மு. முபாரக் கவிதை…பள்ளிக்கூடம்
திறப்பதை தள்ளிவைத்தார்கள்…
கல்லூரிகள் திறப்பதை
தள்ளிவைத்தார்கள்…
தொழிற்சாலைகள் திறப்பதை
தள்ளி வைத்தார்கள்,
விவசாய விளைபொருட்களை
பொது இடங்களில்
விற்பனை செய்வதை தள்ளிவைத்தார்கள்,
திரையரங்குகள் உணவுவிடுதிகள் திறப்பதை
தள்ளிவைத்தார்கள்,
காரணம் கேட்டால் கொடிய
நோயொன்று பரவுவதாய் சொன்னார்கள்,
மூடியவற்றையும் திறந்த பின்னொரு நாளில்
மீண்டும் நோய் பரவுவதாய்
சொன்னதால் தள்ளிவைத்துவிட்டார்கள்…
நோய்த் தொற்றை,
நாளை வரப்போகும் தேர்தலுக்காக!

மு.முபாரக்