முட்டாள்
பைத்தியம்
திமிர் பிடித்தவன்
சுயநலவாதி
தற்பெருமைக்காரன்
சோம்பேறி
கடன்காரன்
கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை தெரியவில்லை…
அன்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளும் பேசத்தெரியாத அம்மாவிற்கு!