முகமது பாட்சா கவிதைகள்

காமெடி வனவிலங்கு புகைப்பட ...

அணிலாகத்தான்
அஃது என்னருகில் வந்தது
அதனைத் தடவிக் கொடுத்தேன்
அதன் பற்கள்
என்னைப் பிறாண்டிப் பார்த்தன
இப்போது அஃதொரு கடுவனாக இருந்தது
அதன் கால் நகங்கள்
சில ஆயுதங்களை
ஒளித்து வைத்திருந்தன…
அஃதொரு புலியாக மாறும் முன்
வீசிவிடத் துணிந்தேன்
ஆனால் அஃது இப்போது
நாயாக நின்று கொண்டிருந்தது…
நன்றியுள்ளதென்று
போவோரெல்லாம் புகழ்ந்தார்கள்
அதன் எச்சில்
இப்போது உதிரத்தைச் சுழற்றியது…
வேறு வழியில்லை…
இப்போது நானும்
ஒரு நரியாகவாவது மாறவேண்டும்…
இல்லையென்றால் அஃதடுத்து
ஒரு பாம்பாக மாறக்கூடும்.

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமாக ...

ஜம்ரத்துல் அகபாவில்
ஏழு சிறு கற்களை எறிகிறார்கள்
சாத்தான் விரட்டப்படுகிறான்…
நீச பிசாசுகளை விரட்டிடும்
சிலுவை ஐயாவே
எமக்கு உதவியாக வாரும்…
சாத்தான் விரட்டப்படுகிறான்
பிடாரி
ஆங்காரம் போர்த்தி ஆடுகிறாள்
காலின் கீழ் பிசாசன்
சாத்தான் விரட்டப்படுகிறான்
மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்
வாக்கு எந்திரங்கள்
சப்தமிட்டு ஜெபிக்கின்றன…

Do dreams affect sleep? - Warm Things

அஃதொரு அவசர கூட்டமாகத்தான் இருக்கவேண்டும்.
நான் எப்படி வந்தேன் என்பது தெரியவில்லை.
அதில் உயரமாகவிருந்தவன் தன்னை
XZ என்று சொல்லிக்கொண்டான்.
அடிக்கடி ஒப்பனை செய்து கொண்டிருந்தவள்
நிச்சயம் நடிகையாகத்தான் இருக்கமுடியும்.
அவள் பிரதேசங்களை ரசிக்கும் சூழல் அங்கில்லை.
குள்ளமாக இருந்தவன் தன்னை
வெங்காயம் என்று அறிமுகம் செய்து கொண்டான்.
அடுத்த மேசையில் இருந்தவன்
போதையில் இருந்து கொண்டே
தன் பெயர் கங்கை என்றான்..
எல்லோரும் இப்போது என்னைப் பார்த்தார்கள்..
என் பெயர் நிச்சயம் தெரியவில்லை.
முன்பு ஆடென்று கூப்பிட்டதாக நினைப்பு.
அதையே சொன்னேன்.
இப்போது சூடான பாலில்லாத தேநீர் வந்தது.
அதைக் கொண்டு வந்தவன் iam servent என்றான்.
காவலாளி கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.
எதை எதையோ பேசினார்கள்.
அவர்களின் அந்த மொழி நான் அறியாதது.
எனக்கான மேசையில் உணவுத் தட்டுகள் நிறைந்திருந்தன…
நான் விரும்பிச் சாப்பிட்டேன்.
புரையேறும்போது நடிகை என் தலையில் தட்டினாள்.
அழுத்தம் சுகம்.
திடீரென்று விளக்குகள் அணைந்து எரிந்த போது
அங்கு யாருமில்லை…
அவர்களின் பேச்சுகள் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தன…
நச்சென்று ஒரே வெட்டு
என் தலை என்னைப் பார்த்துச் சிரித்தது…
வெட்டியவனைப் பார்க்க முடியவில்லை…
என்ன நடந்ததென்று புரியாமல்
உங்களை மாதிரிதான்
நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

Rowdy Drawings | Fine Art America

தேடப்படும்
குற்றவாளியென்று சொன்னார்கள்
அவன் ஒற்றை
மருவை மட்டும் வைத்துக் கொண்டு
மாறுவேஷத்திற்கு மாறிக்கொண்டான்
அவனை இப்போது எல்லோரும்
எளிதில் கடந்து போனார்கள்
அவன் போகும் பாதைகளில்
சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது
கை குலுக்கியவர்கள்
வெளிச்சம் வந்துவிட்டதாக
பேசிக் கொண்டார்கள்
அதிபர் அவனை
அரவணைத்து மகிழ்வித்தார்
அவனது சட்டைப் பணம்
அவரது பைக்கு மாறிக்கொண்டது
குனிந்த போது விழுந்த மருவை
எடுத்துக் கொடுத்த புலனதிகாரி
பத்திரமாக ஒட்டிக் கொள்ளுங்கள்
உங்களை இன்னமும் நாங்கள்
தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
அவன்தான் இவனென்று
சொன்ன பத்திரிகைக்காரனை
கையும் மையுமாகக் கைது செய்தார்கள்
அதிபர் மீது ஆவேச மைவீச
முயன்றதாகக் குற்றச்சாட்டு
– வங்கியை நோக்கித்தான்
போய்க் கொண்டிருக்கிறேன்
கிடைக்காத கடனை கேட்பதற்காக –
என்ன செய்வது பயிர்கள் கருகுகிறதே!

யாழில் நடந்த இன்னுமொரு விசித்திர ...

சற்று முன்தான்
என் மீது
சில வழக்குகள் பதியப் பட்டிருக்கின்றன…

கறுப்புச் சட்டை அணிந்திருந்ததால்
அரசுக்கு எதிரானவன் என்றும்
ஆயத்துல் குர்ஸியை மாட்டியிருந்ததால்
அரபுக்காரனாக இருக்கலாம் என்றும்!

என் வீட்டிலிருந்து மேதி ஹஸனின்
கஸல் இசைப் பாடல்களைக் கைப் பற்றியதால்
நான் பாகிஸ்தானியாக இருக்கலாம்
என்ற சந்தேகமும் பதிவாகியுள்ளது!

பிர்தௌசியின் ‘ சா நாம’ வின் ஏடுகள்
சில இருந்ததால்
ஈரானுக்கும் எனக்கும் தொடர்பிருந்திருக்கலாம்!

ரூமியின் ‘மஸ்னவி’யைக் கைப் பற்றியவர்கள்
உறுதியாகச் சொன்னார்கள்
இவன் நிச்சயம் ஆப்கானிதான்!

எனக்கே இப்போது
ஒரு சந்தேகம் வலுத்துள்ளது….
பேகம் ரொஹையாவின் நாவல் ஒன்று
இன்னமும் வாசிக்காமல் வைத்திருக்கிறேன்
நான் வங்காளியா!

அன்பு கவிதைகள் – TRT தமிழ் ஒலி

அவன் இப்போதுதான்
முதன் முறையாகக் கவிதையொன்றை
எழுதுவதாகச் சொன்னான்…
கண்களை நம்பமுடியவில்லை
நல்ல சித்திரகாரனாக இருந்தான்
ஆடுகளை வரைந்தவன்
மரங்களை வரையாமல்
மேகங்களைத் துறட்டிக் கோலால்
இழுத்துக் கொண்டிருந்தான்…
ஓநாயொன்று
காலருகே நின்று கொண்டிருந்தது…
நிழலில்லாத அந்தப் படம்
உச்சி வெயிலைச் சித்தரித்திருக்கலாம்
இறுதியாக அவனது கண்களைத்
தரையில் சிதறவிட்டவன்…
அதனை
ஒரு காகம் கொத்திக் கொண்டிருப்பதாக
முடித்திருந்தான்…
அவன் குருடனா? எனக் கேட்டேன்
ஆடுகளைக் காணவில்லையென்று
ஓடிக் கொண்டிருந்தான்.

தமிழ் கவிதைகள்: (2020) - Tamil Love Kavithaigal ...

கட்டிப் போடாத ஒட்டகமாக
மனசெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாய்
வெகு தொலைவில் புழுதிப்புயலின் வாசம்
நான் பாலை என்பதால்
உன் மேய்ச்சல் எனக்குள் நிகழ்கிறது…
எனக்குள்ளிருக்கும் வெறுமை
உன் பாதங்களை நோகடிக்கின்றன…
ஈச்சங்கனியாய் ஓர் இளமுறுவல் உன் இதழ்களில்
சித்தாரில் இசைக்கும் இரவு
மெட்டாடைக் கொண்டு போர்த்த…
ஓர் இரவு பாடலின் வரிகளில் நுழைந்து
வாசனைத் தோட்டத்தில் நுழைகிறோம்…
இல்லாத கிணற்றில்
நீரருந்துதல் சுகமென்றாலும்
தாகம் மட்டும் தணிந்துவிடுவதில்லை…
நான் தேடுவது சுகமே
என் தேடலின் ஆதிக்கம் நீ என்பதால்…
அவர்கள் சிரித்துக் கொண்டே
என்னை மஜ்னூன் என்கிறார்கள்
நானும் சிரித்துக் கொண்டே
லைலாதான் என் தேசத்தின் காதல் என்கிறேன்.

கர்ணமோட்சம்' முதல் 'பசி' மாந்தர்கள் ...

வித்தைக்காரக் கிழவனைச் சுற்றிலும்
ஒரே கூட்டமாக இருந்தது,
சிரிப்பைத் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொண்டவன்
மற்றவர்களும்
சிரிப்பைத் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொண்டான்
தண்ணீரை அள்ளியெடுத்து வீசி
பூக்களாகக் கொட்டச் செய்தான்
தனது குல்லாவிலிருந்து பறந்து போன புறாவிற்கு
கைகளை அசைத்தான்
கைக் குட்டையாக அவன் கைகளில் விழுந்தது
கைக் குட்டையை உதறினான்
பொற்காசுகளாய் கீழே இரைந்தது
வாரியெடுத்து எல்லோருக்கும் கொடுத்தான்
சாம்பலாய் உதிர்ந்தது…
கடைசியாகத் தட்டொன்றை எடுத்து
யாசிக்கத் தொடங்கினான்…
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
போகும்போது என் காதில் மட்டும் சொன்னான்
இது மட்டும்தான் நிஜம்
அதுவும் என் பசியை நிரப்பும் வரை…

கன்னியாகுமரி அருகே தலையில் ...

தூக்கில் தொங்கிய பிணத்தையிறக்கி
மகுடம் சூட்டினார்கள்
பேசாத பிணமென்று எதிர்க் கட்சிகள் சாடின
அரண்மனை நாறுவதாக அந்தப்புரம் சொன்னது
ஈக்களெல்லாம்
ராஜா வாழ்கவென்று கோஷமெழுப்பின
பஞ்சமொழிந்ததாகப் புழுக்கள் பேசின
இறந்துகிடந்த மனிதர்களைக் குப்பையில் போட்டார்கள்
தூய்மை தேசமென்று எறும்புகள் பேசிக் கொண்டன
காற்றடித்தபோது
கழன்று விழுந்த எலும்புகளைச் சேகரித்தவர்கள்
ராஜா மோட்சம் பெற்றதாகச் சொன்னார்கள்
தேசம் நாறிக் கொண்டிருந்தது
வெட்டியான் கைகளோய்ந்து இறந்து கிடந்தான்.

இதுவும் கடந்து போகும்!! - YouTube

தலையில் விழுந்துவிட்ட இடியை
எடுத்துப் போட்டுவிட்டு
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்
இதுவும் கடந்து போகும் என்றார்கள்
கோடாரியால் ஒருவன்
தலையை வெட்டிக் கையில் கொடுத்துவிட்டு
இதுவும் கடந்து போகும் என்று சொன்னான்,
மாடொன்று என்னை முட்டித் தள்ளி வீழ்த்தி
இதுவும் கடந்து போகும் என்று சொல்லி
மிதித்துவிட்டுச் சென்றது,
அழுது கொண்டிருந்த கண்களுக்கு
நிழற் கண்ணாடியை மாட்டிவிட்டவன்
உணவுகளை பறித்துக் கொண்டு
திருவோட்டைக் கையில் கொடுத்துவிட்டு
இதுவும் கடந்து போகும் என்று பறந்துவிட்டான் ,
கால் நழுவிக் கொண்டிருந்த நிலம் மட்டும்
நான் உனக்குத் திரும்ப வரமாட்டேன்
என்று சொல்லிவிட்டு கடந்து போனது….
அப்போதுதான் கவனித்தேன்
இறந்தவனருகில்
அழுதுக் கொண்டிருந்தவனைப் பார்த்தும்
அப்படித்தான்
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்…

– ——–

எலும்புத் துண்டங்கள் இறைந்தவிடத்தில்
ஓநாய்களின் கால்தடங்கள் வழி காட்ட
ஆயன் அலைகின்றான்
தன் ப்ரிய ஆட்டைத் தேடிக் கொண்டு,
சொக்காச்சி…சொக்காச்சியென்றே
சொக்காச்சியும் அவனோடுதான்
ஆடு மேய்ப்பவள்,
கல்மிசமில்லாக் கலகலச் சிரிப்புக்காரி,
கவுந்துப் போனவன் ஆயன்
அவள் ஆண்டைவிட்டுப் பழங்கஞ்சியும்
அவள் கைக்கொண்டுதான் மணக்கும்
உறுகாய்க்குப் பதில்
அவள் விரலைத்தான் நக்கிக் கொள்வான்…
மலைக்காட்டோரம் போனவளை
அம்மணமாகத்தான் பார்த்தான்…
குறிக் கொழுத்த ஓநாய்கள்
அவளைக் குதறிவிட்டுப் போயிருந்தன..
எரித்தவிடத்தில் எலும்பொன்றைக் களவி
கழுத்துக் கயிற்றில் ஆவணமாய்
கோர்த்து வைத்துக் கொண்டான் …
அவள் பெயர்தான் அவன் ப்ரிய ஆட்டுக்கும்,
இதையாவது
ஓநாய்கள் விட்டு வைத்திருக்காதா?
கண்ணீரோடுவே அலைகின்றான்
‘சொக்காச்சி…சொக்காச்சி…’

– முகமது பாட்சா

———————