தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 15வருடமாக சிரமப்பட்டு பொருளுற்பத்தி சம்பந்தமானபுள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் மூலதனம்சொத்துக்களை ஒரு பக்கமாகக் குவித்து வருகிறது. தனிநபர் வருமானத்தின் ஏற்றத்தாழ்வை இடைவெளியை அதிகப்படுத்திவருகிறது என்பதை அந்த தரவுகள் காட்டுவதாக நிரூபிக்கிறார். முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று மார்க்ஸ் கூறியதைபொய்ப்பித்தாலும் அவர் நம்பிய வருமான ஏற்றத் தாழ்வு உண்மையாகிவிட்டது என்று வருத்தப்படுகிறார். இதனைத் தடித்த புத்தகத்தில் வடித்து 2013ஆம் ஆண்டு மேலை நாட்டு பணப்புழக்க கோட்பாட்டு உலகைக் கலக்கிவிட்டார்.அமெரிக்கப் பொருளாதார நிபுணர் சைமன் சுமித் குஸ்நெட்ஸ் என்பவர் சிலபுள்ளிவிவரங்களை வைத்து ஏற்றத்தாழ்வு சுருங்கிவருவதாக வரைபடம் போட்டுக் காட்டியது தவறு என்று பிக்கெட்டி அம்பலப்படுத்துகிறார். வருமான இடைவெளி சுருங்குகிது எனக் காட்டியதற்கு 1971ல் குஸ்நெட்ஸ் நோபல் பரிசு பெற்றார். சுருங்கி வருகிறது என்றமுடிவு தவறானது என்று காட்டவே பிக்கெட்டி தடித்த புத்தகமாக எழுதியுள்ளார். போகிற போக்கில் மார்க்சையும் மறுக்கிறார். இருந்தாலும் கனத்தை மறந்து வாசகனைப் படிக்கவைக்கிறது என்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு அம்சம் ஆகும். இந்தப் புத்தகத்தை கீழ்க்கண்ட காரணங்களுக்காக வாசிப்பது அவசியம்.1.முதலாளித்துவ உலகில் நடைபெறும் பொருளாதார கோட்பாட்டு சர்ச்சைகளை புரிந்து கொள்ள.2.அமெரிக்க முதலாளித்துவ மாடலுக்கும் ஐரோப்பிய மாடலுக்கும்உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள.3.காரல்மார்க்சை மேலைநாட்டு முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள.4.காரல் மார்க்ஸ் எதிர்பார்த்ததாகக் கூறப்படும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் பேரழிவை தடுக்கமுதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிற ஆலோசனைகளைத் தெரிந்து கொள்ள.
5. சீனாவின் மேலை நாட்டு முதலீடுகள் பற்றிய ஆய்வுகளை சுவைபட அறிவதற்கு.6. பணத்தின் வளர்சிதை மாற்றம் பற்றிய மார்க்சிய பார்வைக்கும் முதலாளித்துவ நிபுணர்களின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள. (பாமரன் கையிலிருந்தால் பரிவர்த்தனை கருவி. இதுவே சேமிப்பானால் சொத்துக்களை மடக்கும் பங்குப்பத்திரம்– மற்றும் முன்பேரதாள். இதுவே வங்கியில் இருந்தால் நிதி மூலதனம்)7.எகனாமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் இதழ்தான் தாமஸ்பிக்கெட்டியை 21ஆம் நூற்றாண்டு மார்க்ஸ் என்று விளம்பரப்படுத்தியது. அமெரிக்க பாணி தாராளமயப் பொருளாதாரத்தை பிக்கெட்டி தாக்குவதோடு மார்க்சையும் நிராகரித்து ஐரோப்பிய பாணி முதலாளித்துவமே சிறப்பானது என்று காட்டுவதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்று மகிழ்கிறது.8.பணப் புழக்கத்தை சமூக உறவாக அணுகி பொருளாதாரத்தின் திசையை அரசியலே தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை பிக்கெட்டி பார்க்க மறுக்கிறார் . அதே வேளையில் பணத்தின் நடமாட்டத்தை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ள வாசகனை வேண்டுகிறார். இந்த ஒரு இடத்தில்தான் அவருக்கும் மார்க்சிற்கும் வேற்றுமை மறைகிறது. மூலதனத்தை இயக்குகிற சமூக உறவு, அந்த உறவை தீர்மானிக்கிற அரசியல், அந்த அரசியலைத் தீர்மானிக்கிற வர்க்கப்போராட்டம் இவைகளையும் பணத்தின் வடிவங்கள் மாறுவதையும் இணைத்துப் பார்க்க மறுக்கிறார். வர்க்கப்போராட்டத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உறவு எதுவுமில்லை என்பதே அவர்களது பார்வையாகும்.
9.அமெரிக்கா, உலக நாடுகளின் தலையில் திணிக்கும் கட்டற்ற தாராளமய தனியார்மய பொருளாதாரக் கோட்பாட்டை பிக்கெட்டிஆதாரங்களுடன் நிராகரிக்கிறார். அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதை புள்ளிவிவரங்களை காட்டி நிரூபிக்கிறார்.10.அதே வேளையில் மார்க்சிய கோட்பாடான சமூக உற்பத்திக்கு சமூகக்கட்டுப்பாடு (சோசியல் கன்ட்ரோல் ஓவர் சோசியல் புரடக்ஷன்) என்பதை ஏனோகண்டு கொள்ளாமல் இருக்கிறார்.11.ஜனநாயக உரிமைகளைப் பறிக்காமல் முதலாளித்துவம் நீடிக்க இவர் கூறுகிற ஆலோசனையை பிரெஞ்சு அரசே ஏற்கத் தயாரில்லை.12.இன்றைய அரசியல் பொருளாதார கோட்பாடுகள், சர்ச்சைகள் பணம் சமூகத்தின் மைய புள்ளியாகி பணத்தைவைத்து பொருளுற்பத்தி என்பது தலை கீழாகப் போய், உற்பத்தி சக்தியைப் பணமாக ஆக்கும் முறை எப்படி முதலாளித்துவ உலகில் வந்தது என்பதைப்புரிய விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.
21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்தாமஸ் பிக்கெட்டிமொழியாக்கம்: பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்திவெளியீடு: பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டைசென்னை – 600 018தொ.பேசி: 044 – 24332924பக்: 864 விலை : ரூ.850/