நூல் அறிமுகம்: முதல் வகுப்பு பொதுத் தேர்வு – சங்கர் மனோகரன்

நூல் அறிமுகம்: முதல் வகுப்பு பொதுத் தேர்வு – சங்கர் மனோகரன்

 

 

 

வாசிப்பு போட்டியில் பரிசாக கிடைத்த நூல். கல்வி குழந்தைகள் சார்ந்து படித்த புத்தகங்களிலேயே மிகவும் விறுவிறுப்பான என்னை ஈர்த்த கதை.

வாய் வழிச் சொல்லாக ஆசிரியர் ஒருவர் வரலாற்றை மாற்றி ஒரு புனைவை கட்டுகிறார். ஒரு மாணவன் அதை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறான்.ஏதோ சாட்டை படம் பார்ப்பது போன்ற காட்சிகள் மனதில் வந்து சென்றன.

வகுப்பறையில் மாணவர்களின் மனநிலை என்பது ஆசிரியர் எது கூறினாலும் அதற்கு தலையாட்டி விட்டு சென்று விட்டால் தப்பித்து விடலாம் என்பதே ஆகும். கேள்வி கேட்பதை ஏற்றுக் கொள்வார்கள் அதற்கு தானே ஆசிரியர்கள்.

ஆனால் அதே ஆசிரியரிடம் நீங்கள் சொல்வது தவறு என்று எதிர்வாதம் பிடித்தால் நிலை என்ன ஆகும்.எல்லா ஆசிரியரும் ஒரே குணம் கொண்டவர்கள் அல்ல தானே.
அப்படி ஒரு ஆசிரியருக்கும் மாணவனுக்குமான உரையாடல் தான் இந்த கதை. நடைமுறை வாழ்க்கையில் நமக்கு கல்வியானது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை போதிக்க வழிமுறைகள் இன்றைய சூழலில் உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். வெறும் புத்தகத்தை மட்டுமே நம்பிக் கொண்டு அல்லது ஒரு வட்டத்தை வைத்து அந்த வட்டத்திற்குள்ளாகவே நமது கல்வியை சுருக்கி விடக்கூடாது என்பதும் அவசியமாகிறது.

வாசிக்க,யோசிக்க, ஆலோசிக்க நல்ல கதை. நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கதை.

கதையின் முடிவில் தாஜ்மஹாலை கட்டியவர் யார் ஆசிரியரின் கேள்விக்கு முதல் வகுப்பு பொதுத் தேர்வில் அந்த மாணவன் என்ன பதில் அளித்து இருப்பான் என்று வாசித்து அந்த மாணவனின் பதிலை பெற்றுக் கொள்ளுங்கள்.

நூல்: முதல் வகுப்பு பொதுத்தேர்வு
ஆசிரியர்: அண்டனூர் சுரா
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: 50
பக்கங்கள்: 56

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *