மொட்டை கொத்தனாரு….
என்னவோ
அவர் இரம்ய அழகு
வழுக்கைத் தலை
கூர் மூக்கு
வக்க நாடி ….
என்னவோ,
அன்னைக்கு
அவர் ஒரு வசீகரம்….
குண்டு நூலும்
அவரும் அத்தனை
சொரூரம்.
சின்ன வயசில்
பார்த்த கலை அம்சமே
குண்டு நூலும்
முழக் கோலும்
அவர் மேளை மண்டையின்
முத்தான வியர்வையும்.
அன்றைக்குப் பார்த்த பார்வை
இன்றைக்கும் பொதிந்து
கிடக்கின்றது.
என்னவோ தெரியவில்லை,
அதே கண்
அதே மூக்கு
அதே மேளை மண்டை
கொண்ட உருவம் கண்டால்
லயித்துப் போய் விடுகிறேன்.
முதன் முதலில்
அவரிடம் இரசித்தது
அவரின் கக்கூஸ் கட்டிட பணிதான்.
கிட்டத்தட்ட
நாற்பது வருட கால மொழி.
கூச்சல் இல்லை
குழப்பம் இல்லை
குள்ளநரித் தந்திரமும்
இல்லை.
அவர் நுனி மூக்கு
அடிக்கடி வியர்க்கும்.
ஏனெனில்,
பண்ணையாரே….
என்பார்.
அப்பா,
ஓய்….
ஓம் போங்கு போல என
சிரிப்பார்.
ஒரு மாத கிணறு வெட்டல் பணி.
அவரின்
மேளையும்
கூரிய மூக்கும்
வக்க நாடியும்
எப்படி பாடுப்பட்டிருக்கும் என சிரிப்பேன்.
அண்மையில்
அந்த கக்கூஸ் கிணற்றைத் தூர் வாங்கும் போது,
அதே
வடிவம்
முட்டி நின்றது.
முதல் கலைச் சிற்பம் எங்காவது
கிடைத்தால் நீங்களும் எழுதி அனுப்புங்களேன்.
எழுதியவர்:
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

