“மௌன மொழி” கவிதை
உயிர் இருக்கும் வரை உன்னோடு
காலம் உள்ளவரை கலந்து இருப்பேன்…
உயிர் நீ தான்…
உறவும் நீ தான்…
எல்லாம் சொன்னாய்
இன்று என்ன ஆனது?
உயிரில் கலந்த காதல்..
ஊமையானது…
மனதில் பூத்த காதல்…
மெளனமானது…
கண்கள் குளமானது
கண்ணீரை துடைக்க வந்தவன்
கண்ணீரை அதிகமாகத் தருகிறான்,,
காதலைத் தந்தவன்
காதல் இல்லை என சென்று விட்டான்…
நான் இருக்கிறேன் என்றவன்
நிர்க்கதியாக விட்டுச் சென்றான்….
வார்த்தையில் வர்ணித்தான்
வாழ்க்கையில்
தள்ளி வைத்தான்…
தள்ளி வைத்த நேரம்
நான் தத்தளித்து போனேன்…
எனக்கே தெரியவில்லை…
இனி என்ன ஆவேன்?
எழுதியவர்:
கோ. ஸ்ரீ அனுராதா
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
