“கதவிற்குப் பின்னொரு குழந்தை” — திருமதி. சாந்தி சரவணன்“கதவிற்குப் பின்னொரு குழந்தை”

மூடிய விழிகளில் உறக்கமில்லை
இரவு கரைந்தது
அதிகாலையில் கண் விழித்து
குளித்து, சமைத்து
வேலைகள் முடித்து
பறவை போல் பயணித்து
அலுவலகம் அடைந்த‌தும்
சட்டென்று நினைவு
கதவு தாழிட்டேனோ  ?
என் மகள் கண் விழித்திருப்பாளோ?
குழந்தை காப்பாளார் வந்திருப்பாரோ?
“எல்லாம் அவளுக்காக” !
“அவளைப் படிக்க வைக்க”
“வசதியான வாழ்க்கை அமைக்க”
என சமாதானப்படுத்திக் கொண்டாள் அலுவலகத்தில்.
வீட்டில் விழித்தெழுந்த குழந்தை
அம்மாயில்லாத படுக்கையறை கண்டு
அஞ்சினாள்
வாசல் மூடியிருந்தைக் கண்டு கலங்கியவளுக்கு
நினைவு வந்தது
“அம்மா ஆஃபிஸ் போய்ட்டாங்க”
அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கிய
தருணம் மறந்து
அச்சத்தால்
அரண்டும்
மிரண்டும்
“கதவிற்குப்  பின் காத்திருந்தாள்”
பட்டினியோடு
“ஒரு கப் பாலுக்காக”
கண்ணில் படவில்லை
இன்னும் காப்பாளர்!

           — திருமதி. சாந்தி சரவணன்