வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ 

வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ 

மகாகவி பாரதி 

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது. மொழியை நேசிக்கும் அன்புள்ளங்களுக்கு இனிய வாழ்த்துகள்

சென்னை தி நகரில் உள்ள மூக்குக்கண்ணாடிக் கடை ஒன்றின் பெயர்ப்பலகையில், பல ஆண்டுகளாகப் பார்த்து ரசிக்கும் வாக்கியம்,  ‘தாய்மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றதுஎன்பது

எம் ஜெயின் கல்லூரியில் அருமையாகக் கற்பித்த தமிழாசிரியர் வேணுகோபாலன் அவர்கள் சொல்வதுண்டு, மகாகவி பாரதி பல மொழிகள் கற்றறிந்தவர், முண்டாசு கட்டிக்கொண்டு பேசினால், வடக்கத்தியார் போலவே இந்தி பேசுவார், அத்தனை மொழிகள் அறிந்தபிறகு தான், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்என்று எழுதினார் என்று

முகத்திலே கொடுவாள் மீசை வேடன் என் எதிரில் வந்தான், அகப்பட்ட பறவை காட்ட, அவற்றின் பேர் கேட்டேன்என்று வரும் தமது கவிதையில், பாவேந்தர் பாரதிதாசன் ஒரு வேடனை முன்னிறுத்தித் தமிழின் பெருமையை முன்னெடுப்பார்பரத்வாஜன் என்று சொல்லப்பட்ட பறவையை வலியன் என்றும், சகோர பட்சி என்று முன்பு வழங்கி வந்ததை செம்போத்து என்றும் வேடன் அழகுத் தமிழில் சொன்னான் என்று குறிப்பிடுவார். ‘தமிழா நீ வாழ்க என்றேன்என முடியும் அது

மிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்என்று அதனால்தான் எழுத முடிந்தது அவருக்கு. பஞ்சவர்ணக்கிளி படத்திற்காகஅந்தக் கவிதையை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன்ராமமூர்த்தி இரட்டையர் அத்தனை அம்சமான இசைப்பாடலாக உருவாக்க, பி சுசீலா அவர்களது குரலினிமை பாவேந்தரின் உள்ளத்தின் ஊற்று மணத்தோடு காலமெல்லாம் கொண்டாடப்படுவதாக ஆக்கியது

எம் எஸ் வி மறைவை அடுத்து, தி இந்து ஆங்கில நாளேட்டில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில், சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன் அவர்கள், பெங்களூரில் வசித்து வந்த மிக இளம் வயதில் வானொலியில் இந்தப் பாடலைக் கேட்டே தமக்கு தமிழின் மீது ஆர்வம் பெருகியதாகக் குறிப்பிட்டுத் தான் தொடங்கி இருந்தார்

 

 

ஒரு காதல் பாடலுக்கான அத்தனை மெல்லுணர்வும், உள்ளக் கிளர்ச்சியும், இதயத்தோடு நிகழ்த்தும் உரையாடலுக்கான உணர்வும் பரவும் படியான இசைக்கோவையை அதற்கேற்ற கருவிகளைக் கொண்டு படைத்திருந்தனர் எம் எஸ் விடி கே ஆர். ஹார்மோனியத்தின் நெஞ்சத்தில் வயலின் இழைக்கிறது தமிழுக்கான காதலை.  

தனது மனத்திற்கு இனியானைப் பாடவும் வாய் திறக்கும் நங்கை, அவனருகே இருப்பதறியாமல் வருணிப்பதும், அவன் எப்படி ரசிப்பான் என்ற கற்பனையும் இணைகோடுகளாக ஓட அதன் ரசிப்பையும் வெளிப்படுத்தும் குரல் சுசீலாவுடையது. ‘தமிழுக்கு மதுவென்று பேர்’ என்பதில் அந்த மதுவை அவர் உச்சரிப்பதில் எத்தனை கிறக்கம்!  ‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்’ என்ற சரணத்தில் அந்த ராக ஆலாபனையின் ஏற்ற இறக்க படிக்கட்டுகளில் வளைந்து நெளிந்து ஏறி இறங்கும்வரையிலும் மூச்சு சீராகப் பிடிமானத்தில் வைத்திருக்கும் அழகு அருமை. ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு’ என்று இழுத்து, வான் என்ற சொல்லை அவர் ஒலிக்கும் விதம் உயர்ந்து நோக்கவைக்கும் எனில், ‘தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்’, தேனினினும் சுவையானது

பல்லவியிலிருந்து சரணம், சரணத்திலிருந்து பல்லவி பயணத்தில் வயலினும், புல்லாங்குழலும்தாளக்கட்டு பல்லக்கில் காதலைச் சுமந்து கொண்டு சேர்க்கின்றனதமிழுக்கான காதலை, பாடல் காட்சியில் கே ஆர் விஜயாவின் கண்கள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கும்.

ம் பி என் சேதுராமன், எம் பி என் பொன்னுசாமி சகோதரர்கள் நாகஸ்வர இசை, திரையில்நீண்ட இடைவெளிக்குப் பின், தேனருவியாகப் பொழிந்த  ‘அமுதே   தமிழே‘  (கோயில் புறா) பாடல், கவிஞர் புலமைப்பித்தன் அவர்களது மிகவும் அருமையான திரைப்பாடல்களில் முக்கியமானது. பேபி ஜெயசாந்தி – மாஸ்டர் ஹரி என்ற சிறார்கள் அற்புதமான பாடலுக்கான சிறப்பான நடிப்பை வழங்கி அசத்தி இருப்பார்கள்

பாவேந்தரின் சொல்லிலிருந்து எடுத்த அமுதத்தைத் தமிழைத் தமிழிசையைத் தனியிசையை, தரணியிலே முதலிசையாக வார்க்கிறார் புலமைப்பித்தன். ‘ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்‘ பாடலாக அதை உருவாக்கி இருக்கும் இளையராஜாவின் இசை ஞான விளைச்சலில், எத்தனை சுவாரசியமான பாடல் இது

ஸ்வரங்கள் சொல்லித் தொடங்கும் பாடலை, முன் அலையாக பி சுசீலா வேகவேகமாக எடுத்துச் செல்ல, பின்னோடிச் செல்லும் இணையலையாக உமா ரமணன்  தொடர்கிறார்

 

https://www.youtube.com/watch?v=aSXK0geedz8

 

பல்லவியின் அழகே தமிழ் அழகை வாரிச் சூடிக் கொண்டு புறப்படுவது எனில், சரணங்கள் பேரழகாகத் தொடுக்கப்பட்டிருக்கும். நாத இன்பம், கண்ணில் நீர் துளிர்க்க வைக்கும் நாகஸ்வர இசை. அதை முத்தமிட்டுக் கொண்டே உடன் இயங்குகிறது புல்லாங்குழல் இசை

தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம் என்ற வரி, பக்தி இலக்கியங்கள் வளர்த்த தமிழைத் தொட்டுப் பேசுகிறது. தாளக்கட்டின் லயம் காதுகளில் அல்ல, உள்ளத்தில் வாசித்துக் கொண்டே இருக்கிறது ! இரண்டாம் சரணத்தில், ‘என் கனவும் நினைவும் இசையே இசை இருந்தால் மரணம் ஏதுஎன்பது எப்பேற்பட்ட சிந்தனை முத்து. ‘என் மனதில் தேன் பாய, தமிழே நாளும் நீ பாடுஎன்பது எப்பேற்பட்ட அனுபவச் சுவை !

பி சுசீலா, உமா ரமணன் குரல்களில் பிறக்கும் அந்த இசையை என்ன சொல்ல…  இரண்டு புறாக்கள் ஒன்றையடுத்து மற்றொன்று மரக்கிளையிலிருந்து பழங்கால மாளிகை ஒன்றின் அடுக்கடுக்கான தளங்கள் ஒவ்வொன்றின் சாளரங்களிலும், மொட்டை மாடிப் பரப்பிலும், கைப்பிடிச் சுவர் விளிம்புகளிலும் தத்தித் தத்தி நடைபோடவும், விர்ரென்று பறந்து மேலேறிப் பறக்கவும், சடாலென்று கீழிறங்கி தானியங்களைக் கொத்திப் பார்க்கவும், கழுத்தின் ஒய்யார அசைத்தலுமாகச் சிற்றஞ்சிறுகாலைப் பொழுதில் வழங்கும் ஓர் இனிய காட்சியின் ஒலிவடிவமாக உணரக் கூடியது

மிழைப் பாடுவது ஒரு பக்கம், தமிழ் நூலைப் படிப்பது குறித்துப் பாடுவது இன்னும் எத்தனை ஆனந்தமான அனுபவம். மீண்டும் சஞ்சய் சுப்பிரமணியன் ! மீண்டும் பாவேந்தர் தான் ! கொரோனா கொடுமையால் பொங்கல் நேரத்தில் நடத்த இயலாமல் போன புத்தகக் கண்காட்சி தள்ளிவைத்து தொடங்கும் நாளில், எத்தனை பொருத்தமான பாடல் இது!

 

 

பாரதிதாசன் அவர்களது, நூலைப் படி என்ற கவிதையை எத்தனை அற்புதமான இசைப் பாடலாக வழங்குகிறார் சஞ்சய்

நூலைப் படி என்ற பல்லவியின் முதல் அடியை, ஒரு புத்தகத்தை எடுத்து விரிப்பதாகவே விரித்துக் கொண்டு செல்கிறார். நூ………..லைப் படி என்பது, அடுத்தடுத்த தலைமுறை எழுத்துகள், வெவ்வேறு வகை புத்தகங்கள், விதவிதமான ரசனைக்குரிய படைப்புகள் என்பதாகவோ என்னவோ ஒரு நூலகத்தினுள் அலமாரி அலமாரியாக அடுக்கடுக்காக உள்ளவற்றின் தலைப்புகளைக் காட்டி அழைத்துச் செல்வது போலவே பரவுகிறது.

காலையில் படி எனும் முதல் சரணத்தின் அழகு, ‘கடும் பகல் படி, மாலை இரவு பொருள் படும் படிஎன்று நகர்ந்து, பல்லவியில்நூலைப் படி’ என மீண்டும் பேரழகோடு விரிகிறது. ‘கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடிஎன்ற இரண்டாம் சரணத்தில், ‘கற்கத்தான் வேண்டும்என்ற இழைப்பும், ‘ அப்படி, கல்லாதவர் வாழ்வது எப்படிஎன்ற கேள்வியும் சஞ்சய் அவர்களது அழுத்தமான பாவங்களில் மின்னுகிறது. ‘பொய்யிலே முக்கால்படி, புரட்டிலே கால் படிஎன்ற மூன்றாவது சரணம் இன்னும் ரசனைக்குரிய ஒன்றுஇப்படி எல்லாம் இருந்தால் எப்படி அய்யா என்பது போன்ற புன்னகை பூசிய பார்வையும், தாள லயமும் ஒருசேர சஞ்சய் அருமையாக வளர்த்து பல்லவியில் கொண்டு சேர்க்கும் இடம் சுவையோ சுவை

மிழை நேசித்தாலும், மற்ற மொழிகள்பால் அன்பைத் துறக்கவில்லை மகாகவி. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே என்று இசைத்தது அவர் உள்ளம். செப்புமொழி எத்தனை என்றாலும் சிந்தனை ஒன்று என்ற உள்ளம் அவரது

ஆதிக்கமற்ற அன்பே ஒருமைப்பாட்டின் இதயம். விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை என்ற தடத்தில்  எல்லா மொழியினது பண்பாடுகளின் மீதும் மதிப்பே கூடும். அப்படியான பாரத விலாஸ் ஆகத் தான் இருக்கவேண்டும் நாடு

காஞ்சிபுரத்தில் இளவயதில் சிவாஜிக்காகத் தேடிப் போய்ப் பார்த்த படம் தான் என்றாலும், ‘இந்திய நாடு என் வீடுஎன்ற பாடல் அப்போதே மிகவும் ஆட்கொண்டு விட்டது. பன்மொழி, பலவகை பண்பாடுகள் மீதான மரியாதையை மிக எளிதாகப் புகட்டி விட்டது இந்தப் பாடல். கதைக்கருவில் முக்கியமான இந்தக் காட்சிக்கான பாடல் உருவாக்கத்தை இத்தனை வித்தியாசமாகக் கற்பனை செய்து, இலகுவானது போலத் தெரியும்படி எம் எஸ் வி அமைத்திருப்பது சிறப்பானது

தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி மொழிகளுக்கேற்ற இசையை அந்தந்த இடங்களில் மெல்லிசை மன்னர் பொருத்தமாகக் கொணர்ந்திருப்பார். நிறைவு பெறுமிடத்தில், உணர்ச்சிகர வேகத்தில் வந்தே மாதரம் என்ற சொற்களை பாடகர்கள் மேலேற்றி ஒலிக்க ஆர்கெஸ்ட்ரா உச்சத்தில் கொண்டு நிறுத்தும்

 

https://www.youtube.com/watch?v=kEj2dBv9vH0

 

இந்திய நாடு என் வீடு என்பது என் பேருஎன்ற பல்லவியின் கம்பீரமான தொடக்கத்தை, டி எம் சவுந்திரராஜன் இசைக்க, அதில், ‘எல்லா மக்களும் என் உறவு, எல்லோர் மொழியும் என் பேச்சுஎன்ற வரிக்காகவே கவிஞர் வாலி பாராட்டுக்குரியவர் ஆகிறார். அடுத்த வரிகள் அதையும் கடந்து, ‘திசைக்கொரு துருக்கரும் என் தோழர் தேவன் ஏசுவும் என் கடவுள்என்ற இடத்தை டி எம் எஸ் அத்தனை உணர்ச்சிகரமாக இசைப்பது, நடப்பு காலத்தில் எத்தனை நெருக்கமாக வந்து உள்ளத்தைத் தொடுகிறது! அதன் விரிவாக, பி சுசீலாவின் இனிய குரல், ‘எல்லா மதமும் என் மதமே எதுவும் எனக்கு சம்மதமேஎன்று உள்நுழையும் இடம் இன்னும் குளிர்விப்பது

‘இதிகோ இதிகோ இக்கட வாருங்கோ’ என்ற களியாட்டத்தை எல் ராகவன் அருமையாக எடுப்பார். மலையாளம் கலந்த தமிழ் வரிகளை, ‘படைச்சோன் படைச்சோன்’ என்று எம் எஸ் வி அவர்களே சிறப்பாகப் பாடி இருப்பார். அதுவும்ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது கேரளம் திருச்சூர் ஜில்லா என்ற வரியின் ஜில்லா ஒரே ஜில்லாக இருக்கும்! இந்தி மொழிக்கான பகுதியை மலேசியா வாசுதேவன் ஒயிலாக எடுத்திசைப்பார். கன்னடம், களிதெலுங்கு, இந்தி என்ற மும்மொழி சாயலிலும் எல் ஆர் ஈஸ்வரி ஒரு கலக்கு கலக்கி இருப்பார் பாடல் நெடுக. ஏனு சுவாமி எங்க ஊரு மைசூரு என்ற சரணத்திலும் சரி, மலையாளம் மற்றும் இந்தி மொழிக்கான குரல்களிலும் சரி அவரது தனித்துவ முத்திரை இருக்கும்வருவதைப் பகிர்ந்து உண்போம், வந்தே மாதரம் என்போம் என்ற முத்தாய்ப்பான வரியும் வாலி அவர்களது திரைப்பாடல் மொழியின் சிறப்பு.

‘காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்றார் மகாகவி. என்ன கருவி ? முன்பு வானொலி, பின்னர் தொலைக்காட்சி பெட்டி. இப்போது எத்தனையோ நவீன சாதனங்கள். இவை இருந்தால் கேட்டுவிட முடியுமா? காசி நகர்ப் புலவர், காஞ்சியில் இருப்பவர்க்குப் புரியும் மொழியில் பேசினால்தானே இவர் கேட்பார், இவருக்கு அவர் மொழியோ, அவருக்கு இவர் மொழியோ தெரிந்திருக்க வேண்டும், அல்லது, பொதுவான மொழியொன்றில் அவர் பேசவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் உரையாற்றுவதைக் கேட்க இவருக்கு மனம் வேண்டும். அப்படியான உரையை அவர் நிகழ்த்த வேண்டும். இந்த உணர்வு தான், இதயம் தான் கருவி

மொழி, இணைப்புக்கான பாலமாகும் போது எத்தனை புன்னகைகள் பூக்கின்றன முகங்களில். இசையெனும் மொழி அந்த இன்பத்தைக் காலமெல்லாம் கடத்திக் கொண்டே இருக்கிறது. காயப்பட்ட உள்ளத்தை வருடிக்கொடுத்து இதமாக்குகிறது. இனிய நினைவுகளை நிறைய பிரதி எடுத்து சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து கொண்டாட வைக்கிறதுஇசையின் மொழி அன்பு. இசையின் மதம் நேயம். இசையின் எல்லை இந்த பிரபஞ்சம். இசையால், இசைக்காக,இசையே நிறைந்திருக்கட்டும் எப்போதும்.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 28– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 29– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 30– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 31 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 32 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 33 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 34 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 35 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி  | எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 36 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன் 



5 thoughts on “இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. சிறப்பான தொகுப்பு தோழர். தமிழுக்கு அமுது …. என்ற பாடலில் தொடங்கி .பல தரவுத்தளங்களை ஒரே கோர்வையாக கொடுத்துள்ளது என் போன்று புதியவர்களுக்கு இசை சங்கமம் பற்றிய பதிவுகள் அறிய முடிகிறது. நன்றி சார். வாழ்த்துகள் சார்

    1. தமிழுக்கு அமுதென்று பேர். அந்த அமுதை வாரி வழங்கியமைக்கு நன்றி.

  2. //இசையின் மொழி அன்பு. இசையின் மதம் நேயம். இசையின் எல்லை இந்த பிரபஞ்சம். இசையால், இசைக்காக,இசையே நிறைந்திருக்கட்டும் எப்போதும்.//
    இசையின் மொழியை முழுதாய் அறிந்தவர் தாங்கள்

  3. Infact, retirement from Indian Bank has made SVV sir very busy and totally occupied. He has dedicated his life to Tamil language.
    In depth analysis he does, so much efforts he takes, he spends more time to bring each and every article in a perfect way. All the best.👍👍👍

  4. அருமையாக இசை ப்பாடல்களை கோர்த்து சிறப்பாக கட்டுரை படைத்து இசையை மெருகூட்டி….அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *