மூட்டைப் பூச்சியும் தமிழ்ச் சமூகமும் உணர்த்தும் சமூகப் பண்பாட்டு அசைவுகள்
2026 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வெளி வந்திருக்கும் கட்டுரை நூல் தான் இந்த மூட்டைப் பூச்சியும் தமிழ்ச் சமூகமும். ஏதோ எழுத வேண்டும் என்ற அத்தனை காரணங்களையும் துடைத்து எறிந்து விட்டு எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது. நம் வாழ்க்கையில் நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள், நடந்து முடிந்த நிகழ்வுகள் அல்லது ஏதாவது ஒரு காரண காரியமான சம்பவங்கள் எல்லாம் தனக்கான கட்டுரை தலைப்பாக எடுத்து கட்டுரை வடிவமாக மாற்றி எழுதி இருக்கிறார். புத்தகத்தின் பின் அட்டையில் விறுவிறுப்பு ஊட்டுவதாக மிக சுருக்கமான வடிவத்தில் விமர்சமொன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், “மா.ச.இளங்கமணியின் ஆய்வுத் தளம் புதிதாக உள்ளது. விளக்கு, நெருப்பு, பேன், குடுமி, கக்கூஸ், மூட்டைப்பூச்சி, மரம், ஃபக்கீர், உணவு, மல்லிகை பூ…. இன்னும் எதையெல்லாம் பார்க்க போகிறாரோ? மக்களால் யதார்த்தமாகக் கடந்து போகும் தளங்களைத் தனக்கான களங்களாக எடுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார். வியப்பான பல விஷயங்களுக்கு விடையும் தேடித் தந்திருக்கிறார்” இதுதான் அது. இது வாசக மன நிலையை ஈர்ப்பு செய்வதாக அமைகிறது.
ஒரு புத்தகம் எதையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற கோட்பாடுகள் வரையறைக்குள் உட்பட்டு எழுதப்படுகின்றது. சிறுகதை, நாவல் என்கிற கதை வடிவ போக்குகளுக்கு கவனம் செலுத்தும் நிலையை இலக்கிய தலங்கள் செய்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சமூக அசைவு இயக்கத்தைப் பண்பாட்டு சூழலுக்குள் நடக்கும் சம்பவத்தை தனக்கான கட்டுரை களங்களாக எடுத்துக்கொண்டு இயங்கி இருக்கிறார். இந்தக் கட்டுரைகள் உடைத்தெறியும் சமூகப் பண்பாட்டைக் கேள்விக்குள் கொண்டு வருகின்றது.
ஆய்வுப்புலம் சார்ந்த கட்டுரைகள்
ஆய்வு என்பது தேர்ந்த நிலையில் எழுதப்படுவதாகும். இவை கதைகளைப் போல அல்லாமல் போதிய தகவல் ஆதாரங்களைத் திரட்டி, அதன் பின்னரே கட்டுரை வடிவமாக மாற்றுகிறார்கள். அந்த அடிப்படையில் இவர் உதவிப் பேராசிரியராகப் பணி செய்து கொண்டிருக்கின்றமையால் என்னவோ ஆய்வுப் புலத்தில் நின்று தனக்கான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். இத்தொகுப்பில் 16 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலாக உள்ளது. பெரிய கட்டுரைகளும் சிறிய அளவான கட்டுரைகளும் இதனுள் அடங்கும். இவற்றில் இடம்பெற்றிருக்கும் பல கட்டுரைகள் இணையதளத்திலும் கருத்தரங்குகளில் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தக் கட்டுரைகள் சமூக வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்து நிற்பதைக் காண முடிகிறது
பெரிய தேடல்களும் கட்டுரைகளும்
பெரிய தேடல்களும் கட்டுரைகளும் என்பதாகவே சொல்லிக் கொள்ள வேண்டும். ஒரு கட்டுரைக்கு தோராயமாகப் பல்வேறு காலங்களை எடுத்துக் கொண்டு எழுதி முடிப்பதாகும். அதே வேளையில் தன்னிடம் இருக்கும் கட்டுரைகளைப் பற்றி முன்னுரையில் குறிப்பிட்ட இருக்கிறார். அதில், “ஒரு கட்டுரை உருவாக்கத்திற்கு முன்னர், தலைப்பின் நீட்சி ஒருமுகப்படுத்துவதில் மிக கவனம் கொள்கிறேன். தலைப்பு வந்த பின்னர் கருதுகோல் வைத்துக்கொண்டே கட்டுரையை எழுத முயற்சிக்கிறேன். கருத்துக்கள் கட்டுரையை மேலும் வலுவடையச் செய்கிறது. தற்போது வைத்திருக்கும் 40க்கும் மேற்பட்ட தலைப்புகள் கைவசம் இருந்த போதும் அதற்கான சான்றாதாரங்கள் ஏனோ முழுமையாகக் கிடைப்பதில்லை கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிந்து கொண்டிருக்கிறேன்” (ப.7) என்பதாக ஒரு பதிவைச் செய்கிறார். இதன் மூலம் ஒரு கட்டுரையை முழுமையாக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் மெனைக்கடல்கள் நம்மை ஆழ்த்துகிறது.
பதினாறு கட்டுரைகள்
இக்கட்டுரைகளை ஒரு சில பிரிவுக்குள் அடக்கி முடித்து விடலாம். முதல் இரண்டு கட்டுரைகள் நெருப்பும் விளக்கும் குறித்தானவை கட்டுரைகள். விளக்கு பொருத்த வரை நம் வீட்டில் ஏற்றப்படுவது என்பதாக தான் இத்தனை காலமும் நினைத்து கொண்டிருக்கின்றோம். விளக்கு எரிக்க வரி கெட்டி இருப்பது, கல்யாணம் முடிந்து மருமகள் புகுந்த வீட்டிற்கு விளக்கு கொண்டுவரும் காரணம் மளைக்க செய்தது.புனித நெருப்பு எங்கிற பெயரில் ஒளபாசனம் செய்வது.கடைசியி;அந்த விளக்கிலிருந்து கணவனுக்கு கொள்ளி எடுத்து செல்வது ஆகியன தமிழ்ச் சமூகத்தில் நடந்த சம்பவங்களை மையமாக இருந்தாலும் நமக்கு அதிர்வை தருவதாகவும் அமைந்திருக்கிறது.
திருவள்ளுவரும் திருக்குறளும் எங்கிற கட்டுரை நான் பள்ளி பாடத்திலும் சரி கல்லூரி படிப்பிலும் சரி அறம், பொருள், இன்பம் என்பதாகவே படித்திருக்கின்றேன். நான்காம் பால் இருப்பதாக யோசிக்கவே இல்லை. ஆனால் இவர் பால் இருப்பதாக ஓலைச்சுவடியிலிருந்து ஆதாரங்களைக் காட்டுகிறார். அடுத்ததாக பேன் பற்றிய கட்டுரை. கதை வடிவத்தோடு அமைக்கப்பட்ட கட்டுரையாக இருக்கிறது. பேன் ஏன்? முடிக்குள் வாழ்கிறது. பெண் உலகத்தில் பேன் ஆல் படும் அவஸ்தை அது எப்படி நம்பிக்கைகளாய் எவ்வாறு வடிவம் எடுத்துள்ளது போன்றன விரித்து சொல்லியிருக்கிறார். அடுத்தது பேரிகை கொட்டுவதும் குடுமி வைத்துக் கொள்வதும் மிகப் பெரியதான அரசியல் இருப்பதை இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. ஆனால் குடுமி வைத்துக் கொள்வதனால் உயர் சமூக அந்தஸ்து பெற்று இருப்பதையும் அதே வேளையில் எந்தெந்த சமூக மக்கள் தங்கள் ஊர்வலம் செல்லும் போது பேரிகை என்கிற இசையை முரச அறிவித்தது போல செல்வதற்கு தகுதி படைத்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதையும் காண முடிகின்றது.
மகமை என்னும் சொல் வரி என்கிற தாக்கத்தை வெளிப்படுத்த நிற்கிறது. இப்படி ஒரு வரிகள் இருந்திருப்பதாக யோசிக்க வைத்தது. அடுத்து வரக்கூடிய இரண்டு கட்டுரைகள் சிறப்பான கட்டுரையாக இடம் பெற்று இருக்கிறது கழிப்பிடம் என்கிற கட்டுரையும் சாக்கடை என்கிற கட்டுரையும் உள்ளது. ரெஸ்ட் ரூம் என்று தற்போது ஆங்கிலத்தோடு பேசப்படக்கூடிய சொல்லாக இருந்தாலும் கழிப்பிடம் எவ்வாறு இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக உரைக்கிறது. நகர நாகரிகத்தின் பெருக்கத்தால் சாக்கடை சீரழிந்து வருவதையும் சாக்கடைகள் எப்படி எல்லாம் இருந்தது என்பதையும் விளக்குகின்றது.
‘ மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகம்’ தமிழ்ச் சமூகத்தில் என் போன்ற வயதை ஒத்த உடைய மாணவர்களுக்கு மூட்டைப்பூச்சி என்கிற உயிரினத்தைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாது. அவற்றை கண்டடைந்து சொல்லி இருக்கும் விதம் மீண்டும் வாசிக்க தோன்றுகின்றது.
அடுத்ததாக மரம் பற்றியும் ஃபக்கீர்களைப் பற்றியும் சர்வ சாதாரணமாக நம் கடந்து போகும் இந்தச் செயலை எடுத்துரைக்கிறார். இதே வேளையில் உணவுகள் குறித்து சரியான கட்டுரைகளாக இருக்க்கின்றது. இன்றைய காலத்தில் வழங்கப்படக் கூடிய உணவுகளும் உணவு பண்பாட்டு ரீதியாக நம்மோடு கலந்து இருக்கும் விஷயத்தைப் பற்றியும் அதே வேலையில் அரிசி சாப்பாடு பந்தி போஜனமும் என்கிற ஒரு கட்டுரை அரிசியின் சிற்றிலக்கியத்தை கண்டடைந்து குறிப்பிட்டு இருக்கிறார்.
கடைசியாக இரண்டு கட்டுரைகள் மிக நல்ல கட்டுரையாக அமைந்திருந்தது “மல்லிகைப்பூ கோவிலுக்குள் வருவதற்கு முன்’ இந்தத் தலைப்பு கேட்கும் போது நான் பெண்ணாக இருப்பதால் ஒருவித ரசனையோடே படித்தேன். கோயிலுக்குள் மட்டுமல்ல எல்லா விசேஷ காலங்களிலும் மல்லிகைப்பூ இடம்பெற்றிருக்கும். ஆனால் மல்லிகைப்பூ கோவிலுக்குள் வருவதற்கு முன் அப்படி என்கிற தலைப்பு போட்டு இருப்பதற்கான காரணம் இதற்கு முன் கோயிலுக்குள் அது வராமல் இருந்ததா என்ற சந்தேகத்தோடு இக்கட்டுரை வாசித்தேன். மாறுபாடுகளைக் கொண்ட ஒரு வாழ்வியலைப் பின்பற்றும் மனித சமுதாயத்தில் தான், மரபான ஒரு வாழ்க்கையை பின்பற்றும் குழுமனக் கொள்கை எப்போதுமே தனித்துவமாக அமைந்து விடுகிறது. அவற்றில் இடம் பெறக்கூடிய சடங்குகள் வழிபாட்டு முறைகள் அனைத்துமே காலத்துக்கான அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையிலே 2000 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பூவான மல்லிகை பூ இடம்பெற்று இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கட்டுரையை வாசிக்கிற போது இதுபோல எந்தெந்த உணவு வகைகள் அல்லது எந்தெந்த செடி வகைகள் நம் இந்தியாவோடு கலந்து இருக்கிறது. அல்லது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறது என்பது போன்ற சந்தேகமும் வந்து போனது. பூவும் மனிதனும் ஆன சமூக அமைப்பிற்குள் எவ்வாறான நெருக்கங்கள் தொடர்ந்து இருக்கிறது என்பதாக கடைசி கட்டுரையோடு இந்த கட்டுரைகள் முடிந்து விடுகிறது.
படிப்பதில் சுவாரசியமும் அதே வேளையில் எடுத்துரைக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் அதிர்வு செய்யும். எல்லாக் கட்டுரைக்குள்ளும் பண்பாட்டை எடுத்துரைப்பதோடு பண்பாட்டு சிதைவையும் முன் வைக்கின்றார். சமூக இருப்பில் பல்வேறு மாற்றங்களைக் கண்டடைந்து கொண்டிருக்கின்றோம். காலத்திற்கு ஏற்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றாலும் பண்பாட்டைப் புரிந்து பயணிக்க மறந்து விடுகின்றோம். இதை உடைக்கும் விதமாக நமக்கு கிடைத்த சிறந்த நூல் இந்த மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகமும் ஒன்றாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகமும் (2026) |
| ஆசிரியர்: | மா.ச.இளங்கோமணி |
| வெளியீடு: |
சந்தியா பதிப்பகம், சென்னை,
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 சி.த. இஷா, |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
