp Community Forum

பஹவல்பூர் தபால் தலை

பஹவல்பூர் 1945 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் தபால்தலைகளைப் பயன்படுத்தியது, ஜனவரி 1, 1945 அன்று முதல் தன் அதிகாரப்பூர்வ தபால் தலைகளை வெளியிடத் தொடங்கியது. அவர்களின் முதல் தபால் தலைகள் உருது மொழியில் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன. பஹவல்பூர் முதன் முதலில் 6 தபால் தலைகளை வெளியிட்டது, அதில் அந்த மாகாணத்தின் அழகான சித்திர காட்சிகள் அச்சிடப்பட்டு அவற்றின் மேல் “சர்காரி” என்று பொறிக்கப்பட்டிருந்ததின் மூலம் அது அதிகாரபூர்வமான தபால் தலை என்ற அந்தஸ்தை பெற்றது.

பின்னர் 1945 ஆம் ஆண்டில், வெளியிடப்பட்ட மூன்று தபால்தலை வடிவமைப்புகள் கருப்பு நிறத்திலும் கருப்பு நிறத்தில் “சர்க்காரி” என்று மேலெழுதலும் பொறிக்கப்பட்டு இருந்தன. இந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் பஹவல்பூர் 16 அதிகாரபூர்வ தபால்தலைகளை 1945 மற்றும் 1946 ஆண்டுகளில் வெளியிட்டது. இது மட்டுமல்லாது இந்தியாவின் ஜார்ஜ் மன்னர் முகம் பொறிக்கப்பட்ட 16 தபால்தலைகளில் பஹவல்பூர் என்று பொறித்து அதில் நட்சத்திரமும் பிறையும் அச்சிடப்பட்டு பயன்படுத்துவந்ததாக கூறப்பட்டாலும் அதன் உண்மை தன்மை குறித்து நிபுணர்களிடையே சர்ச்சையாக இருந்துவந்துள்ளது.

பாகவல்பூர் பாக்கிஸ்தானில் சேர முடிவு செய்த பின்னர், அது டிசம்பர் 1,1947ஆம் தேதி முதல் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தபால்தலைகளை வெளியிடத் தொடங்கியது.பாகவல்பூர் மன்னர் தபால்தலை சேகரிப்பவராக இருந்ததால் அனைத்து பஹவல்பூர் தபால்தலைகளும் உயர் தரமானவையாகவும் நேர்த்தியாகவும் பொறிக்கப்பட்டு மிகவும் அழகாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தபால்தலைகளை வடிவமைப்பிலும் நவாப் மன்னர் உதவினார் என்று அறியப்படுகிறது.

பஹவல்பூர் தபால்தலைகள் அந்த மாகாணத்திற்கு உள்ளே மட்டுமே அஞ்சல் அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட முடிந்தது.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *