உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் மௌன வசந்தம் ஒன்று – ஸ்ரீ | நூல் மதிப்புரை

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள்

நூலின் பெயர் : மௌன வசந்தம்
ஆசிரியர் : ரெய்ச்சல் கார்சன் [ தமிழில் ச வின்சென்ட் ]

உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் மௌன வசந்தம் ஒன்று..

இந்த பட்டியலில் இந்த நூல் இடம்பெறக் காரணம் என்ன என்பதற்கான பதில் சில பக்கங்களை வசிக்கும்போதே கிடைத்துவிடுகிறது..

பூச்சிக் கொல்லிகள் தாக்கத்தை மிக எளிமையாக விளக்கியதே அதன் காரணம்..

அமெரிக்காவைச் சேர்ந்த ராச்சேல் கார்சன் என்ற பெண்தான் இதன் ஆசிரியர்..

கடலியல் விஞ்ஞானியான அவர் எழுதிய இந்தப் புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது?

அமெரிக்காவில் பனிக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். அந்தக் கொடுமை தாங்காமல் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் ராபின் பறவை, வசந்தம் பிறக்கும் போதுதான் நாடு திரும்பும். வசந்தத்துக்கு கட்டியம் கூறும் அந்த ராபின் பறவை, அமெரிக்காவிலிருந்தே காணாமல் போக ஆரம்பித்தது. அதுவே இந்த நூல் பிறக்கக் காரணமானது.

இங்கிலாந்து நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று அழித்துக்
கொண்டிருந்தன. அந்த வண்டுகளை அழிக்க பூச்சிகொல்லியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்தார்கள். ஜப்பான் வண்டுகள் செத்துப் போயின. ஆனால், இன்னொரு விபரீதம் நிகழ்ந்தது. நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்தபோது, அதைத் தின்ற மண்புழுக்கள் இறந்து போயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்து போயின. ஹெலிகாப்டர் தூவிய நஞ்சு, நீரில் விழவே மீன்கள் அரை மரண நிலையில் நீரோடையில் மிதந்தன..

இப்படி உலகின் பல்லுயிர்களை அழிக்கும் பூச்சிக்கொல்லிகள் பற்றி வாசிக்க வாசிக்க அதிர்ந்து போவீர்கள்..

பக்கங்கள் : 240
விலை : ரூ 200
வெளியீடு : எதிர் வெளியீடு