புத்தக அறிமுகம்: முதல் ஆசிரியர் – ராணி குணசீலி

 

ஒரு ஆசிரியருக்கான நம்
பாரம்பரிய அளவீடுகள் தான் எவை…????
🔶 அதிகம் படித்திருக்க வேண்டும்.
🔶 கையில் பெரிய பெரிய பாடப் புத்தகங்களும்,
அடிச்சுவடிகளையும் வைத்திருக்க வேண்டும்.
🔶 பரம்பரை பரம்பரையாக கல்வி அறிவு
பெற்றிருக்க வேண்டும்.
🔶 பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை பற்றி
நன்கு தெரிந்திருக்க வேண்டும்… அதானே..!!

ஆனால் இதில் ஒன்றுமே அறியாத…
சொல்லப் போனால் தானே சொற்களை
அசைகூட்டி படிக்க தெரிந்த ஒரு இளைஞன்…

தூய்ஷேன்

எப்படி தன் பீறிடும் அன்பாலும்,
உள்ளுணர்வுகளாலும் சின்னஞ்சிறு சிறுமிகள்
படிக்க உதவுகிறார் என்பதுதான் இந்த உலகப் புகழ்பெற்ற முதல் ஆசிரியர் என்கிற நாவல்…

குறிப்பாக அல்தினாய் என்ற சிறுமி தன்
முதல் ஆசிரியரால் கல்வி பெற்று
சொந்த கிராமத்தில் இருந்து
நகரத்திற்கு சென்று தத்துவவிஞ்ஞானியாகிறார்….

தூய்ஷேன் இப்படிப்பட்ட மகத்தான காரியத்தை செய்ய முடிந்தது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறது இந்த நாவல்…

முதல் ஆசிரியர் – ஒரு பார்வை | Azim Premji ...

இந்தத் துணிச்சலான….
கடும் உழைப்பாளியான ஆசிரியர்..
தனது 14 வயது சிறுமியைப் பார்த்து,
“அல்தினாய்.! நீ புத்திசாலி….
நீ ஒரு விஞ்ஞானியாகப் போகிறாய் என்றுதான் எனக்கு எப்பவுமே படுது….
நான் அதை நம்புறேன்…..
நீ வேணா பாரேன் என்கிறார்…

எனக்கு ச.மாடசாமி ஐயாவின்  “இலக்கண கண்கள் காணாத சித்திரங்கள்” என்ற கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது. அதில் “எங்கள் இலக்கணக் கண்கள் எதைத்தான் கண்டுபிடித்தன? என்பார்.

எப்பேர்பட்ட கண்கள்…. தூய்ஷேனின் கண்கள்.!!
நம்பிக்கையை விதைத்து , பலனை விளையச் செய்யும் கண்கள் !!!

“ஒரு முடிவு பெறாத சித்திரத்தை
முன்கூட்டியே சொல்ல முடியுமா….
தொட்டிலில் உள்ள குழந்தை நாளை எப்படி வளருவான் என்பதை சொல்லிவிட முடியுமா….”

தெரியாது. ஆனால்

ஒரு ஆசிரியர் தன் உள்உணர்வாலும்
பேரன்பாலும் சொல்ல மட்டும் அன்றி
செய்து காட்டி விடவும் முடியும்….💖 என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

நூல்: முதல் ஆசிரியர்

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத் மாத்தவ் (தமிழில் ச.மாடசாமி)

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

விலை: ₹66.00