கவிஞர் ச. ஆனந்த குமாரைப் பற்றி சொல்லி தெரிய வேண்டிய தேவை இல்லை, சமகாலக் கவிஞர்களில் மிக சிறந்த கவிஞர்களின் ஒருவர் தற்போது சிறுகதைகளையும் அதிகமாக எழுதி வருகிறார் அவரது இரண்டாவதுக் கவிதை தொகுப்பான “மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்” வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது திரு ச. ஆனந்தகுமார் அவர்களுடைய கவிதைப் பொருத்தவரையிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொல்லாடல்களை கனக்கச்சிதமாக கதம்பமாகக் கோர்ப்பதில் கைதேர்ந்தவர், நாம் பார்த்தவற்றை நமக்கு ஏற்படுகிறதை நம் மனத்திரையில் ஓடுவதை அப்படியே தனதுச் சொல்லாடலில் கவிதையாக்குவதில் வல்லவர்.
இக்கவிதைத் தொகுப்பிலும் சரியாகக் குறிப் பார்த்து கல்லால் புறாக்களை எறியும் சிறுவர்களைக் குறித்து எழுதிய முதல் கவிதையே மாபெரும் உழைப்புக்கு உள்ளானதும் ஒருநாள் இரை வைக்கக் கற்றுக் கொடுத்தேன் புறாக்கள் பயமின்றி பறந்தது என்றக் கவிதை, தனது கவிதைத் தொகுப்புக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார் என்றே சொல்லலாம் தொகுப்பு முழுவதும் படித்து முடித்தாலும் எந்த கவிதையை குறிப்பிட்டுக் காட்டுவது அல்லது எந்தக் கவிதையைக் குறிப்பிடாமல் விடுவது என்று இருக்கொள்ளி பாம்பாய் நான் இருக்கிறேன் அத்தனைக் கவிதைகளும் அவ்வளவு அருமையாக தான் அமைந்திருக்கிறது பக்கங்களைப் புரட்டும் போது சாதாரணமாகத் தெரிந்தாலும் கவித்துவமும், கருத்தாழமும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
கவிதைத் தொகுப்பைக் குறித்து ஓரிரு வார்த்தைகளில் கூறலாம் என்று சொன்னால் சாமானிய மக்கள் படும் வேதனையை நடுத்தர மக்கள் சந்திக்கும் வாழ்க்கையை பணிச்சூழல்களில் ஏற்படுகிற அனுபவங்களை சமூகத்தில் நம்மால் செயல்பட முடியாத இயலாமையை இன்றைய அரசியல்வாதிகளினுடைய செயல்பாடுகளை, குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத ஏக்கங்களை இந்த கவிதைகள் நமக்கு உணர்த்துகிறது.
இந்த கவிதைத் தொகுப்பை வாசிப்பது விரும்பியத் திண்பண்டத்தை உணபது போன்ற மகிழ்ச்சியை நமக்குக் கொடுக்கிறது அல்லது ஆழ்கடல் சென்று தியானிக்கும் அனுபவத்தை நமக்குள் கொண்டு வருகிறது சத்தமே இல்லாத காட்டுக்குள் அறிவு விளக்கை நமக்கு ஏற்றி வைக்கிறது.
“பணம் கொட்டி தனி வகுப்பு வைத்தும்
கண்டிப்பு காட்டியும்
தேர்வில் தவறிய மகன்ப் போல் “
“தேநீர் தந்த சிறுவனிடம்
சர்க்கரைக் குறைவென தலையில்
குட்டி கூட்டம் பலபாய்ச் சிரிக்க
வெளிவரும் கண்ணீரை
பல் கடித்து மறைக்கும் சிறுவன் “
“வீட்டிற்குள் தண்ணீர்
நுழைந்து விடுமென்று
வீட்டுக்குள் நிறுத்திய இருசக்கர வாகனம் சிறிய வீட்டை
குட்டியாக மாற்றியிருந்தது “
“இயக்குனராகி சாதிப்பதாய்
எவருக்கேனும் எடுபுடி வேலை
செய்து கொண்டிருக்கலாம் “
“ஆவென ஓடிச் சென்று
ஆசிரியருக்கு முத்தகங்கள்
பொழிந்ததில் புரிந்தது
எல்லா நிறை தேவதைகளும்
அன்பு பொதுமறையென்று “
கவிதை முத்துக்களை கையில் எடுத்து காண்பித்திருக்கிறேன், வற்றாத ஜீவராதியாக இத்தொகுப்பு ஒரு கவிதை கடலாக தான் தெரிகிறது, கவிஞர்கள் மட்டுமல்ல வாசர்களும் கண்டிப்பாக வாய்ப்புக் கொடுத்து வாசிக்க வேண்டியது தான் “மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்”
கவிஞரின் இசை சத்தம் இன்னும் கேட்கட்டும் வாழ்த்துக்கள் திரு ச. ஆனந்தக்குமார் இன்னும் கவிதைகளை எங்கள் காதுக்குக் கொண்டு வாருங்கள்.
நூலின் தகவல்கள்
நூலின் பெயர் : “மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்”
நூலாசிரியர் : திரு ச. ஆனந்த குமார்
வெளியீடு : வேரல் புக்ஸ்
பதிப்பு : 2024
நூலின் விலை : ₹ 130
நூல் வாங்க : 9176658922.
வேரல் பதிப்பகம் : 9578764322
எழுதியவர்
இரா. மதிராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.