கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் முத்து குளிக்க வாரீகளா என்ற இந்நூல் நேஷனல் பதிப்பகத்தின் வெளியீடாக 154 பக்கங்களைக் கொண்டது இந் நூலின் விலை ரூபாய் 150 தமிழ் இந்து நாளேட்டில் தொடராக வந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் மதநல்லிணக்கம் அரசியல் அறிவியல் தமிழில் மனித இனவரலாறு சமய இலக்கியம் என்ற பொருளில் en31 கட்டுரைகள் அமைந்துள்ளன. கடவுளின் துகள் குருதட்சனை ஆதீனம் தீமையும் நன்மைக்கே கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு மதம் கிடையாது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். ஆத்திகன் நாத்திகன் என்பவன் இந்நூலில் உள்ள முக்கியமான கட்டுரைகளை உரைநடை கவிதைகளின் தொகுப்பு என்று கூறலாம்.

அணிந்துரை வழங்கியுள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் இன்னும் மூன்று தளங்களில் செயல்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். முதலாவதாக தங்களிடையே உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டி அன்பின் மகத்துவத்தை அடையாளம் காட்டுகிறது. இரண்டாவதாக தமிழர்களின் வரலாறு தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவற்றை ஆராய்கிறது. மூன்றாவதாக கவிஞன் தான் வாழும் காலத்தின் குரலாக ஒலிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மதவாத சக்திகள் பெருகி வரும் இச்சூழலில் தனது பொறுப்பை உணர்ந்து உண்மைகளின் தொகுப்பாகும். ஞானம் என்னும் பெருங்கடலில் மூழ்கி திறக்கப்படாத அன்பின் சிப்பிகளை அடையாளங்களைத் தேடி சேகரித்து தமிழ் சமூகத்திற்கும் அரசவை கவிஞர் கவிஞர் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் இருக்கவே இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் கவிஞர் இந்தியாவில் நடந்த கூட்டத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட மிகச் சிறந்த நூலை நாம் அனைவரும் வாங்கி சுவைத்து மகிழ்வோம்.

ஆ.முத்துக்குமார்,
முதுகலை ஆசிரியர்,
அரசு மேனிலைப்பள்ளி,
உத்தம்பாளையம்,
தேனி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *