Mubarak Poems. முபாரக் கவிதைகள்

முபாரக் கவிதைகள்




1
மகனுக்கு கொடுப்பதற்கென
சில
பொம்மைகளை வாங்கி வைத்திருக்கிறேன்,
சொல்வதற்கென எத்தனையோ கதைகளை
சேகரித்து வைத்திருக்கிறேன்,
அழைத்து சென்று ரசிப்பதற்கு
புதுப் புது வானங்களை உருவாக்கி வைத்திருக்கிறேன்,
அன்பை நிரம்ப நிரம்ப அளிப்பதற்கு ஆயிரமாயிரம்
உறவுகளை உருவாக்கி வைத்திருக்கிறேன்…
இப்போது நீ செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை ,
தாயின் கருவறையிலிருந்து இவ்வுலகத்திற்கு வரவேண்டியது மட்டுமே!

2
இதற்கு முன்பு கண்டும் காணாமல் போன ஒருவன்
இப்போது மாண்டுவிட்டான்,
அவனைப் பற்றிப் பேச
புதுப்புது வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்,
அவனைப் பற்றி எழுத
யாரும் அறியாத சொற்களைப்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்,
அவனின் நிழற்படத்தில் துயரத்தை
கண்ணீர்த்துளியாய்ச் சொட்டிக்கொண்டிருக்கிறோம்…
அவன் இவற்றையெல்லாம் கண்டிருந்தால்
முன்பே மரணித்திருப்பான்,
நடித்தவர்களால் நடுத்தெருவிற்கு வந்தவனுக்கு
வேறொன்றும் எளிதில்லை… செத்துப்போவதை விட!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *