நினைவூட்டல்
மலர்களின் வாசம்
மறந்தோம்!
வண்டுகளின் ரீங்காரம்
மறந்தோம்!
குயிலின் குரலோசை
மறந்தோம்,
மூங்கில் இசையை
மறந்தோம்!
மரங்களின் நிழலை
மறந்தோம்!
அலையின் ஓசை
மறந்தோம்!
மழையின் ஈரம்
மறந்தோம்!
மலையின் பசுமை
மறந்தோம்!
அருவியில் குளியல்
மறந்தோம்!
தென்றலின் தொடுதல்
மறந்தோம்!
காற்றின் மொழியை
மறந்தோம்!
இயற்கையை ரசிக்க
மறந்தோம்!
மழலையின் மொழியை
மறந்தோம்!
இணையரின் ஸ்பரிசம்
மறந்தோம்!
தந்தையின் வலியை
மறந்தோம்!
தாயின் பாசத்தை
மறந்தோம்!
நண்பனின் நேசம்
மறந்தோம்!
நாட்படு பாசம்
மறந்தோம்!
மனிதனின் இதயம்
மறந்தோம்!
மனிதத்தை மறந்தோம்!
மறந்தோம்
வரிசை
வரிசையில் நின்றேன்
பள்ளியில் பயில்வதற்காக
வரிசையில் நின்றேன்
கல்லூரியில் கற்பதற்காக
வரிசையில் நின்றேன்
அலுவலகத்தில் வேலையில் சேர
வரிசையில் நின்றேன்
கோயிலில் கடவுளின் தரிசனத்திற்காக
வரிசையில் நின்றேன்
ரேஷனில் அரிசி வாங்க
வரிசையில் நின்றேன்
தியேட்டரில் படம் பார்க்க
வரிசையில் நின்றேன்
கையேந்தி பவனில் உணவு உண்ண
வரிசையில் நின்றேன்
வாக்குச்சாவடியில் வாக்களிக்க
வரிசையில் நின்றேன்
ஆஸ்பட்டலில் அனுமதிக்காக
வரிசையில் நின்றேன்
சுவாசிக்க ஆக்ஸிஜனுக்காக
வரிசை
வரிசை
வரிசை
வரிசையில் நிற்பது
எனக்கு ஒன்றும் புதிதல்ல
இன்றும் நிற்கிறேன் வரிசையில்
“எனது தகனத்திற்காக”
இடம் கிடைக்குமா……..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


வரிசை கவிதை அருமை தோழர்.
வாழ்விலும் சாவிலும் வரிசை.. 💐👏👏
அருமையான வரிகள் தோழர்.💐👌