மோதிரம் வரையும் நிலா புத்தகத்திலிருந்து
ஹைக்கூ கவிதைகள் வாசிக்கும் போது நமது கண்முன்னே காட்சிகள் விரிவடைய வேண்டும். மூன்று வரிகள் கொண்ட ஹைக்கூ கவிதைகள் இர்ண்டு காட்சிகளை நமக்கு தரும். ஒரு மனிதன் இரண்டு கண்கள் கொண்டு இருப்பது போல ஒவ்வொரு ஹைக்கூவும் இரண்டு காட்சிகளை சுமக்கும். முரண்பாடு கொண்ட காட்சிபடலத்தை லேசாக கடத்தி சென்றுவிடும்.
“மோதிரம் வரையும் நிலா” புத்தகத்தில் இதுபோன்ற பல ஹைக்கூ படலங்கள் நம்மை லேசாக அசைத்து விட்டு செல்கிறது. விரலுக்கு மோதிரம் அணிவது இயல்பு. கவிஞர் அவர்கள் சூரியக்கிரகணத்தை எழுதுகோலாக்கி நிலாவுக்கு மோதிரம் வரைந்துள்ளார். இந்த மோதிரம் வரைந்த நிலா பல அணிகளனை அணிந்து கொண்டு புத்தகத்தை அலஙகரிக்கறது. அவை வாசகர்கள் உள்சென்று ஒரு அசைவை உருவாக்கும் செயலை நிச்சயம் செய்யும். அவற்றில் சில:
அடுக்கிய துணிகளைக்
கலைத்துப் போட்டது குழந்தை
வீடு வீடானது
குழந்தை இல்லாத வீடு ஒரு மயான அமைதியை தரும். அது வீடாகவே இராது. குழந்தைகள் தவழ்ந்து நடந்து ஒடி விளையாடும் வீட்டில பொருட்கள் வைத்த இடத்தில் இருக்காது. சுவர்களில் ஆதி ஓவியங்கள் வரிவடிவங்கள் அலங்கரிக்கும். துணிகள் கலைத்து போட்டு இருக்கும் என்பதை அழகாக சொல்லி செல்கிறது இந்த ஹைக்கூ
கரப்பான் முட்டைகள்
அழிக்காமல் விடுகிறாள்
கர்ப்பிணித் தாய்
தாய் உள்ளம். கரப்பான் முட்டைகள் ஏனினும் அதுவும் உயிர் என கரு சுமக்கும் தாயைவிட யாருக்கு தெரியும். இதை அழகாக காட்சிப்படுத்துகிறது இந்த ஹைக்கூ.
பேரம் பேசுதலில்
வெம்பிப் போகிறது
வெள்ளரிப் பிஞ்சு
மாலில் இருக்கும் கடைகளில் பேரம் பேசாமல் கூட டிப்ஸாக கொடுப்பதை கௌரவமாக கருதும் நாம் நடைபாதை கடைகளில் பேரம் பேசுவதை இழிவாக கருதுவதில்லை. அந்த ஒரு ருபாய் இரண்டு ருபாயில் நம் சேமிப்பு உயரும் என நினைத்து அவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடுவோம்.வெம்பி போவது வெள்ளரிப்பிஞ்சு மட்டும் அல்ல, அந்த வியாபாரியும் தான் என்பதை நமக்கு காட்சிப்படுத்துகிறது இந்த ஹைக்கூ.
உதிரகிறது பூ
செடிக்கு வலிக்கும்
தடவித் தருகிறது குழந்தை
குழந்தைகளுக்கு நேசிக்கும் பழக்கம் உண்டு. அவர்கள் செடிக்கு தண்ணீர் ஊற்றி மலர் மலர்வதை ரசிப்பார்கள். நாம் அதை பறித்து நாம் சூடி மகிழ்வோம். இந்த ஒரு இழை வித்யாசத்தை அழகாக காட்சிப்படுத்தும் இந்த ஹைக்கூ.
பால் கறக்கையில்
கன்றையே பார்க்கிறது
தாய்ப் பசு
ஆறு அறிவு பெற்ற நாம் செய்யும் இந்த தவற்றை உயிர்போடு காட்சிப்படுத்தும் இந்த ஹைக்கூ.
நூலின் விவரம்:
புத்தகம் : மோதிரம் வரையும் நிலா
எழுத்தாளர்: அன்புச்செல்வி சுப்புராஜு
பதிப்பகம்: அன்பின் சங்கமம்
பக்கங்கள்: 88
விலை: 120/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
திருமதி.சாந்தி சரவணன்
சென்னை – 600 040
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.