புன்னகையும்…மகிழ்வுமாய் பேசிக்கொண்டிருக்கும் நட்பு வட்டாரத்தில்…அந்நபர் இல்லையெனினும் யாரோ ஒருவர் பெயர் மட்டும் அப்பப்போ உரையாடலில் இடம்பெற யார் அவள் என்ற எண்ணம் மட்டும் மனதை சிந்தனையில் ஆளச்செய்கிறது ராமுவுக்கு…
‘யாருடா அது’ எனத் தன் தோழனிடம் கேட்ட போது அவ எங்க கூட பள்ளியில் ஒன்றாக படித்தவள்…ரொம்ப நல்ல பொண்ணு டா…யாருக்கு கஷ்டம் வந்தாலும் உதவி செய்றதுல அவளை மிஞ்ச முடியாது.
ஏன் நம்ம குமாருக்கு காலேஜ் பீஸ் கட்டுவது கூட அவ தான்…
என்னடா…இவ்வளோ நடக்குது எனக்கு அந்த பொண்ணைப்பத்தி எதுவுமே தெரியலையே…
சரிடா ஒருநாள் சந்திப்போம்…அப்போ அவளை உனக்கு அறிமுகப்படுத்துறேன் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அனைவரும் செல்கின்றனர்.
ராமுவின் மனதில் அந்தப்பொண்ணு நினைப்பு நீங்காம ஓடிக்கிட்டே இருந்தது.இவ்ளோ வருஷமா கூடவே இருந்தும் ஏன் நமக்கு இப்படி தெரியாம பண்றாங்கனு நினைப்பு அதிகமானாலும் எதுவும் பண்ண முடியலை.
ஒவ்வொருநாளும் கல்லூரியில் ஏதோ பேச்சுக்கு நடுவில் அவள் பெயர் சரளமாக பேசப்படுவதை உணர ஆரம்பித்தான்.அவளை எப்படியாவது சந்திக்க வேண்டும் என ராகுலிடம் கேட்டுக்கொண்டான்.
அவள் சென்னையில் படிக்கிறாள்.ஊருக்கு வந்ததும் கண்டிப்பா சந்திக்க வருவாள்.அப்போது உன்னை அறிமுகப்படுத்துறேன் என்றான் ராகுல்.
சரி சரி என உதடுகள் சொன்னாலும் மனம் எப்போது என ஏங்க ஆரம்பித்தது….இது காதலா…என்ன உணர்வு என இனம் புரியாத புதிராய் மனதை குழப்பிக் கொண்டிருக்கும் வேளையில் நண்பர்கள் குழுவில் ஜெயந்திக்கு திருமணம் என்ற பரபரப்பு பேச்சு அதிகமானது.
என்ன ஜெயந்தி நிஜமாகவே கல்யாணம் தானா…இல்லை சும்மா எல்லாரும் பேசிக்கிறாங்களா…என ராம் கேட்க…
நிஜமா தான் ராம்…எனக்கு கல்யாணம்…வரும் 28 ம் தேதி நிச்சயதார்த்தம்…கண்டிப்பா நீ வரணும் என்றாள் ஜெயந்தி.
நீ கூப்பிட்டுற…எப்படி வராமல் இருப்பேன்…கண்டிப்பா வருவேன்…என்று கூறிவிட்டு திரும்புவதற்குள் ராம்…அப்போ நம்ம அகல்யா வருவாள் தான ஜெயந்தி என புன்னகையோடு கேட்டான்.
கண்டிப்பா வருவாள்…ஏற்கனவே சொல்லிட்டேன்…என்ன வேலை இருந்தாலும் வந்துடனும்னு…வருவாள்…என்று கூறியதும் ராம் மனதிற்குள் மகிழ்ச்சி எல்லையில்லா இரசனைக்குரித்தானது…
எப்போது நாட்கள் ஓடும்…என்ற நாள்காட்டியோடு தினமும் போரிட்டு…
தேதி 28 ம் ஆனது…இன்று…அகல்யா வை சந்திக்க போகிறேன் என்ற பூரிப்பில் காலையில் இருந்தே தலை கால் புரியாதவனாய் சுற்றி வந்தான்.
ராம்…எப்போ நிச்சயதார்த்தம்…எப்போ போகனும் எனக்கேட்க…இன்னும் நேரம் இருக்குடா…நீ சரியில்லை என்று கேளிக்கையாய் பதில் கூற…அப்படிலாம் எதும் இல்லடா…
ஏதோ உணர்வில் பார்க்கனும் என்ற ஆசை அதிகமாக உள்ளது…அவ்ளோ தான் என்றான்.
மாலையும் வந்தது… நண்பர்கள் கூட்டத்தோடு ராம்…ஜெயந்தி வீட்டிற்கு செல்கிறான்…
ஜெயந்தி வீட்டில் உறவினர் கூட்டம் நிரம்பி வழிய… இக்கூட்டத்தில் எப்படி அகல்யாவைத்தேடுவது என சுற்றிலும் பார்க்க…
ஜெயந்தி அறைக்குள் இருந்து அழைக்கிறாள்…ராம் உள்ளே வாடா…என
மணப்பெண்ணாய் அலங்கரித்த ஜெயந்தியை பார்த்தவனாய் புன்னகைத்து உள்செல்லும் போதே…
பார்க்கிறான்…அவளது அருகில் அகல்யா நின்று கொண்டிருப்பதை…
ஜெயந்தியை பார்த்து புன்னகைத்தாலும்…அருகில் இருக்கும் அகல்யாவிடம்…
நீங்கள் தான் அகல்யாவா…எனக்கேட்க அவளும் ஆமாம் நீங்க…எனக்கேட்க தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.
இருவரும் முதல் பார்வை…முதல் பேச்சு இதில் ஏதோ தடுமாற்றமாய் பேசிக்கொண்டாலும்…நீண்ட நாள் பழகியது போல் ஒரு எண்ணம் இருவருக்குள்ளும் அசை போட ஆரம்பித்தது….
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

