நூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…! – மோசஸ் பிரபு

 

கொராணா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பசியால் மரணிக்கிறார்கள், வேலையிழக்கிறார்கள், குழந்தையின் கண்ணெதிரே தாய் மடிவதும் தாயின் மடியில் உணவின்றி குழந்தை மரணிப்பதும் ஒவ்வொரு நாளாய் கொடுமைகள் நடக்கும் இந்த வேளையிலும் சில மத நம்பிக்கையாளர்கள் நம்மிடையே வந்து வாக்குவாதம் செய்கிறார்கள் இதெல்லாம் அப்போதே நடக்கும் என எங்கள் மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது பெரும் கொள்ளை நோய் வரும் மக்கள் மடிவார்கள் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறது என்று தங்கள் மத பெருமைகளை இந்த சூழலிலும் நிலைநாட்டுகிறார்கள். ஒரு வாதத்திற்கு அதையெல்லாம் ஒப்புக்கொண்டு அவர்களிடம் இந்த பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு.? எனக் கேட்டால் நீங்கள் முழு மனதோடு கடவுளை வணங்க வேண்டும் என சொல்லி கடுப்பேத்துகிறார்கள்.

இந்நிலைமைக்கு காரணமான உண்மையான எதிரியான முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பையும் அதை காப்பாற்றும் இந்த அரசு எந்திரத்தின் மீதும் கோபம் வராமல் இப்படி மடைமாற்றம் செய்யும் இந்த மத பிரச்சரகாரர்களால் கடவுளை வணங்கு… முழு மனதோடு வணங்கு… முட்டிப்போட்டு வணங்கு.. பாஸ்டிங் இருந்து வணங்கு..போன்வற்றை தவிர வேறெதையும் அவர்களால் சொல்ல முடியாது..

ஊரடங்கு முடிந்த பிறகு நடக்கவிருக்கும் மத பிரச்சார கூட்டங்களில் கொராணா தொற்று சூழலை ஒரு முதலீடாக மாற்றி இன்னும் இந்த மூடநம்பிக்கையை கெட்டிப்படுத்திக்கொள்வார்கள் பல தொலைக்காட்சிகளில் அதைத்தான் செய்து வருகிறார்கள். உண்மையில் இந்த நெருக்கடி சூழலை கம்யூனிஸ்டுகள் தான் முதலீடாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மத நிறுவனங்களை போல் இலாபம் சம்பாதிக்கப்பதற்கான முதலீடாக அல்ல உழைக்கும் மக்களின் விடுதலைக்காக.

இன்றைய புதிய சூழலில் மார்க்ஸியம் ...

இந்த நெருக்கடியை மட்டுமல்ல இந்த முதலாளித்துவ அமைப்பு என்னென்ன நெருக்கடிக்களை சந்திக்கும் என்பதையும் அது தன்னை நிலைநாட்டிக்கொள்ள என்னென்ன யுக்திகளை கையாளும் என்பதையும் அதிலிருந்து மீள தொழிலாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின் தங்களின் எழுத்துக்களின் வழியாக சொல்லியிருக்கிறார்கள் அதை முழுமையாய் இச்சூழலில் பயன்படுத்த வேண்டும்…

அதன் ஒரு பகுதியை விளக்கி ஜார்ஜ் தாம்சன் எழுதியிருக்கும் புத்தகம் தான் இந்த “முதலாளியமும் அதன் பிறகும்” என்கிற புத்தகம். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் மனிதன் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதும் இயற்கையை தன்வசப்படுத்திக்கொள்ளும் திறனும் தான். தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்த (பயன் மதிப்பு) நிலையிலிருந்து பிறருக்கு பரிவர்த்தனை செய்ய துவங்கும் போது உபரி உற்பத்தியின் தேவை ஏற்படுகிறது இந்த உற்பத்தி பெருக்கத்தின் அடிப்படையாக கொண்டுதான் சமூகத்தின் மேல் கட்டுமானம் உண்டாக்கப்படுகிறது

அபரிதமான உற்பத்தி பெருக்கத்தின் உச்சம் தான் முதலாளித்துவ சமூக அமைப்புமுறை. இதில் உற்பத்தி முறை வளர வேண்டும் எனில் உழைப்பு சக்தி உடையவர்கள் அதாவது தொழிலாளிகள் அதை விற்க உரிமை உள்ளவர்களாகவும் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்… இந்த விருப்பம் என்பது தொழிலாளிகளை கசக்கி பிழிவதன் மூலம் ஏற்படுகிறது

சலுகைசார் முதலாளியம் (CRONY CAPITALISM ...

வேலையின்மையை உண்டாக்குவதன் மூலம் ஏற்படுகிறது இந்த நெருக்கடிகளை வர்க்க போராட்டத்தின் மூலம் வீழ்த்திதான் சோசலிசம் ஏற்படும். அதற்கு சோசலிச உற்பத்தி முறை முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்து எந்த வகையில் வேறுபட்டிருக்கும்..? கம்யூனிஸ சமூக அமைப்பு எப்படி உருவாகும்..? என்பதை சரக்கு உற்பத்தியின் தோற்றம், முதல் பொதுவுடமை நோக்கி மாறும் கட்டம் வரை  9 பகுதிகளாகவும் வணிகர்களின் மூலதனம், சரக்குகளக்கு ஏற்றப்படும் மானுடப்பண்பு, என 50க்கும் மேற்பட்ட உபதலைப்புகளோடும் எளிமையாக விவரித்துள்ளார்….

இன்றைய நெருக்கடி சூழலுக்கு பொருந்தும் பல வகையில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின் எழுத்துக்களை நூல் முழுவதும் பார்க்கலாம். மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் விளக்கங்களும் அதிகம் இடம் பெற்றிருக்கிறது எனவே மார்க்சியத்தை அறிந்துகொள்ள ஒரு துவக்க கையேடாக நிச்சயம் இருக்கும். சிறப்பான மொழிப்பெயர்ப்பு தோழர் எஸ்.வி.ராஜதுரையுடையது NCBH வெளியீடு

வாசிக்கவும் தோழர்களே…!