கவிதை : என் மகள் – சூரியாதேவி
விண்ணகமும் வியப்பில் மூழ்கிப் போகும்
அவளது விரல் தொட்டால்
மண்ணகமும் மாயையில் சாகும் அவளது மலரடிபட்டால்
சிறுஉதட்டுப்புன்னகையோ தீ என்னும் வேந்தனை
பூவாக மாற்றும்
அவளது பால் முகத்தில் பட்ட நீர்த்துளியோ
சிதறி சின்னாபின்னமாகும்
மீதமென்ன ?
அந்தக் காற்றுதானே ?
காற்றையும் அவளது கண்ஜாடை புயல்போல்
தூக்கி தூரவீசிடும்
யாரவள் அந்த பூமகள்?
அவளோ என் மகள்!
எழுதியவர் :
சூரியாதேவி ஆ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.