கவிதை: முழுமை நேசத்திற்காக - Dr. ஜலீலா முஸம்மில்n - poetry - kavithaikal - tamil poem - bookday - https://bookday.in/

கவிதை: முழுமை நேசத்திற்காக – Dr. ஜலீலா முஸம்மில்

முழுமை நேசத்திற்காக…..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மனவாறுதல் கடினமான நாட்களில்;
மெலிதான புன்னகை துயரத்தின் ஊடுருவலில்;
முகிழ்க்கும் வானவில்லாய் கருமேகங்கள் பொழிந்ததும்;
மகிழ்நகை சொற்களால் முத்திட்ட வேளையில்;
மந்தார அந்தியாய் இதயத்தில் சிறுஉஷ்ணம்;
மிகை நேசவிரல்கள் தொய்கின்ற போதினில்;
மழைக்கால விழி துடைத்த அழகோவிய தரிசனம்;
மாசிலா மனவூக்கம்
சாபங்களின் சடைத்தலில்:
மகாபொறுமை பூமியெனத் தாங்குகின்ற தோதினில்;
மன்னிக்கும் தயாளம் சிறுவிகல்ப விசும்பலில்;

முழுநிலவுக்காய் ஆகாயமளவு காத்திருப்பதில் தவறேதுமில்லை…
முழுமை நேசத்திற்காகத்தானே
இத்தனை வாழ்தலும்?

எழுதியவர் :
Dr. ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *