முருகம்மா (Murugamma) – நூல் அறிமுகம்
ஒரு சில புத்தகத்தில் சமூக பார்வையும், நிறைய பிரச்சனைகள் குறித்துப் பேசுவதாக அமையும். இந்தப் புத்தகத்தில் இருக்கும் பக்கங்கள் குறைவாக இருந்தாலும், அதில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் பத்து தலைப்புகளும் சிறுகதை தொகுப்பாக கொண்டு அமைந்துள்ளது. இதில் முதல் சிறுகதை தலைப்பில் வரும் இரு பாதங்கள் உள்நோக்கி மடங்கியும் முழங்காலுக்கு கீழே சிறுத்து இருக்கும், ஒரு பெண்ணின் பெயர்தான் முருகம்மா. அவளுக்கு நடக்கும் அநீதியை பேசும் கதையில், அவளிடம் மட்டும் முடிவுகளை கேட்கவில்லை என்று ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் அவலங்களை மையமாக வைத்து எழுத்தாளர் கூறுகிறார்.
” இயற்கை வளங்களை பாதுகாப்போம், கனிமவளங்களை பாதுகாப்போம்” என்று பேசிக்கொண்டு நகரமயமாக்குதல் கிராமங்கள் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த சிறுகதையில் உண்ணாமலை என்ற பெண் சிரித்துக்கொண்டே தேவிமலையை பார்த்துக் தேடிக்கொண்டிருந்தாள்.
மாதம்மா என்று சிறுவயதில் நடந்த திருமணத்தில் நடந்த விளைவு, பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருக்கும் சரோஜாம்மாள், அதை கோபத்துடன் கடந்துசெல்லும் தாஸின் பீடியின் புகைகள் குபுகுபு என்று வெளியேறியதும் இந்த மாதம்மா சிறுகதையில் இருக்கிறது.
” செருப்பாலே அடிப்பேன்” என்று அதிகம் பேசும் வார்த்தையாக மாயவனிடம் பார்க்கலாம். அவன் அணியும் செருப்புகள், அவனுக்கு சரியான பதில்களையும் கொடுக்கும். நான் அனைவரும் ஒன்றுதான் என்பதை நெஞ்சில் மீது விழுந்த செருப்பு உணர்த்தும் சிறுகதையும் இருக்கிறது.
” ஏல சந்திரா போராட்டம், கீராட்டம் பண்ணுன அவ்வுளதான் பார்த்துக்கோ” என்று ஆற்றில் மணல் எடுக்கும் நபர்களை எதிர்த்து போராடிய சந்திரன். பின்பு அவரே வறுமையில் விழும்பில் சிக்கி மணல் எடுக்கும் காட்சிகள் மணல்மேடு சிறுகதையில் இருக்கிறது.
பப்புன் உரக்கபேசும் நாடகக்குழு குழுவினர்களின் சிறுகதை, யாருக்கும் சமரசமில்லாமல் கருத்துகளை மக்களிடம் எடுத்து சொல்லும் நாடகக்குழுவின் பயணம் குறித்து ஒத்திகை என்ற சிறுகதையில் இருக்கிறது.
நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும்போது நபர்கள் சார்ந்து எப்படி வித்தியாசம் என்று நாகன் சொல்லும் கதையின் களம் சிறுகதையில் இருக்கிறது.
ருக்குமணி பாட்டியின் வாங்கிய உதவித்தொகை நிறுத்தியதும், அவளுடைய போராட்டம் வெற்றிபெற்றதா என்ற சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.
அவசரமாக செல்லும் போதும், வாழ்க்கையில் கடந்து செல்லும் மேஜையின் நினைவுகளோடு, தனக்கு நடக்கும் அநீதிகளை கொண்டு நிலத்தைப் பார்த்துக்கொண்டு செல்லும் விஜயனின் உக்கிரம் நிறைந்த சிறுகதையும் இருக்கிறது.
நடைவியாபாரிகளாக பயணிக்கும் கோலமாவு விற்கும் பூங்காவனம், தன் குழந்தைகளின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக போராடும் அம்மாவாகவும், கார்ப்பேரேட் சூழலில் வணிகமயமாகும் உலகத்தில் பிடியில் சிக்கி தவிக்கும் சாதரண மக்களின் கோபம் நிறைந்த சிறுகதையும் இருக்கிறது.
சாதாரண மக்களின் வாழ்க்கைமுறை, இந்த சமூகத்தின் அவலநிலை, சாதீயம் தொடர்பான வேறுபாடுகள் குறித்து இந்த சிறுகதையில் எழுத்தாளர் பேசியிருப்பதை காண முடிந்தது. எழுத்தாளர்.சங்கரின் சமூக பார்வை தெளிவாக எழுத்துகளில் தெரிகிறது. மொத்தித்தில் சிந்திக்கும் புத்தகம்.
நூலின் தகவல்கள் :
நூல் : முருகம்மா (Murugamma)
ஆசிரியர் : சங்கர் (Sankar)
பக்கங்கள் : 48 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ₹40.00
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/murugamma/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.