இந்த புத்தகம் நமது அனைவருக்கும் மிகவும் விரும்பும் எழுத்தாளர் எல்லோர் மனதிலும் இருக்கும் அன்பு நண்பர் முகில் அவர்களுடையது ஆம் இந்த ஆண்டு அவரின் வெளியீடாக வந்திருக்கும் நூல் இந்த காதல் சரித்திரம்..
இப்ப வரும் அப்ப வரும் என்று சீக்கிரம் வந்து சேர்ந்தது ஒரு திரைப்படத்திற்கு காத்திருக்கும் ரசிகர் போல நாங்கள் எல்லாம் காத்திருந்தோம் பெற்றோம் மிகச் சிறப்பான புத்தகம் என்றுதான் தோன்றுகிறது..
காதல் என்றால் ஒரு உணர்வையும் ரொமான்ஸும் இருக்கும் என்று காத்திருந்தோம் ஆனால் அதையும் தாண்டி உணர்வுகளுக்காக போராட்டமும் புரட்சியும் நிறைந்த உண்மை மனிதர்களின் காதலை படம்பிடித்து காட்டுகிறார் ஆசிரியர்…
இந்த புத்தகம் உண்மை காதலை உலகுக்கு காட்டிய புத்தகம் என்றுதான் சொல்ல வேண்டும் ஆரம்பமே அமர்க்களமாகக தொடங்குகிறது..
மகாநந்தியா சார்லோட்..
ஒரு ஓவியன் உலகை வளம் வந்த கதை.. தன் காதலுக்காக அவர் பயணம் செய்த தூரம் கொஞ்சநஞ்சம் அல்ல மிக தூரம் அத்தனை வசதிகள் இருந்தும் இன்றைய காலத்தில் யாரும் செய்ய தயங்குகிறோம் பக்கத்து தெருவில் உள்ளவர்களை கூட பார்க்க தயங்கும் மனம் ஆனால் இந்த காதல் 7000 மைல் தூரம் அதுவும் சைக்கிளில் பயணம் இது எல்லாம் சாத்தியமா என்று யோசிக்க வைக்கும் உண்மை காதல் என்றும் ஒரு படி மேல் தான் என்று உலகிற்கு உணர்த்திய உன்னத காதல் டெல்லியில் இருந்து ஸ்வீடன் பயணம் அதுவும் சைக்கிளில் காதல் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் அதுவே காதல்..
போரிஸ் அன்னா கோஸ்லோவ்..
காதல் கொஞ்ச நாட்கள் காதல் தான் ஆனால் ஆழமான காதல் என்று தான் சொல்ல வேண்டும் பல வருடம் கடந்தாலும் அந்த காதல் வென்றது என்றுதான் சொல்ல வேண்டும். வேறு வேறு கோணத்தில் அவர்கள் சென்றாலும் அவர்களின் காதல் இறுதி அத்தியாயத்தில் ஒன்று சேர்ந்தது உண்மையான காதல் வயதான காலத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட காதல் காதலர்கள்..
ரிச்சர்ட் ஸ்விவிங் மைல்ட்ரெட்..
இந்தக் காதல் இனவெறி தலை தூக்கி எல்லா இடங்களிலும் நடந்த காலத்தில் இரு நிறத்தவரின் காதல் அவர்களின் பல கஷ்டங்களை கொடுத்து நாடே எதிர்க்கிறது இந்த நிறம் மாறிய காதலால் எத்தனை முறை நீதிமன்றம் போனாலும் வென்று வருவதற்குள் அவர்களின் பாதி நாட்கள் இதிலே போனது என்று தான் சொல்ல வேண்டும் தனது சொந்த நாட்டில் தான் வாழ வேண்டும் என்று அவர்களின் போராட்டம் வென்று அவர்களும் வாழ்ந்து அவர்களின் காதலையும் வாழ வைத்தார்கள்..
பகவான் சிங் மாய்னி ப்ரிதம்கவுர்..
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் இந்த காதல் நொறுங்கியது மீண்டும் ஒன்று சேர்ந்தது பல இடர்பாடுகள் காதல் கரை சேர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்..
செரெட்ஸகாமா ரூத் வில்லியம்ஸ்..
இந்த காதல் தான் போராட்டமும் புரட்சி முளைத்த காதல் ஒரு இசை நிகழ்வில் உண்டான காதல் இந்த உலகமே பேச வைத்தது என்று தான் சொல்ல வேண்டும் ஒரு நாட்டின் இளவரசனுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சாதாரண மனிதனின் காதல் என்ன ஆயிருக்கும் யோசிக்க வைக்கிறது காதலில் வென்று வென்று மீண்டும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெறுவது எல்லாம் யாரும் நிகழ்த்தாத நிகழ்வு சினிமாவில் மட்டுமே நாமெல்லாம் கண்டிருப்போம் இது உண்மை காதல் உலகையே வென்ற காதல் இவர்களின் காதல்..
மாரட்டின் பேட்ஸ் அன்னாஸ்வான்..
இவர்கள் காதல் உண்மையில் உயர்ந்த காதல்தான் உயரம் கூட ஒரு மனிதனுக்கு இடைஞ்சல்தான் ஆண் உயரம் என்றாலே எல்லோரும் யோசிப்போம். ஆனால் இந்த இருவரும் உயரமானவர்கள் என்றால் யோசிக்க வேண்டும் உலகில் உயரமான கணவன் மனைவிக கின்னஸ் ரெக்கார்டு கூட படைத்து விட்டார்கள் இவர்கள் அப்படிப்பட்ட காதல் உயர்ந்த காதல் உலகமே அண்ணாந்து பார்த்த காதலையும் விக்டோரியா மகாராணி அன்னாந்து பார்க்க சிரமப்பட்டார் என்று சொல்கிறார் ஆசிரியர் உயரமான காதல் இந்த காதல் வாழ்க்கையை அழகாக மாற்றிய காதல் இது.. காதலிக்கு சிலை வைத்த காதலர்..
ஜேன் பேணி..
இவர்களின் காதல் ஒருவரின் காதல் என்ன செய்துவிடும் என்று கேள்விக்கு பதில் இவர்கள்தான் வாழ்க்கையில் துவண்டு போனவர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டி அவளை தங்க மங்கையாக உலகுக்கு மாற்றிக் காட்டும் என்பதை சொல்லியது இவர்களுடைய காதல்..
சத்யஜித் ரே பிஜோயா..
அலைபாயுதே கதை இதிலிருந்து உருவானது தான் என்று எனக்குத் தோன்றுகிறது உண்மையா பொய்யா நான் அறிவேன்ஒ ரு இந்திய திரைத்துறையே எல்லாவற்றிற்கும் கடவுளாக பார்க்கும் மனிதரை அவரை வழிநடத்துவது அவரை செதுக்கியது அவரின் காதல் மனைவி என்ற வாசிக்கும் போது காதல்தான் ஜெயிக்கிறது என்று காட்டுகிறது ஒரு மனிதனின் சிந்தனையில் திரையைப் பற்றியும் வாழ்நாள் சாதனையும்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் மனதில் இப்படிப்பட்ட காதலா என்று யோசிக்க வைக்கிறது..
மிகப்பெரிய சாதனை படைத்த மனிதர்களின் காதலை வாசிக்கும் போது ஒரு இதமான உணர்வு நமக்குள் தெரிகிறது..
எல்லா காதலையும் சொல்ல விருப்பம் தான் இன்னும் பெண் குயின் காதல்கள் என்று கொஞ்சம் மட்டுமே இருக்கிறது காதல் சரித்திரம் வாங்கி அதை உணருங்கள்என் காதல் உணர்ந்த தருணத்தை விட இன்னும் அழகாக உணருவீர்கள் இந்த காதல் சரித்திரத்தை அற்புதமான உண்மை காதல்கள் நிறைந்த புத்தகம் இது.. இன்னும் பல பாகங்கள் இது தொடரும் என்று என் மனதில் தோன்றுகிறது காதல் சரித்திரம் வளர வேண்டும் வேண்டும்..
இறுதியாக எனக்கு ஆசிரியரிடம் ஒரு சிறு கேள்வி உங்களின் சரித்திரம் எப்போது வரும் முகில் சரித்திரம் என்று நீங்கள் படைத்திருக்கும் அனைத்து புத்தகங்களும் சரித்திரங்களாக உள்ளன அந்த சரித்திரத்தில் உங்களை மிகவும் கவர்ந்த சரித்திரமாக மனதை மிகவும் நேசித்த மிகவும் பாதித்த ஒரு மிகப்பெரிய தொகுப்பாக படைக்க வேண்டும் சரித்திரத்தின் சரித்திரம் எல்லாம் கலந்த கலவையாக வாசியுங்கள் உண்மை காதலை உணருங்கள்..
நூலின் தகவல்கள்:-
நூல் : காதல் சரித்திரம்
நூலாசிரியர் : முகில்
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
விலை : ரூ. 288/-
பக்கங்கள் : 208
நூலறிமுகம் எழுதியவர்:-

நடராஜன் செல்லம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

