மு. முபாரக் கவிதை…துணி துவைத்து கொடுக்கிறார்கள்
பாத்திரம் கழுவி கொடுக்கிறார்கள்
குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்,
வயதான தாய்மார்களுக்கு வளர்ப்பு பிள்ளையாகிறார்கள்,
ஏழைப் பெண்களுக்கு இலவசமாய் திருமணம்
செய்துவைக்கிறார்கள்,
வயலில் இறங்கி
விவசாயிகளுக்கு களை எடுத்து உதவி செய்கிறார்கள்…
கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு நடத்துகிறார்கள்,
மட்டைப்பந்து விளையாடும்
சிறுவர்களுக்கு  கிரிக்கெட் மட்டையும் பந்தும் வாங்கித்தருகிறார்கள்,
கோவிலுக்குள் நுழைந்து திடீர் பக்தர்களாய் மாறிவிடுகிறார்கள்,
பேருந்தில் தாயோடு பயணிக்கும் குழந்தைக்கு சாக்லெட்டோடு முத்தத்தையும்
கொடுக்கிறார்கள்…
தேர்தல் முடிந்ததும் யாராகவோ மாறிவிடும் வேட்பாளர்கள்!
மு.முபாரக்