முதல் மழை, முதல் காதல், முதல் முத்தம், என மனித வாழ்வில் கொண்டாடப்படுவதற்கு ஏராளமான முதல் காரணங்கள் இருக்கின்றன, அப்படி பத்தோடு பதினொன்றாக கடந்து விட முடியாது இந்த முதல் பெண்களை, ஆணாதிக்கம் மிகுந்த, கட்டுப்பாடுகள் நிறைந்த, பழந்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து, சாதனை மகளிராய் தடம் பதித்து, அந்த பாதையின் வழியே ஒரு பெரும் பெண்ணினத்திற்கே வழிகாட்டியாய் ஒளி விளக்கு ஏற்றிய இம் முதல் பெண்கள் நிச்சயம் வரலாற்றில் கல்வெட்டாய் என்றென்றும் நிலைத்திருக்க கூடியவர்கள்.
இன்றைய தேதியில் பெண்கள் சாதிக்க பல தடைகள் இருக்கும் போது 150 வருடங்களுக்கு முன் அது எவ்வளவு கடினமாக இந்திருக்கும் என்பதை 43 முதல் பெண்களை அவர்களின் வீரம் செரிந்த வாழ்க்கையை கடினமாக உழைத்து ஓரிரு பக்கங்களில் எளிய முறையில் வாசிக்கத் தந்துள்ளார் லூயிஸ் அவர்கள். 43 பெண்களில் 3 தலித் 3 இஸ்லாமியர் 6 கிறித்துவ பெண்கள் தவிர்த்து மற்ற அனைவரும் முற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். 43 பேரும் பொருளியல் ரீதியாக மேம்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள்.
அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் கல்வி கற்று உயர் பதவியில் இருந்த காரணத்தால் பெண்கள் கல்வி பெறவும் சமூகத்தில் உயர் பொறுப்புகளை அடையவும் காரணமாக இருந்தது. அத்துடன் அன்றிருந்த சமூகச் சூழலும் அரசியல் இயக்கங்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆங்கிலேயர்கள், காங்கிரஸ், சமூக நீதி கட்சிகள், திராவிட, பொதுவுடைமை இயக்கங்கள் யாவும் சமூகத்தில் அதற்கான இடத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்திருந்தது என்றால் அது மிகையான கருத்தில்லை.

படுகர் இனப் பெண் அக்கம்மா துவங்கி ஜோதி வெங்கடாச்சலம் வரை அவர்கள் தொட்ட இடங்கள் யாவும் சாதனைச் சிகரங்கள். அவற்றில் இருந்து இன்று பெண்கள் விண்வெளி தாண்டி சாதனைப் பறவைகளாய் பிரபஞ்ச வெளிகளில் அழுத்தமான தடத்தை பதித்து வருகிறார்கள்.
முதல் பெண்கள் குறித்து போதுமான தகவல்கள் இல்லை என்பதும், அதை அந்த குடும்பத்தினர் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதும் வருத்தத்திற்கு உரியது. பெரும் சிரமப்பட்டு தேடித்தேடி முதல் பெண்களின் அரியதகவல்களை தந்துள்ளார்.முதல் பெண் ஒலிப்பதிவாளர் மீனாநாராயணன் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை
ஆனால் K.P.ஜானகியம்மாள் குறித்த மிகச்சிறிய புத்தகமே கிடைத்தது என்றும் பெரியாரிய, திராவிட, பொது உடமை இயக்கங்கள் கூட பெண்களின் உழைப்பை இருட்டடிக்கின்றன என்றும் முன்னுரையில் சொல்லிவிட்டு, K P ஜானகியம்மாள் குறித்த கட்டுரையில் தோழர் சங்கரய்யாவின் தம்பி தோழர் என்.ராமக்கிருஷ்ணன் அவர்கள் 3 புத்தகங்கள் எழுதி உள்ளார் என்று சொல்வதும் முன் பின் முரணாக உள்ளது, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளலாம்.
முதல் பெண்களை தேடித் தொகுத்த நூலாசிரியர் நிவேதா லூயிஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்
நூலின் தகவல்கள்
நூல் : முதல் பெண்கள்
ஆசிரியர்: நிவேதா லூயிஸ்
பக்கம் : 224
விலை : 280
வெளியீடு : மைத்ரி புக்ஸ்
நூல் அறிமுகம் எழுதியவர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

