Muthal Thagaval Poem by Kumaran Viji முதல் தகவல் கவிதை - குமரன்விஜி

முதல் தகவல் கவிதை – குமரன்விஜி




மா நிலம் விட்டு மா நிலம் தாவும்
மயிலும் குயிலும் இறைதேடும் கவிதைகள்.
கூலியென்று தொழிற்சாலை
உன் பெயரைத் தொங்கவிடுகிறது
கைரேகைக்குள்
வறுமையின் எட்டுதிசைச் சாலை
ராஜஸ்தான் டைல்ஸ்ஸில் ஆலை விடுதி
அழுவதற்கு மட்டும் அதே கண்கள்
நானொரு அடிமட்டம் தாங்குகிறேன்
அன்பு உயர் மட்டம் ஏறிக்கொண்டது
இப்படிக்கு
என்று என் கைப்பேசி எழுதி முடித்த கடிதம்
உனைச் சேர்த்தேன் பதிலில்லை.
முதல் தகவல்
அவள் ஆலையால் இறக்கவில்லை
பிறந்திருக்கிறாள் என்கிறார்கள்.
எவ்வளவு நல்லவர்கள் அவர்கள்
உயிர் கடிதங்களை கிழித்து பின் படிக்கிறார்கள்
இந்த ஆண்டு இலக்கு 2 + 2/2.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *