திருமணத்திற்கான பிறகு
ஒரு அந்திமை நேரத்தில்
அவளிடம் மனம்விட்டு
என் முதல் காதலை
சொல்லி முடித்தேன்..!
புன்னகை பூத்தவள்
கூர்மையான ஈட்டி
அவள் இதயத்தில் இறங்கியது..!
பக்குவமாய் பிடுங்கிப் பக்கத்தில் வைத்தவளாய்
என் ஆர்வம் அதிகரிக்க
வலி சுமந்தாள்….
பிரபஞ்சம் விரிவதுபோன்று
மூச்சிறைக்க சொல்லி முடித்தேன்.
ஆனால்
இன்றுவரை
கேட்டதில்லை அவளின்
முதல் காதலை!
நிச்சயம் அவளுக்கு
பொய் சொல்லத் தெரியாது.
என் மனம் நோவதையும்
அவளால் ஏற்க முடியாது
என்பதாலோ?
பாவலன் எல்லப்பன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.