மு.முபாரக் கவிதை…அதிபுத்திசாலிகள் ஆளும்
தேசத்தில் அதலபாதாளத்தில்
விழுந்து கிடக்கிறது
விவசாயிகளின் வாழ்க்கை …
கேட்டும் கிடைக்காத உரிமைகள் கேலியாய் நிற்கிறது தலைநகரத்து வீதிகளில்,
மான் வளர்ப்பதற்கும் மயில் வளர்ப்பதற்கும் நேரம் இருக்கும்
தேசத் தலைவர்களுக்கு
விவசாயிகளின் குறை தீர்ப்பதற்கு நேரமில்லை…
அகிம்சையை போதித்தவன் வாழ்ந்த தேசத்தில் அடியும் உதையும் தவறாமல்
கிடைக்கிறது…
அப்பாவிகளின் வாழ்வினில் ,
கொண்டாட வேண்டியவர்களை
திண்டாட வைக்கும் புதிரான மகுடங்கள்,
நடிகைகளுக்கு குழந்தை பிறந்தால் தலைப்புச் செய்தியாக்கும்
ஊடகங்கள்,
பாரத தேசத்தின் பிள்ளைகள்
பசியால் மடிந்து கிடைக்கையில் மயக்கத்தில் விழுந்து கிடக்கின்றன …
எந்தச் சலனமுமில்லாமல்,
விவசாயிகளின் வேதனைகள் தீரும் வரை சாபமே இந்த தேசத்தின் தலைமைகளுக்கு!
Image
மு.முபாரக்