Amma kavithai அம்மா கவிதை

அம்மா (கவிதை) – சாந்தி சரவணன்



காவியம் படைக்க
அவள்
காவியத் தலைவியல்ல!
பாடகி அல்ல !
தாலாட்டு பாடி
என்னை தூங்க வைத்த “பாடகி” எனது அம்மா
ஆசிரியர் அல்ல!
“அ” எழுத சொல்லி கொடுத்த
*ஆசிரியர்’ எனது அம்மா
மருத்துவர் அல்ல!
எனது ஆரோக்கியத்தை காத்த
“மருத்துவர்” என் அம்மா
வக்கீல் அல்ல !
அனைத்து நிகழ்வுகளிலும்
எனக்காக வாதிட்ட
“வக்கீல்” என் அம்மா
சமையல்காரி அல்ல!
ருசிக்க சமைத்து தந்த
“சமையல்கலை நிபுணர்” எனது அம்மா
வளர்பிறையாக நான் வளர
தேய்பிறையாக தேய்ந்து போனவர் என் அம்மா
என் ஒவ்வொரு அணுவிலும் மறைபொருள்
என் அம்மா!
கவிபடைக்க எழுத்துகள்
சத்தமிடுகின்றன

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 6 Comments

6 Comments

  1. Jayaprakash

    அருமையான கவிதை . கருவாகி உருவாகி உலகிற்கு கொண்டு வந்தது முதல் அவளை தவிர வேறு தெய்வம் இல்லை . அம்மா என்பதற்கு இனை வேறு இவ்வுலகில் இல்லை . உங்கள் படைப்புகள் மேன்மேலும் சிகரமாக வளர வாழ்த்துக்கள்

  2. கவிதா பிருத்வி

    அம்மாவே கவிதைதான்.. சிறப்பு தோழர் 👍🎉

  3. Vidhya.S

    கவிதை அருமையாக உள்ளது.

  4. RK kanchi

    கருவில் உன்னைச்சுமந்தவளையே உன் கவிதைக்கு கருவாக்கியதால் தாயையே சுமந்த பெருமைக்குரியவர் நீங்கள்!!!!
    வாழ்த்துகள் .

  5. ஆ. கணேசன்

    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லைை. அன்னையை போற்ற அவள் அன்புக்கு இணையான ஒன்றைக் காண முடியாது என்பதை உணர வைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *