மனிதரின் சோகத்தை துடைப்பதில் இசைக்கு இணை ஏதுமில்லை – ஸ்ரீ | நூல் விமர்சனம்

தனிமைக்கால தவத்தில் புத்தகங்களே வரங்கள்

நூலின் பெயர்: இசையாலானது..

நூல் ஆசிரியர் : கிருஷ்ணா டாவின்சி

உலகின் காற்று மண்டலம் வெறும் காற்றால் நிரம்பி இருக்கவில்லை. இசையால் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொறு மனிதரின் சோகத்தை துடைப்பதில் இசைக்கு இணை ஏதுமில்லை. சகமனிதனின் துக்கம் துடைக்கும் இசைக்கலைஞனின் துக்கம் உங்களுக்கு தெரியுமா..

இந்த நூலை வாசித்துப்பாருங்கள்..

இசைகூட மீட்காத சோகத்தில் தள்ளிவிடப்படுவீர்கள். இசை உலகை ஆட்சி செய்த, இசையால் உலகை கட்டிப்போட்டிருந்த 14 இசை மேதைகளின் வாழ்க்கை சோகங்களை சொல்கிறது இந்த நூல்..

தன் இறுதி நாட்களில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் சிரமப்பட்ட இசை மேதைகளிற் முதல்வன் என அறியப்பட்ட மொசார்ட். தன் ஒன்பதாவது சிம்பொனி இசைக்கப்பட்டபோது எழுந்த கைத்தட்டலை கேட்க முடியாமல் கேட்கும் திறனை இழந்த பீத்தோவன். காதல் என்ற பெயரில் ஒரு பாலியல் தொழிலாளி போல் வாழ்ந்த சிட்டுக்குருவி என அழைக்கப்பட்ட எடித் பியாஃப். 400 கிமீ நடந்த செபாஸ்டின் பாக்..

கூடு இல்லாமல் அலைந்த ரிச்சர்ட் வேக்னர் இப்படி 14 மேல்நாட்டு இசை மேதைகளின் பால்யகால, வாழ்நாள் சோகங்களை நம் கண் முன் விரித்து செல்கிறது இந்த நூல். 14 இசைமேதைகளில் நம் காலத்தில் வாழ்ந்த மைக்கேல் ஜாக்சனும் அடங்குவார். இவர்களின் இசை எல்லாம் அவர்களின் சுவாசம் தான் என அறியும்போது அவர்களின் இசை மீது தனிப்பற்று வருகிறது..

வாசியுங்கள்..

உலகின் புகர்பெற்ற இசைகள் என்பன எத்தனை துயரங்களுக்கு இடையில் பிறந்தது என அறிவீர்கள்..

பக்கம்: 96
விலை: ரூ 50
வெளியீடு: பாரதி புத்தகாலயம்