காகவி பிறந்த நாளில் இந்த வாரத்திற்கான கட்டுரை எழுதுவதே ஒரு பரவசமான விஷயம் தான். தேர்ச்சியான இசை ஞானம் பெற்றிருந்த இசைவாணர் அவர். குயில் பாட்டில், (‘நாளொன்றில் நான் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ‘)  உவமைக்குக் கூட அவர் தாளக்கருவியை எடுத்துக் கொண்டதைப் பார்க்க முடியும் ! முன்னது, இசைக்கருவி. மற்றது தொழில் கருவி. இசையைத் தொழிலாகக் கொண்டிருப்போர்க்கு, தாளம் தொழில் கருவி. ‘ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுஎன்று வாழ்வோர்க்கு, தறி போன்ற எந்தத் தொழில் கருவியும் இசைக்கருவி ஆகிவிடும் சாத்தியம் உண்டு. இசையுடலாக, இசை உணர்வாக, இசை உயிராகக் கலந்து வாழ்ந்த ஒருவனால் தானே அப்படி எழுதி இருக்க முடியும் !

இந்த வரியை வாசியுங்கள்: “பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின் ஒரு துளி துண்டு நிலம்

2012 அக்டோபர் மாதம், தினமணி கதிரில் வந்திருந்த மனசாடுதல் என்ற அருமையான சிறுகதையின் முதல் வரி இது. மிகவும் ரசித்து, அதை இணையத்திலிருந்து எடுத்து, ஏராளமான நண்பர்களோடு பகிர்ந்து கொள்கையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது, அவர்களில் ஒருவர், இந்தக் கதாசிரியரை அறிந்தவர். ஒரே மருத்துவமனையில் வெவ்வேறு துறையில்  இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் இருவரும் ! துணை வேந்தராக இருந்த சுப மாணிக்கனார் அவர்களது தம்பி பெயரன் சுப திருப்பதி அவர்களை, அவரது படைப்பின் மூலம் சென்றடைந்தேன், நரம்பியல் சிறப்பு மருத்துவரான அவரது நட்பு வாய்த்த தருணம் அது.



அந்தக் கதை அவரது முதல் சிறுகதை, மகாகவியின் மீதிருக்கும் அளவற்ற காதலில்,  தமது 39வது வயதில் இதை எழுதினேன் என்று அவர் சொன்ன பதில் மறக்க முடியாதது. (பாரதி வாழ்ந்த காலம்:1882-1921: 39 ஆண்டுகள்). அண்மையில், No forwarding என்ற பெயரில் அவர் உருவாக்கி இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் நிறைய இளம் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களும், வேறு சிலரும் தமிழ் நூல்கள், குறிப்பாகத் திருக்குறள் பாக்கள் குறித்த உரையாடல் நடத்தி அசத்திக் கொண்டிருக்கின்றனர்

கடந்த வாரக் கட்டுரையை அதில் பகிர்ந்து கொண்டபோது, மிகவும் பரவசத்தோடு வெளிப்பட்ட சில எதிர்வினைகளுக்கு நன்றி உரித்தாகிறது

தில்லானா மோகனாம்பாள் நாவலில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள், கமாசு என்ற ராகத்தை, திரும்பத் திரும்ப சொல்லும்போது சுகமா, சுகமா என்று ஒலிக்கும் என்று சொல்லியிருப்பார், இசை வாழ்க்கை கட்டுரையும் படிக்க பரம சுகமாக இருந்தது என்று எழுதி இருந்தவர் பெயரைப் பார்த்தேன், சிங்காரவேலன்புளகாங்கிதம் என்ற உணர்வோடு அதே குழுவில் எழுதிய அன்பர், கமலநாத் எனும் விஞ்ஞானி, சிங்காரவேலனே பாட்டுக்கும், அதை எழுதிய நயத்திற்கும்மலைக்கோவில் படிக்கட்டுகளில் குழந்தைகள் குதித்தோடும் உவமை கையாண்டதற்குமாக ஆறு ஆஹா நாங்கள் சொல்கிறோம் என்று எழுதி இருந்தார். ஆர் எஸ் அதிகாரி திரு ராஜேந்திரன், இசை நுண்ணியது, அதில் ஊறி ஊறி இசைக்கலைஞன் கரைந்து போய்விட, நிறைவாக அங்கு இருப்பது இசை மட்டுமே என்கிறார். மருத்துவர் ரமேஷ் உருகிப் போயிருந்தார்.   

உன்னதமான இசைக் கலைஞர்கள் பற்றிய எளிய நினைவுகூரல் கடந்த வாரம் வாசித்த எண்ணற்ற அன்பர்களை ஈர்த்திருக்கிறது. நேரடியாக அழைத்துப் பேசியவர்களுக்கும், இங்கே இணையத்தில் பதிவிட்டுள்ளவர்களுக்கும் அந்த மகத்தான இசை மேதைகளின் நினைவில் மீண்டும் மீண்டும் நன்றி.

மகாகவி பாரதி மீதான ஈர்ப்பில், திருப்பதி அவர்களோடு வாய்த்த நட்பின் தொடர் விளைச்சலில் எத்தனை எத்தனை அருமையான நட்புறவுகள். முதுமையிலும் சிரமங்கள் பொருட்படுத்தாது, ஒவ்வொரு படைப்புக்கும், ஆடியோ பதிவு செய்து, நெகிழ்ச்சியுற உரையாடிக் கொண்டே இருக்கும் கரூர் மருத்துவர் சி ராமச்சந்திரன் அவர்களது விஷய ஞானமும், புத்தக வாசிப்பும், நினைவாற்றலும், தொடர்புள்ள பக்கத்தை அப்படியே வாட்ஸ் அப்பில் பகிரும் பேரார்வமிக்க தேடலும், உலகு இன்புறக் கண்டு காமுறும்  கற்றறிவும் அசாத்தியமானது. தோடி வாசிப்பில் திளைத்து, பெட்ரோமாக்ஸ் விளக்கேந்திச் சென்ற மிக எளிய மனிதனின் பாராட்டை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை மிகப்பெரிய விருதுக்கு சமமாக மதித்தாராமே என்று தழுதழுத்த குரலில் பேசி அனுப்பி இருந்தார் அவர்.

சிந்து பைரவி படத்தில், கடற்கரையில் வைத்து, இசைப்பாடகர் ஜேகேபி, பாரதியின்மனதில் உறுதி வேண்டும்பாடி முடிக்கவும், முதிய மீனவர் ஒருவர் அதை ரசித்துக் கேட்டு, அருகே வந்து, ‘ரொம்ப நல்லா பாடினீங்க சாமி, ஏதாவது கொடுக்கணும், நான் செம்படவன், என் கிட்ட என்ன இருக்கும்…’ என்று நெகிழ்ச்சியோடு ஒரு சங்கு மாலையை இடுப்பிலிருந்து எடுத்துக் கொடுக்கும் (அங்கே வயலின் இழைத்து எப்படி உருக வைத்தீர்கள், ராஜா?) காட்சி நினைவுக்கு வந்தது. சிவகுமார் அளவாக, அழுத்தமாக அந்த அன்பின் திணறலை வெளிப்படுத்தி இருப்பார்



https://youtu.be/8fW35x121og



கே ஜே யேசுதாஸ் மகாகவி எதிரில் நின்று பாடி இருந்தால், ஆரத் தழுவி இருப்பார் பாரதி. தாளக்கட்டிற்குள் பாவம் ததும்ப அவர் பாடிக்கொண்டிருப்பது, பாலாற்று சுடு மணலில் அந்நாட்களில் என் பாட்டி வயல் அறுவடைக்கு விடுவிடுவென்று போவதை நினைக்க வைக்கிறது. முதலில் ஒரு மிதமான கதியில் தொடங்கும் பாடல், வெயில் ஏற ஏற பத்தாணிப் பாட்டி எட்டி எட்டி வைக்கும் வேக கதியில் நிலைகொண்டு மணலை விட்டு ஊர்ப்புறத்தினுள் காலெடுத்து வைக்கும் இடத்தில் நிறைவடைகிறது. தனக்குத் தானே பேசிக்கொண்டு நடக்கும் அவள் மீது, ஆற்று நீரில் மூழ்கிப் பரவும் காற்றின் ஈரப்பதம் அங்கே இங்கே வீசினாற்போல, புல்லாங்குழல் இசை மட்டுமே மிகச் சில இடங்களில் பொருத்தமான வழித்துணை ஆலாபனை

பாரதியின் மகத்தான வேண்டுதல் சொற்களுக்கு மேலும் பொலிவூட்டும் குரல். ‘கனவு மெய்ப்பட வேண்டும்என்ற ஏக்கக் குரல், அடுத்து, ‘கை வசமாவதுஎன்ற பதங்களை  என்னமாக வசப்படுத்தி, ருசிப்படுத்துகிறார் கேஜே. ‘தரணியிலே‘ என்பதை இசைப்பது,  உலகின் நீட்சியைக் குறிக்கும்வண்ணம் வெளிப்படுகிறது.  ‘மண் பயனுற வேண்டும்என்பது எத்தனை வேகமான ஆசை….’வானகம்‘ என்ற சொல் ஆகாயத்தை விரித்து வைக்கிறது. ‘உண்மை நின்றிட வேண்டும்என்ற முக்கிய வரி, எப்போதுமே கண்ணீர் துளிர்க்க வைப்பது. அதை, ஒரு தியான நிலையில் நின்று சம தளத்தில் ஆசீர்வதிப்பது போல் வழங்குகிறார் யேசுதாஸ்இளையராஜா அமர்க்களப்படுத்தி இருந்தார்.

யலின் மூவர் என்று அழைக்கப்பட்ட சகோதரர்களுள் ஒருவரான இசையமைப்பாளர் எல் வைத்தியநாதன்மகாகவியின் அருமையான பாடல்களை இசையில் வழங்கியது, ஏழாவது மனிதன் படத்தில் இடம் பெறவும், அந்நாட்களில் காஸெட் அருகேயே உருகி உருகி வாழ்ந்திருக்க வைத்தது. அதிலும், காக்கைச் சிறகினிலே, ஆஹா…  கற்பனைத் திறன் மிக்க கவிதைக்கு நேர்த்தியான இசை அமுது பொழிந்த  யேசுதாஸ் குரலினிமை.





ஒற்றை வரியில் பல்லவி, ஒற்றை ஒற்றை வரிகளில் மூன்று சரணங்கள், அதை எல் வி ஒரு கனவுப்பாடல் போல அமர்ந்து பார்த்து இழைத்து இழைத்துச் செதுக்கி இருப்பார்

சீரான ரிதம், தாளக்கருவியின் ஒலி, பாரதிக்காகவே உருகி உருகி வழிந்தோடும் குழலிசை, யேசுதாஸ்

பார்க்கும் மரங்களெலாம் என்பதில், பார்க்கும் என்ற சொல்லும் சரி, கேட்கும் ஒலியிலெலாம் என்பதில் அந்த கேட்கும் என்பதும் சரி, இரு வேறு சுகமான உச்சரிப்பில் வெளிப்படும். ஒன்று பார்ப்பது, மற்றது கேட்பது. அந்தகீதம்என்ற பதத்தை சற்று நிறுத்தி இழுத்து ஒலிக்கும் கால அளவே அலாதி இன்பம். கடைசி சரணத்தை நோக்கிய வேகத்தில் தீ மூட்டி வளர்ப்பதை இசை செய்கிறது. ‘தீக்குள் விரலை வைத்தால்’ என்பது பாரதியின் புகழ் பெற்ற கவிதை வரிகளில் முக்கியமான ஒன்று. அதற்கேற்ற கனத்தோடு யேசுதாஸ் அதைத் தொட்டு, அந்தத் தீயைத் தீண்டும் இன்பம் ரசிகருக்குத் தோன்ற வைத்து நிறைவு செய்யவும், விசில் ஒலியில் பல்லவி, ஒரு பறவையே அந்தப் பாடலைப் பாடி முடிப்பதாக நிறைவு செய்திருப்பார் எல் வி

வீணையடி நீயெனக்குமட்டும் என்னவாம்…. இதுவும் ஏழாவது மனிதன் படத்தில் இடம் பெற்றது. பாடல், பாயுமொளி நீ எனக்கு என்ற இடத்தில் தொடங்குகிறது. ஆஹாநீரஜா எத்தனை வேகமாக அந்த ஒளியைச் செலுத்துகிறார்ஒளியின் வேகம் எப்போதும் ஒலியைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலானது. ‘பார்க்கும் விழி நானுனக்கு’ என்பதில் காதலின் குழைவு ஆட்கொள்கிறது குரலில். பின்னர் தோய்கிற மதுவும், அதில் சிறகடிக்கிற தும்பியும் கிறக்கமாகவே ஒலிக்கிறது. இன்னும் இருக்கிறது அந்தப் பல்லவி வளர்ந்துமேன்மையெல்லாம்’ உரத்துச் சொல்லி, ‘கண்ணம்மாவில்’ மேலாகப் பறக்க விடுகிறது காதலின் கொடியை

பிறகுதான் எத்தனை ஜாலங்கள் நிகழ்த்துகிறார் எல் வி! சதங்கை ஒலி மெல்ல ஜதி எழுப்பி இசைக் கருவிகளை அழைக்கவும்காதலின் மொழியை வயலின் எடுத்துக் கொள்ள, புல்லாங்குழல் மறுமொழி பேச, பாடல் முழுவதும் வயலினும் குழலும் நிகழ்த்தும் உரையாடல் இன்பம் இன்பம் இன்பம் பேரின்பம்



https://youtu.be/BMO18GrIX6k



வீணையடி நீ எனக்குஎன்று பல்லவியை எடுப்பதற்கு முகமன் வீணையின் தந்திகளில் ஒலிக்க, யேசுதாஸ் நுழைவு அபாரம். சொற்களில் உள்ள சங்கதிகளும் சரி, சொற்களில் நிகழ்த்தும் சங்கதிகளும் சரி, பாடலின் அழகைக் கூட்டும். காந்தமடி நீ எனக்கு என்ற வரியில் காந்தம் என்ற பதம், காந்தம் போலவே விர்ரென்று ஈர்க்கும்

சரணங்களுக்கு இடையேயும் வயலினும், குழலும் பேசிக்கொள்வது, உள்ளத்தை உருக்கிக் கண்ணீர் பெருக வைத்துவிடும், எத்தனை முறை கேட்டாலும்

பாடலின் உயிர்நாடிகண்ணம்மா’ என்ற சொல் தான். கவிதையின் உச்சம் அந்தச் சொல் எனில், பாடலின் உச்ச ஸ்தாயி அங்கே தானே ஒலிக்கமுடியும்என்ன வருணிப்புகள் பாடலில், பானமடி நீ எனக்கு, பாண்டமடி நான் உனக்கு….ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம், .ஊனமறு நல்லழகே, நாத வடிவானவளே ….யேசுதாஸ், நீரஜா குரல்களில் மகாகவிக்கு வழங்கும் மரியாதை செறிந்த அர்ப்பணிப்பு ஒலித்துக்கொண்டே இருக்கக் கேட்கிறது.

ரு சமாதான காலத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திராத, அன்றாடப் பாடுகளின் அலைக்கழிப்புகளில் மீள முடியாதிருந்த ஒரு மனிதனின் படைப்புலகம் எப்படி இப்படி இயங்க முடிந்திருக்கிறதுமொத்தக் கவலையையும் ஒரு கரும்பாறை ஆக உருமாற்றி அதன் மேல் ஒய்யாரமாகத் தனது கற்பனையின் மடியில் சாயும் சுகம்போலவே சாய்ந்து,  ‘வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான் மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்எப்படி எழுத முடிந்தது?  ‘கம்பன் இசைத்த கவியெலாம் நான்‘, …’இன்னிசை மாதர் இசையுளேன் நான்…’ என்று எப்படி பிரகடனம் செய்ய முடிந்தது

மகாகவி பாடல்களை இளம் வயதிலிருந்தே, பள்ளி மேடைகளில், திரைப்படப் பாடல்களில் கேட்டிருந்த அனுபவம் ஒன்று. ஆனால், வானொலியில் திடீர் என்று ஒரு முறை கேட்ட மெட்டு, பாடும் விதம், பாடல் ஒலித்த வடிவம் யாவும் ஒட்டுமொத்தமாக வேறு ஓர் அனுபவத்தை அளித்துத் திணற வைத்தது



வணக்கம் குழந்தைகளே என்ற குரலில்தான் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு (நினைவுக் குறிப்புகள் தான், ஒரு வேளை கிழமை வேறாக இருந்திருக்கலாம்) அந்த நிகழ்ச்சி தொடங்கும். நல்லதம்பி அவர்கள் என்று நினைவு. வேற்று மொழி பாடல்கள் உள்பட, குழந்தைகளுக்குச் சேர்ந்திசை பயிற்சியாக அந்த நிகழ்ச்சி காந்தமாக ஈர்த்துவிட்டது. ஓடி விளையாடு பாப்பா பாடலை, அதற்குமுன் இத்தனை அருகே அதன் அத்தனை வண்ணங்களோடு, உணர்ச்சிகளோடு, ஆவேசத்தோடு புரிந்து கொண்டதில்லை என்று உணர்த்தினார் அந்த அபார இசையமைப்பாளர். இருக்கிறது, நிறைய நிறைய இருக்கிறது, இன்னும் பேச இருக்கிறது.

‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்ற வரியை ஒரு குழு பாடவும், அடுத்த குழு இரண்டாம் வாய்ப்பாட்டை தாளக்கட்டுக்குள் சுருதி பிசகாமல்ஓர் ரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு, முவ்விரண்டு ஆறு, நால் ரெண் டெட்டுஎன்று சொல்லி முடிக்கவும் (அந்த நாலு ரெண்டு எட்டு என்பதை அவர்கள் என்னமாகக் கொண்டு வருவார்கள் தாள லயத்தில்!), பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்று இவர்கள் இசைக்க, அவர்கள், ரி நி   நி நி ரி  (ஸ்வரங்கள் சரி தானா, இதுவும் நினைவில் இருந்துதான்) என்று இசைக்க, மாலை முழுதும் விளையாட்டு என்ற இடம் வந்ததும் தயாரானேன், என்ன செய்வார்கள் விளையாட்டுக்கு என்றுஆஹா..ஆஹா. பாரம்பரிய விளையாட்டு தான், சடுகுடு, நல்லதம்பி சொல்வார், ‘குழந்தைகளே, இப்ப ராகத்துக்குள்ளேயே சடுகுடு ஆடணும், சறுக்கி விழுந்திடாமல் ஆடணும், எங்கே ஆடுங்க’ என்பார். ‘சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுஎன்ற வேகத்தில் இரண்டு முறை சொன்னதும், ‘என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா’ என்று சரணம் முடியும். கடைசி சரணத்தில், ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளல் ஆகாது பாப்பாஎன்பதும், ஒரு ராக ஆலாபனை இழுப்பும், அடுத்து மோதி மிதித்து விடு என்பதை அழுத்தம் பொங்கத் திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்லிச் செல்லும் இடமும் அத்தனை அசாத்திய அக்கறையோடு நெய்து பின்னப்பட்டு வழங்கப்பட்டிருக்கும்.

எம் பி சீனிவாசன் மற்றுமோர் இசை அமைப்பாளரே அல்ல. சேர்ந்திசை என்ற வடிவத்தை, வங்கத்தில் சலீல் சவுத்ரி எனில், தமிழகத்தில் எம் பி எஸ் வழங்கிச் சென்றிருப்பது, சென்னை இளைஞர் சேர்ந்திசை என்ற குழு உருவாக்கம், அதன் தொடர்ச்சியாக, வங்கி அரங்கில் ஒரு சேர்ந்திசைக் குழு உருவானது வரை சொல்ல நிறைய இருக்கிறது.





இணையத்தில் தேடுகையில், நெஞ்சை அள்ளும் அவரது இசையமைப்பில், சேர்ந்திசையில், ஜய பேரிகை கொட்டடா என்ற அருமையான கீதம் கிடைத்தது

அறைந்து சொல்லும் பாடலை, சேர்ந்திசைக் குழு உறுப்பினர்களும் அறைந்து அறைந்து பாடி இருப்பார்கள். ‘பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’ என்பது எல்லாம் மகாகவியின் முத்திரை வரிகள். ‘காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்ற உரம் பெற்ற வரிகளை, வரம் பெற்று வந்தவர்கள் போலவே பாடி இருப்பார்கள். ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்பது அடுத்த தளம் எனில், ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்பது உச்சத்தைத் தொட்டு நிற்கும். ‘கொட்டடா’ என்பது முரசறைவது. பாரதியின் புகழை முரசறைவது. எம் பி எஸ் கற்பனையை, மேதைமையைக் கொட்டி முழக்குவது.

சக உயிர்களை நேசித்ததால், மகாகவி அவன். ‘தன்னை நேசிப்பவனை நாய் நேசிக்கும், வெறுப்பவனை நேசிக்க வேண்டாமா’ என்று பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று எழுதிய சிந்தனை அவனது

வேறெப்போதையும் விட, பாரதியின் இசைமொழி, அந்த நெஞ்சுறுதி, வாக்கினிலே இனிமை, நினைவு நல்லது, எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்பதன் செயலாக்கத்திற்கான உந்துவிசை இப்போது தேவை. நோக்கும் திசையெல்லாம் அவனன்றி வேறில்லை.

 

(இசைத்தட்டு சுழலும் ….)

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 28– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

 



2 thoughts on “இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் ”
  1. வீணைக்கொடி வேந்தன் இராவணனிடம் மந்திரி இகை குறித்த ஐயம் தீர்க்கும் பதிலும் இசையோடுதரவேண்டும்என்று கேட்க சிதம்பரம்ஜெயரமன் குரலில் கமகம் கமழ. காம்போதியை பாடிநம்மை உருக வைப்பார். ஒருவேளை சிவன் இருந்து கேட்டிருந்தால் கைலாசத்தோடு அவனும் உருகி மண்ணில் கரைந்திருப்பான். இப்படித்தான் பாரதியின் பாடல்களை இசைக்கோர்ப்பின் பின்ணியில் SVV வாசிக்கும் நம்மையும் உருக வைக்கிறார். இதை பாரதி கேட்டிருந்தால் நெக்குருகி இருப்பான்.இதுமட்டுமன்றி பலவகையான பித்தமயக்களில் மூழ்கி சகமனிதர்களை வதைக்கும் பிறவிகளின் சித்தம் தெளிவிக்கும் மருந்தும் பாரதியின் பாடல்களில் உள்ளதையும் தெரிவித்து நிறைவு செய்கிறார். நன்றிது தெளிந்த ஞானம் வந்தால் வேறென்ன வேண்டும். வாழ்த்துகள் தோழர் SVV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *