MJ.பிரபாகர் தொகுத்த “மார்க்சிய ஆசான் தோழர் SAP” புத்தகம் | MJ. Prabakar's Marxia Aasan Thozhar SAP Tamil Book Review | கு.செந்தமிழ்ச்செல்வன் | www.bookday.in

MJ.பிரபாகர் தொகுத்த “மார்க்சிய ஆசான் தோழர் SAP” – நூல் அறிமுகம்

மார்க்சிய ஆசான் தோழர் SAP

தோழர் எஸ்.ஏ பெருமாள் அவர்களை பல ஆண்டுகளாக அறிந்தவன் நான்.

அவருடைய வகுப்புகளில் தத்துவார்த்த கருத்துக்களையும் எளிமையான வடிவில் அனைவரையும்
புரிய வைக்கும் பாங்கில் பிரமிப்பானவை
என்பதை அறிந்தவன் நான்.

ஆனால் , மார்க்சிய ஆசான் தோழர் எஸ்ஏபி புத்தகத்தை படித்த பிறகுதான்
நான் பார்த்தது பிரம்மாண்டத்தின் ஒரு சிறு பகுதி தான் என்பதை உணர்ந்தேன்.

எஸ்.ஏ.பி என்கின்ற
ஆற்றைக் கடந்த பல ஆளுமைகளின் அனுபவங்களை தொகுத்துக் கொடுத்திருப்பது மிகவும் அற்புதம்.
ஓரே ஆற்றில் பல பேர் பல ஊர்களின் பருகினாலும் அதன் சுவை என்னவோ ஒன்றேதான்.

500 பக்க புத்தகத்தில் பக்கங்களில் அவரின் ஆளுமைகளை அவரின் உச்சம் தொட்ட தலைமைப் பண்புகளை வரும் தலைமுறை எடுத்துக் கொள்ள வேண்டிய ஏராளமான திறமைகளை பல ஆளுமைகளின் வாயிலாகவே கருத்துக்களை பெற்று தொகுத்து இருப்பது மிக அற்புதமான வடிவம்.

இந்தக் கருத்துக்களை கூறும் ஆளுமைகளைப் பற்றிய புரிதல்களையும் பெறுவது என்பது கூடுதல் அனுகூலம் எனலாம்.

துவக்கம், தொடர்ச்சி & இறுதி என்ற பழக்கப்பட்டு போன வழக்கத்தில் இருந்து எந்தப் பகுதியை எந்த நேரத்திலும் வாசிக்கலாம் என்கின்ற வடிவமைப்பு பாராட்டுக்குரியது.

ஆனாலும் ,புத்தகத்தின் அனைத்து பகுதியையும் முழுமையாக படிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஒவ்வொருவருடைய கருத்துக்கு இறுதியில் நம்மை நகர்த்திக் கொண்டே இருக்கிறது.

ஐந்து பக்கத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறை சுருக்கமாக கூறிவிட்டு அவரது முழுமையான வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள 500 பக்கம் வரை வாசகரை ஆர்வத்தோடு நகர்த்தி இருப்பது என்பது இனிமையான அனுபவம்.

மார்க்சிய தத்துவத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு உன்னத தலைவன் எத்தகைய குணாம்சங்களோடு
வாழ முடியும் ,
வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி இருப்பது உணர்ச்சிகரமானது.

முனத்தி ஏராக அடுத்த தலைமுனையினருக்கு தடம் அமைத்து இருப்பது மக்களுடன் செயலாற்றும் ஒவ்வொரு தொண்டர்களுக்குமான செய்தி.

இன்றைய அரசியல் தளத்தில்
தலைமை பொறுப்பிற்கு மிக அத்தியாவசியமாக விளங்குவது
தத்துவார்த்த பின்னணியுடன்
மக்களுடன் இணைந்து செயலாற்றும் மனிதநேயமிக்க பலதரப்பட்ட தலைமைப் பண்புகளே.

அதனை தோழர் எஸ் ஏ பி அவர்கள் தனது ஒவ்வொரு பொறுப்பிலும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இந்தப் புத்தகத்தை யார் வாசிக்க வேண்டும்?

நிச்சயமாக தலைவர்கள் மட்டுமல்லாமல் தலைவராக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டும் .

இது பல பக்கங்களைக் கொண்டது என்பது ஒரு சிரத்தையே இல்லை.
பல நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது நான் நன்றியும் பாராட்டும் சொல்ல வேண்டிய முதல் நபராக தோழர் எம் ஜே பிரபாகர் இருக்கிறார்.

இந்த புத்தகத்தை நான் பெற வேண்டி மிக முனைப்பு காட்டி என்னிடம் சேர்ப்பித்தார்.

அறிவியல் இயக்க அலுவலக பணியில் இருந்து முழுமையாக தன்னை எம் ஜே பிரபாகர் விடுவித்துக் கொண்ட போது மிகவும் வருத்தம் அடைந்த நபர்களில் நானும் ஒருவர்.

ஆனால் ,
அவர் இன்று செய்திருக்கக்கூடிய
பிரமிப்பு மிக்க இந்த செயல்களை காணும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

தோழர் SAP அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்து இந்த புத்தகம் வெளிக் கொண்டு வர முன்னின்று செயல்படுத்திய அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .

இந்த புத்தகத்தை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அத்தனை நபர்களும் அவசியம் படிக்க வேண்டும் .

தனி நபர்களாக வாங்க முடியாத போதும் குழு சார்பாக வாங்கி பயனடைய வேண்டும் என்று இனிய நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:மார்க்சிய ஆசான் தோழர் SAP
தொகுப்பு ஆசிரியர்:MJ.பிரபாகர்
வெளியீடு:
விலை:₹.600 (10% Discount price was: ₹.540)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கு.செந்தமிழ்ச்செல்வன்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வேலூர்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *