ட்டுரை எழுத அமரும் தருணத்தில், இந்த சனிக்கிழமை (08 08 2020), பிற்பகல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு துயரச் செய்திகள் வந்தது இன்னும் மேலோங்கி இருக்கிறது. அன்பின் அன்பான மூத்த தோழர்கள் இருவர் காலமாகி விட்டனர். ஒருவருக்கு 97 வயது. மற்றவருக்கு 77. இருவரும் இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க உன்னத மனிதர்கள். உழைப்பாளி மக்களுக்கான அயராத கடுமையான பணிச்சூழலிலும் கூட வாசிப்பைக் கை விட்டு விடாதவர்கள். இடதுசாரி பாதையில்  ஏராளமான இயக்கங்களை வழி நடத்தி,  சிஐடியு அமைப்பின் ஒப்பற்ற நிர்வாகியாக மிக அசாத்திய இயக்கங்களில் பங்குபெற்று வழி நடத்திய தோழர் கே வைத்தியநாதன் அவர்கள்  திருமணம் செய்யாமல் பாட்டாளி வர்க்க நலனுக்காக ஓர் அர்ப்பணிப்பு வாழ்க்கை மேற்கொண்டவர். ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிலாளியாக இருந்து பின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகியாக செயல்பட்டு, மார்க்சிய தத்துவார்த்தத்  தேடலில் திளைத்து மறைந்தவர் தோழர் ஜனார்த்தனன் எனும் ஜனாஇருவருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

Image

தோழர் ஜனா, இந்தத் தொடரின் தொடர் வாசகராக இருந்தவர். இரண்டாம் வாரம் வாசித்ததும், ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்என்று வாட்ஸ் அப்பில் பதில் போட்டவர். பல்வேறு படைப்பாளிகளது ஆக்கங்களை அன்போடு வாசித்து, அவரவர்க்கு உற்சாக மொழியில் கடிதம் அனுப்பி விடுவார்.  

2015 டிசம்பர் மாதத்தில் சென்னை கடும் வெள்ளத்தில் அடைந்த பாதிப்புகள் குறித்த, ‘இனி ஒரு போதும்என்ற கவிதை வாசிப்பைக் காணொளி பதிவில் பார்த்த ஜனா, தங்கள் குடும்பம் சந்தித்த கஷ்டம், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திரும்பியது என்ற பின்னணியிலும், அவரது மகள் அனிதாவும், மகன் நவீனும் நிவாரணப் பணிகளில் சுறுசுறுப்பாக இறங்கி ஆற்றிய சேவையை, அதில் தாமும் இணைந்ததை எல்லாம்  விரிவாக மின்னஞ்சலில் எழுதி அனுப்பி இருந்தார்.  

மகாகவி பாரதி கொண்டாடியான அவர், 2008 பிப்ரவரியில் தமது மகன் திருமணத்திற்கு வந்திருந்தோர்க்கு பாரதி கவிதைகள் வழங்கி மகிழ்ந்ததை, பிறிதொரு சமயம் எழுதி இருந்தார். வேறொரு தருணத்தில், வெயில் பற்றிய கவிதையை வாசித்து விட்டுஉலக இருப்பின் ரகசிய மையம் என்று பதில் எழுதினார். ரசனை எத்தனை பெரிய பேறு என்று அவர் சொல்வதுண்டு.

இசைப்பாடல்களின் உபாசகர் தோழர் ஜனா. ‘பாரிமுனை கச்சாலீஸ்வரர் அக்கிரகாரத்தில் 1950களில் உடுப்பிக்காரர் வீட்டு ஜன்னல் சுவரில் அமர்ந்து கேட்டிருக்கிறேன்என்று அவர் கொடுத்த சிறிய பட்டியலில் ‘கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்‘ மற்றும்ஏகாந்தமாம் இம்மாலையில்‘ (அவன்: 1953), ‘அமைதி இல்லாதென் மனமே‘  (பாதாள பைரவி)…. எல்லாம் இருந்தன எம் ராஜா, ஜிக்கி, கண்டசாலா என்ற வரிசையிலான பாடகர்கள் மட்டுமல்ல, இப்போதைய குரல்கள் வரை இசையின்பத்தை அள்ளிப்பருகும் பரந்த ரசிக உள்ளத்தை அவர் பெற்றிருந்தார் (அவரை மிகவும் கவர்ந்த ஒரு பாடல் பின்னர் விவாதிப்போம்).  பிடித்தமான பாடல்களைஅந்தக் காலத்தில் விசில் சத்தத்திலேயே பாடுவேன் தோழர் என்று கூட சொல்லி இருக்கிறார். அழகாகச் சீட்டி அடித்தும் காட்டி இருக்கிறார்.

Image
தோழர் ஜனா

பிடித்தமான பாடலை விசிலில் கொண்டுவரும் வேட்கை யாருக்குத் தான் இருந்திராதுஆனால், விசில் பாட்டுக்கு வீடுகளில் பொதுவாக எதிர்ப்பு இருக்கும். ஒழுக்க வரையறையில் விசிலடிப்பது வராது. அது என்ன வீட்டுக்குள்ள விசில் அடிக்கிறது என்று அடிக்க வந்துவிடுவார்கள்.  விசில் அடித்து நண்பர்களை அழைக்கலாம், தன்னின் வயது மூத்தவரை அழைப்பது அவரை ஏளனப்படுத்துவது என்று பார்க்கப்பட்டது. பொதுவெளியில் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்ளும் சிலர் விசில் ஒலியை  எழுப்புவது, இசையின் ஆர்வத்தோடு விசில் அடிப்பவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி விடுகிறது

குழலில் சுருதி பார்த்து ஊதுவது போல, விசில் ஒலியில் உரிய சுருதியில் அநாயசமாக பாடலைக் கொண்டு வருவோரைப் பார்க்கவே உற்சாகமாக இருக்கும்சிவபிரசாத் என்பவர் கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் முதல் தேசிய கீதம் வரை விசில் ஒலியில் இசைப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஸ்வரத்தில் சுருதி விலகாமல் பாகவதர் நிற்பதுபோல் இந்த மனிதர் விசிலில் நின்று விளாசுவது வியப்புக்கு உரியது

நீரோடும் வைகையிலே‘ (பார் மகளே பார்) பாட்டின் பல அழகுகளில் சரணங்களுக்கு இடையே மற்ற இசைக்கருவிகளினூடே ஒலிக்கும் விசில் எத்தனை அழகு. எம் எஸ் வி அவர்களே பாடல் ட்யூன் முழுவதையும் விசிலில் பாடிக் காட்டினாராம், கேட்ட சிவாஜி கணேசன், ‘பாட்டு மொத்தமும் விசிலில் இருந்துவிட்டால் எப்படி, கவிஞரை எழுதச் சொல்லுங்கள்!’ என்று சொன்னாராம் என ஒருவர் எழுதி இருந்தார்

Neerodum Vaikaiyile | HD Video Song | Paar Magale Paar Movie ...

https://www.youtube.com/watch?v=1BnaSj7D03Q  

பாட்டின் தொடக்கமே விசில் தான். கணேசனின் புருவத்தில் தெறிக்கும் கேள்விக்கு ஏற்ற விசிலா, விசிலுக்கு ஏற்ற பாவங்களா என அமையும் பாட்டில் தாலாட்டையும் விசில் இசைக்கும் இன்பம்….ஆஹா

ஒரு சுதந்திர மனத்தின் எழுச்சிக் குரலாக விசில் பிறக்கும் போது, ‘கேள்வி பிறந்தது அன்று‘ (பச்சை விளக்கு) என்ற பாடல் ஒலிக்கிறது!

Kelvi Piranthathu Song | Pachai Vilakku Scenes | SSR seek MR ...

https://www.youtube.com/watch?v=j7_xxfl2PT8&t=130s  

ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோஎன்ற கேள்விக்கு, ‘இன்று கிடைத்தது பதில் ஒன்று யாரும் இங்கு பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டுஎன்று எத்தனை நச்சென்று எடுத்துரைக்கும் பாடல்…. ‘படித்த மாந்தர் இருக்கும் நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமைஎன்ற துள்ளல் வரிகள், திரையில் அன்றைய ரயில்வே தொழிலாளி பாடியது, இன்றைய காலம் ரயில்வே நிறுவனத்தையே தனியாருக்கு விலைபேசுவதில் கொண்டு நிறுத்தி இருக்கிறது! கேள்விகள் இப்போது நிறைய எழுப்ப வேண்டிய தேவையும் இருக்கிறது. இல்லையென்றால், சீட்டியடிக்கக் காத்திருப்போர் வேறு யாராகவாவது இருக்கும்!

பாவ மன்னிப்பு படத்தில்தத்துவ தரிசனமாக நகரும் ‘வந்த நாள் முதல்….’ பாடலின் தொடக்கத்தில் காற்றில் நிகழும் விவாதப் பொருளாக விசிலில் பிறப்பது எத்தனை ரசமான அனுபவம்இதே காற்றின் ஓசை தான்,  பருவத்தின் துள்ளாட்டத்தில்நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா‘ (காதலிக்க நேரமில்லை) என்று கேட்கிறது. ‘எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடிஎன்ற அருமையான பாடல் நெடுக (சுமைதாங்கி) இன்னும் ஒயிலாகக் கொஞ்சிக் கொண்டே இருக்கிறதுநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் (சாந்தி) பாடலில் கேள்வி பதிலே நடக்கிறது விசிலில்ஜே பி சந்திரபாபு அவர்களின் கொண்டாட்டப் பாடலான ‘புத்தியுள்ள மனிதன் எல்லாம்‘ பாடலின் நுழைவு வாயிலில் மெட்டு முதலில் விசில் மூலம் தானே ரசிகரைச் சென்றடையும்

இன்னும் இன்னும் இருக்கின்றன விசில் இசை கலந்த பாடல்கள்…. எம் எஸ் வி அவர்களது சுகமான ஹம்மிங் இழைய பி சுசீலா பாடும்கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே‘ (நான் ஆணையிட்டால்) பாடல் உள்பட இன்னும் இன்னும் உண்டு பாடல்கள்.   ஒரே வரியின் தொடர் ரீங்காரமாக ஜெயசந்திரன் குரலில் ஒலிக்கும் ‘அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்பாடலில், ராஜாவின் அழகான கம்போஸிங்கில்  புல்லாங்குழல் இசையோடு சேர்ந்து கைகோத்து நடை போடுகிறது விசில் சத்தம்ஜேசுதாஸ் பாடல்களில் முக்கியமான ஒன்றான ஈரமான ரோஜாவே  (இளமைக் காலங்கள்) பாடலிலும் விசில் ஓசை காதலனது உணர்வுகளின் வெளிப்பாடாக இசையில் கலப்பதைக் கேட்க முடியும்.  

பத்தாண்டுகளுக்கு பிறகு விஜய் ...

ன் இளவயதில் மயிலாப்பூரில் குடி இருக்கையில், அடுத்த குடித்தனக்காரர் வீட்டில் பாட்டுக்குப் பஞ்சம் இராது. ஜெயா மாமி, சாமி பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே தான் வீட்டு வேலைகள் எல்லாம் முடிப்பார்கள். கர்நாடக இசை கேட்க வேண்டும், பாடல்கள் எது எப்போது ரேடியோவில் வரும் என்று தெரிந்து கொள்ளவென்றே அவர்கள் வீட்டில் வானொலி இதழ் வாங்கி வந்தனர். (இந்த இதழ் 1938 ஜூன் மாதம் 16ம் தேதி முதல் வரத்தொடங்கியது, ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் நிறுத்தப்பட்டு விட்டது என்று ஒரு கட்டுரையில் வாசித்த நினைவு). அதில் கட்டுரைகள் வரும். சென்னை, திருச்சி நிலையங்களில் நிகழ்ச்சி நிரல் தேதி, கிழமை வாரியாக  அச்சிடப்பட்டிருக்கும். நேயர் விருப்பம், ஒரு படப் பாடல்கள், நீங்கள் கேட்டவை, கச்சேரி விவரங்கள் எல்லாம் வெளியாகும். அதை எடுத்து வைத்துக் கொண்டு வாசிப்பதே அத்தனை இன்பமாக இருக்கும்.  அவர்கள் மகன் விஜயா எனும் விஜயராகவன் கல்லூரியில் விளையாட்டு வீரர். கல்லூரியில் விளையாட்டு இல்லாத போது, பக்கத்து போர்ஷனில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நான் போதாதா அவருக்கு, என்னோட வகுப்பில் சக மாணவர்கள் பெயரை, இப்போது போய்க் கேட்டாலும் சொல்வார், பெரிய ஆடிட்டராக இருக்கும் அவர்!  

விஜயாவின் சித்தப்பா பாபு, சரக்கு ரயிலில் கார்டு  ஆகப் பணியாற்றிய நினைவு. நல்ல சிரித்த முகம். டூட்டி இல்லாத நாட்களில் இங்கே லூட்டி அடிக்க வந்துவிடுவார்.  விசில் ஒலியில்  அவர் பாடுவதை விரும்பிக் கேட்டது மறக்க முடியாதது. அவர் ஓர் அருமையான பாடகர். ஒரு முறை ஏராளமான குடும்ப உறுப்பினர்கள் சங்கமமாக நிறைந்திருக்க, பாலமுரளி கிருஷ்ணா அவர்களது அற்புத கானமான ‘ஒரு நாள் போதுமா‘ (திருவிளையாடல்) பாடலை, தொடக்க ஆலாபனையில் இருந்து அத்தனை சுவையாகப் பாடி, இசைத் தெய்வம் நானடா என்று அவர் முடிக்கையில், மிக மூத்த மனிதர் ஒருவர் எழுந்து கண்களில் நீர் சொரிய, நீயே தாண்டா என்று வாழ்த்தினார்

Oru Nal Podhuma Video Song | Thiruvilaiyaadal Movie Songs | Sivaji ...

https://www.youtube.com/watch?v=IABeZ5TDYdc  

ராகமாலிகை பற்றி பேசிக்கொண்டிருந்தோமே, கே வி மகாதேவன் இசையில் அற்புதமான உருவாக்கம் இது! ஆஹா, ராகங்களின் பெயரால் சொற்களை நிரப்பி அந்தந்த ராகத்தில் அந்த இடங்களைப் பாடுவதைக் கேட்கும் இன்பம்…. ‘இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ’ என்ற அடியிலிருந்து, ராக்கெட்டில் இருந்து பிரியும் விண்கலம் போலஎழுந்தோடி’ மட்டும் விடுபட்டு, அது பின்பு மேலும் இரண்டாகப் பிளந்துதோடி’ என்று புறப்படும் ராக சஞ்சாரம், அட்றா, அட்றா போட வைப்பது அல்லவா? ‘மோகனச் சுவை நான் அன்றோ’ அடுத்த ராக்கெட், அதிலிருந்துமோகனம்’……அதன் பின் நேரே , கானடா….என் பாட்டுத் தேனடா…. பளிச்சென்று ஒரு லேண்டிங்: இசைத் தெய்வம் நானடா! 

ஹேமநாத பாகவதராக நடித்த டி எஸ் பாலையா அவர்கள் நேரே பாலமுரளி கிருஷ்ணா பாடுவதையே பார்த்து ரசித்துப் பிறகு தான் அந்தப் பாடல் காட்சியில் அப்படி பின்னி எடுத்தார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்த மிடுக்கு, செருக்கு மட்டுமல்ல, வாத்திய கோஷ்டியில் நடித்த ஒவ்வொருவரும் (பின்னால் தம்பூரா போடும் உசிலைமணியின் கன்னக் கதுப்புகள் உள்பட) என்னமாக மேலும் ரசிப்பின் ருசியைக் கூட்டி இருப்பார்கள்!

டிப்படை சங்கீத சாத்திரம் கற்காத போதிலும் (சீ, மடப்பயலே,ஞான சூன்யம் போடா உனக்கு சங்கீதமே வரல என்று பாணபத்திரரே விரட்டி அனுப்பிய ரகம்) இசை வாழ்க்கை தொடரில்  ராகமாலிகை பற்றியெல்லாம்  எழுதி இருந்ததைப் பார்த்ததும், வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் சிறந்த ஓவியரும், இசைப் பாடகருமான தேவா எனும் தேவநாதன் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருக்கிறார்.  டி எம் எஸ் பாடியகற்பகவல்லி நின் பொற்பதங்கள்பாடலை மயிலாப்பூர்காரர் யாராவது எழுதி இருப்பார் என்று நினைத்து விடாதீர்கள், அந்த அற்புத ராகமாலிகை பாடல் எழுதியவர் யாழ்ப்பாணம் வீரமணி எனும் இலங்கைக் கவிஞர் என்றும் எழுதி இருந்தார்.

 ‘ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் என்ற ரயிலின் நெடிய வழித்தடம், வங்கிப்பணியில் வடக்கே வேலை பார்க்கையில் பார்த்து வியந்து இருக்கிறேன், அப்படியான வடக்கு, தெற்கு நீண்ட இணைப்பு போல பல இசை பரிமாணங்களின் கோவையாக இருக்கிறதுஎன கட்டுரைகளை வருணிக்கிறார். ஜம்முன்னு ஏதோ தாவித் தாவித் தெரிந்ததை எழுதிக் கொண்டிருப்பவனுக்கு இதை விட வேறென்ன ஊக்கம் வேண்டும்!

ரயில் பயணங்களில் ஒலிக்கும் பாடல்கள் நூற்றுக் கணக்கில் விரிந்தவை. அவற்றில் பாடுவோரின் கதைகள் வித்தியாசமானவை. அடுத்த ஸ்டேஷனில் பேசுவோம்  அவற்றை. இப்போதைக்கு விசில் ஊதியாகி விட்டது

(இசைத்தட்டு சுழலும் ….)

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

6 thoughts on “இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. இசையுக்கும் விசிலுக்கமான இணைப்பை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் தோழர்! இசைக்கும், கதைக்குமான தொடர்பு தெரியுமா? 1960களில் இலங்கை வானொலியில் ‘இசையும் கதையும்’ என்றொரு சுவையான நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் ஒலிபரப்புவார்கள். அரை மணி நேர நிகழ்ச்சிதான். ஆனால் கேட்பவர்கள் காதை மட்டுமல்ல மனதையும் கட்டிப்போடும். மயில்வாகனன் அவருக்கே உரிய இனிய குரலில் கதையைச் சொல்லலிச் செல்வார். கதையின் சம்பவங்களுக்குப் பொருத்தமான தமிழ் திரைப்படப் பாடல்களைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்து இணைப்பார்கள். தமிழ் திரைப்பட பாடல்களுக்கும் இலங்கை வானொலிக்குமான உறவு அலாதியானது. அய்யோ! என் செய்வது? சிங்கள இனவெறிக்கு பலியானதில் தமிழ் திரைப்பட பாடல்களும் தான் என்பதை இன்றைய தமிழ்ச் சமூகம் அறியாது. உங்கள் இசைத் தொடர என் வாழ்த்துகள், வேணுகோபால்!🍀

  2. ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு பதிவுகள் இருக்கின்றன! இசையைக் குறித்த ரசிப்பும் ஒரு சுகமே!

  3. விறுவிறுப்பான நடை தோழர். செய்திகளும் அருமை!
    திரையில் நாயகன் தோன்றும் முதல் காட்சியில் அரங்கமே அதிரும் படி ரசிகன் ஊதூவானே விசில்! அதுபோல் உங்கள் எழுத்துக்களுக்கும் வாசகனாக விசிலடிக்கலாம் ..
    வாழ்த்துக்கள்!

  4. மிக மிக அருமையான ஒரு தொடர் இது இந்தக் கட்டுரை மிகவும் மனதை ஆக்கிரமித்து விட்டது ! ஒருநாள் போதுமா ஒலித்தது காதில் !ரம்மியமான இசைப் பயணம்! நன்றி!

  5. தோழர் ஜனா மறைவு எனக்கு அதிர்ச்சி அளித்த து அவருடன் வாட்ஸ் அப்பில் 19- 2 – 2020 பேசினே்ன் பேச்சு https://www.youtube.com/watch?v=1Dp88V6m8Tw&feature=youtu.be டி. எம் கிருஷ்ணா ஷேக் மெகுபுபா சேர்ந்திசை பற்றியே சுற்றியது எங்களது பேச்சில் அரசியலைவிட இசை பற்றியே அதிகமிருக்கும் . அவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *