ரா.கலைவாணியின் கவிதைகள்
கவிதை- முயற்சி திருவினையாக்கும்.
1
நண்பா!
நீ கீழே விழும்போது
ஒரு வினாடி
நிமிர்ந்து பார்!
உன் முன்னே நின்று
நகைப்பது உன் தோல்வி !
அதே நொடி
எழுந்துநின்று மேலும்
முயற்சி செய்!
உன் முன்னே வெட்கி
தலை குனிந்து நிற்பது
உன்னிடம் தோற்றுப்போன
தோல்வி!
மண்ணை முட்ட
முயற்சித்தால்தான்…
விதைகள் கூட
விருட்சமாகும்!
மொட்டுக்கள் கூட
முயற்சித்தால்தான்
வாசமிகு மலராக முடியும்!
ஒரு அனுபவம் வாழ்க்கையின்
ஆயிரம் பாடங்களை
கற்றுக்கொடுக்கும்….
ஒரு ஏமாற்றம் வாழ்க்கையின்
ஆயிரம் மாற்றங்களுக்கு
அடித்தளமிடும்…
வாழ்க்கை நமக்கு ஒரு போதும்
தோல்வியைக் கொடுப்பது இல்லை!
வாழ்வதற்குத்தேவையான
பாடங்களையே
கற்றுத்தருகிறது…
தாயின் கருவறையில் நாம்
ஒன்பது மாதங்கள் கற்பது
பத்தாவது மாதத்தில்
இந்த பூமிக்கு வர
முயற்சி செய்யவே!
இன்று சாதித்தவன் கூட
ஒரு காலத்தில்
சாமானியன் தான்!
இன்று சாமானியன் கூட
ஒரு நாள்
சாதனையாளன்தான்!
“முயற்சி செய்தால் ”
மூச்சு நின்றாலும்
பிணம்தான்….
முயற்சி நின்றாலும்
பிணம் தான்….எனவே
மூச்சிருக்கும்வரை
முயற்சி செய் நண்பா!
2
இளைஞனே!
உனைப் பற்றி எழுத
வீர வார்த்தைகள் தேடி
தோல்வியடைந்தேன் நான்!
ஏனெனில்,
எல்லாவற்றிலும் வெற்றி
காண்பவன்நீ….
நம் நாட்டிற்கு
இமயமலையை விட
சிறந்த அரண்
உன் தோள்களே!
நீ பிறப்பதற்காக
காத்திருப்பதால் தான்
இந்த உலகம்
இன்னும் அழியவில்லை!
ஆயினும் ஏனோ இன்று
காமம்எனும் காட்டிற்குள்
விலங்காய்…
மோகம் எனும் முட்களின்
நடுவே மலராய் …
வாழும் மனிதா!
உன் வாழ்நாளில்
ஒரு மணி நேரம் அல்ல…
ஒரு நிமிடம்
சிந்தித்துப்பார்!
உன் செயல்
பாறையில் விதைக்கப்பட்ட
விதை என்று உனக்குப்புரியும்…
3
வாழ்க்கை பல கேள்விக்குறிகளை
உருவாக்கும் (?)…
அவற்றிற்கு விடை தெரியும் போது
அவை பல ஆச்சரியக்குறிகளை
உருவாக்கும் (!)…
ஆச்சரியங்கள் தொடர்ந்து
அவை தொடர்புள்ளிகளை
உருவாக்கும் (…)
தொடர்புள்ளிகள் உருவாக்கும்
வினாக்களுக்கு விடை
தெரியும்போது….
வாழ்க்கை நமக்கு
முற்றுப்புள்ளிவைத்து விடுகிறது (.)
எழுதியவர் :
ரா.கலைவாணி,
முதுகலை ஆசிரியர்,
தேவனாஞ்சேரி.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

