என் ஊரின் கதை:- *நிலக்கிழார்* – இ. சதீஷ்குமார்

என் ஊரின் கதை:- *நிலக்கிழார்* – இ. சதீஷ்குமார்பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முதல் 10 கதைகளுள் இக்கதையும்  ஒன்று.

போட்டி முடிவுகளை காண கிளிக் செய்க : ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள்

மீசையயை முறுக்கி வெண்ணிற தாடியை வருடிய படி காளை மாட்டின் மூக்கனான் கயிறு பிடித்து மாட்டை  தடவி கொடுத்தபடி  கூண்டு வண்டியில் இரண்டு மாட்டையும்  பூட்டி துள்ளி வண்டியில் ஏறி உட்கார்ந்தார் , கையில் நீர்  ஆகாரத்தோடு நின்று கொண்டிருந்த மருமகளிடம் வாங்கி குடித்தபடி வீட்டை விட்டு யாரும் வெளியே போகவேண்டாம் எந்த வேலையாக இருந்தாலும் பிறகு  பார்க்கலாம் என்று தனது மூன்று மகன்களிடம் கட்டளை யிட்டார்  சரிப்பா என்றார்கள், காலை சாப்பாட்டை சீக்கிரம் செய்துவிடு என்றார் மருமகளிடம் சரிங்கப்பா என்று கையில் சொம்பை வாங்கிய படி தலையயை அசைத்தால்,  காளை மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் மாட்டியிருந்த சலங்கையை ஒலிக்க செய்து புறப்பட தயாரானது  அப்போது வீட்டின் முற்றத்தில் நாய் குட்டிகளோடு விளையாடி கொண்டிருந்த இளமுருகு தாத்தா நானும் வரேன் என்று கூண்டு வண்டியை நோக்கி ஓடிவந்தான் தத்தாவோ வேணாம்டா “சின்ன குட்டி” இங்கேயே இரு அத்தை , சித்தப்பா , தாத்தா , பாட்டி எல்லோரும் வராங்க தாத்தா போயி அழைத்துகொண்டு வருகிறேன் சரியா என்றார்  இல்ல தாத்தா நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் அம்மாவோ டேய் இங்க வாடா என்று கையயை பிடித்து இழுத்தால் சற்று கோவமாக …வழக்கத்தை விட வேகமாக அழுதான் சரி… சரி …அவனை விடு என்றார் தாடிதாத்தா , தாத்தா… என்று அழுதபடியே வண்டியை நோக்கி ஓடினான் வண்டியில் அமர்ந்து இருந்த தாத்தா தனது இடக்காலால் அவனது கால் நடுவே விட்டு அவனை அப்படியே கைகளை பற்றி மேலே தூக்கி  மடியில் அமர்த்தி கொண்டு தலையை கோதிய படி அழாதடா என்று கண்களை துடைத்து கொண்டே அவனை சமாதானப்படுத்தினார்… தாத்தா  உன்னை அழைத்து செல்கிறேன் சரியா என்று கழண்டு இருந்த சட்டை பட்டனை  போட்டுவிட்டார்  முகத்தில்  சிரிப்பும், சந்தோசமும் அவன் அழுகையை திணற அடித்தது… போலாமா என்று அவனை மடியில் அமர்தியபடி  மாட்டை விரட்டினார்  காளை திமிறிக்கொண்டு தெருவை கடந்து சாலைக்கு சென்றது… அதிகாலை எழுந்த சூரியனை நோக்கி வண்டி வேகமாக ஓடியது… இருபக்கமும் அருவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பனி துலியால் நனைந்து தலை தொங்கி கொண்டிருந்தன சில்லென்ற காற்றும் அதிகாலை சூரியன் வெளிச்சம்  இதமாய் தொட்டு கொண்டிருந்தன, மண்ரோடு என்பதால் லேசான புழுதியும் மண் வாசமும் வீசி கொண்டிருந்தது… அப்பொழுது எதிரில் நடந்து வந்து கொண்டிருந்த முதியவர் என்ன தாடி ஐயா எங்க காலையிலே பேரனோட புறப்பட்டாச்சு என்றார்  ஊரில் இருந்து தம்பியும் , தம்பி பசங்களும் வராங்க அழைக்க போய்கிட்டு இருக்கேன் வரேன் என்று லேசாக மாட்டை  சாட்டையால் அடித்தபடி விரட்டினார் …அப்போது வானத்தின் மேலே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்று கொண்டிருந்தன…. ஆட்காட்டி குருவி அக்கா… அக்கா…என்று ராகமாய் கூவி கொண்டிருந்தது  சிலர் வயல்களில் தலைப்பாகை அணிந்தபடி நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள் ரோட்டின் ஓரம் சிறிய ஓடை யில் நீர் மிதமாக ஓடிக்கொண்டிருந்தன குட்டிமீன்கள் மேலே பாய்ந்து! பாய்ந்து! நீருக்குள் ஓடி !ஓடி! ஒலிந்து கொண்டன கொக்குகளும் , நாரைகளும் மீனை பிடிப்பதற்கு ஓடையின் ஓரம் உள்ள மரக்கிலையில் அமர்ந்து காத்து கொண்டிருந்தன … அப்போது“சின்ன குட்டி” ரொம்ப குலூரா இருக்கா ஆமாம் தாத்தா என்றான் தனது தலையில் கட்டியிருந்த துண்டை கழட்டி கொடுத்து இதை தலையில் போத்திக்கோ என்றார் சரி தாத்தா என்று தலையில் போத்தி தாத்தாவின் மார்பில் பின்புறமாக ஒட்டி கொண்டான் …சாலை “கடலாழி ” என்னும் ஆற்றின் கரையோரம் போய் ஏறியது ஆற்றில் நீர் வழிந்து மெதுவாக ஓடி கொண்டிருந்தது மீன் குத்தி பறவைகல் மீனை பிடிப்பதற்கு ஆற்றை பார்த்தபடியே மேலே பறந்து கொண்டிருந்தன ….. தாத்தா இவ்வளவு தண்ணியும் எங்கிருந்து வருது… எங்க போகுது…என்று கேட்டான் காவேரி ஆற்றில் இருந்து வந்து பூம்புகார் கடலில் போய் கலந்து விடும் என்று சொன்னபடி  இடது புறமாக உள்ள ஆற்றின் மேம்பாலத்தை கடந்து “கடலி” என்ற ஊரை வந்தடைந்தார் …வண்டியை பஸ்டாண்ட்  ஓரமாக உள்ள தூங்குமூஞ்சு மரத்தின் நிழலில் நிறுத்தினார்  சின்ன குட்டி இங்கேய உட்காரு கீழே இறங்கி விடாதே மாட்டின் “கடிவாளத்தை” இறுக்கி பிடித்துகொள்  விட்டு விடாதே என்று மடியில் அமர்ந்து இருந்த அவனை வண்டியில் உட்கார வைத்து விட்டு கீழே இறங்கி தனது வெள்ளை நிற வேட்டியை மடித்து கட்டிய படி அருகில் உள்ள டீ கடை காரரிடம் “காரைக்கால்”  போர பஸ் வந்துடுச்சா என்று கேட்டார் வர நேரம்தான் ஐயா என்றார் சரி சரி என்றபடி தனது கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மணி 8.00 ஐ  தாண்டி விட்டதே என்றார்  , சில நேரம் லேட் டாகதான் ஐயா வரும்  டீ ஏதாவது போடுட்டுமா என்று டீ கடைக்காரர் கேட்டார் வேண்டாம் இப்போதான் வீட்ல நீர் ஆகாரம் சாப்பிட்டு வரேன் என்று கூறியபடி வெறிச்சோடிய சாலையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் அப்போது தூரத்தில் பஸ் ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது தாத்தா முகத்தில் லேசான புன்னகை ஓடியது… ஒருசிலர் பஸ் ஏறுவதற்காக ஓடி வந்து கொண்டிருந்தனர் சிகப்பு நிற பஸ் பாம்பு வலைக்குள் இருந்து தவழ்ந்து வருதுவபோல் வந்தது சாலை இருபக்கம் சூழ்ந்து இருந்த மரக்கிலைகல் காற்றில் அசைந்து ஆடின  பஸ் பெருமூச்சு வாங்கி விட்டதுபோல் சத்தத்தோடு வந்து நின்றது  தாத்தாவோ  இரண்டு புறம் உள்ள பஸ் படிக்கட்டை பார்த்தவாறு ஆவலாக நின்று கொண்டிருந்தார் “அண்ணே “ என்று கூறியபடி பஸ்ஸை விட்டு இறங்கி முகக் கண்ணாடியை கழட்டியபடி  ஓடிவந்து  அண்ணனை கட்டிப்பிடுத்து கொண்டார் கண்ணாடி தாத்தா வாடா தம்பி என்று கட்டியணைத்தபடி லேசாக கண்கள் கலங்கினார் … பசங்கல்லாம் எங்கே என்றார்?  இதோ அந்த படிக்கட்டு வழியாக இறங்குராங்க  இந்தப்பக்கம் கூட்டமா இருக்கிறதால அப்படியே வராங்க என்றார் சரி சரி என்றபடியே முன் படிக்கட்டை நோக்கி சென்றார் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடிவந்து மகளும் , மகன்களும் பெரியப்பா என்று கட்டிப்பிடுத்து கொண்டனர் வாங்கடா செல்லங்களா என்று அரவணைத்தபடியே வாம்மா என்று தனது தம்பி மனைவியையும் வரவேற்றார் அனைவரும் கூண்டு வண்டியை நோக்கி நடந்து வந்தனர் கடிவாளத்தை இறுக்கி பிடித்தபடி அமர்ந்து இருந்தான் “இளமுருகு” டேய் சின்னகுட்டி யாரு வந்திருங்காங்க பாரு என்றார் தாடி தாத்தா , ஓடி போய் இளமுருகை தூக்கி கொண்டு முத்தத்தால் அரவனைத்தால் அத்தை … தாத்தா , இரண்டு சித்தப்பா ,பாட்டி என அனைவரும் பாசத்தின் உச்சத்தை கான்பித்தனர் சரி சரி நாம் புறப்படலாம் என்றார் தாடி தாத்தா அவர்கள் எடுத்து வந்த லக்கே‌ஃஜ் ஐ கூண்டுவண்டியின் கீழ் உள்ள கயிற்று கூண்டில் எடுத்து வைத்து அனைவரும் ஏறி வண்டியில் வீட்டிற்கு வந்தடைந்தனர்  தெருவே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஒரு சிலர் ஓடிவந்து நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரித்து சென்றார்கள் …வீட்டில் மருமகள் , மகன்கள் பக்கத்து வீட்டில் உள்ள பங்காளிகள்வாங்க !வாங்க! என்று “ஆரத்தி” எடுத்து வரவேற்றார்கள் …

அவர்கள் வாங்கி வந்த புது துணிகள் , பழங்கள் ,இனிப்பு போன்றைவைகளை வீட்டின் பூசை அரையில் உள்ள தனது அம்மா , தனது அண்ணன் மனைவி போட்டோ முன்பு  சிரிது நேரம் வைத்தபடி கண்ணாடி தாத்தா எல்லோருக்கும் ஒவ்வென்றாக எடுத்து கொடுத்தார் … இளமுருகுக்கு பெரிய “மரப்பாச்சி” பொம்மையை பரிசாக கொடுத்தார் பிறகு மருமகள் எல்லோரும் வாங்க சாப்பிடலாம்  என்று வாழை இலையயை விறித்தப்படி வரவேற்றால் காலை உணவாக “உளுந்து கலி , இட்லி, பொங்கல் ,முடக்கத்தான் தோசை, குழிபனியாரம் ” என மருமகள் வழக்கத்தை விட பலமாக தனது கைவரிசையை காண்பித்து இருந்தால் சாப்பிட்ட படியே உங்கள அடிச்சுக்கவே முடியாது அண்ணி என்று பாராட்டினாள் அத்தை காரி , இளமுருகு எல்லாவற்றையும் ஒரு கை பார்த்தான் …

நாளை பொங்கல் என்பதால் வீட்டை சுத்தம் செய்தனர் ஓட்டு வீடு என்பதால் முழுவதும் படிந்து இருந்த ஒட்டடைகலை சுத்தப்படுத்திகொண்டிருந்தார்கள், நெல் கொட்டி வைக்கும் மண் “குதிறில்” எலி குஞ்சுகலை ஈன்று இருந்து எலி குஞ்சுகளின் வாலை இழுத்தப்படியே விளையாடி கொண்டிருந்தான் இளமுருகு இதனை பார்த்த இளமுருகு அம்மா  வேண்டாம்டா பாவம் விட்டுவிடு என்று திறந்து இருந்த “குதிற்” ஐ  மூடினால் ….வீட்டை ஒருவழியாக சுத்தபடுத்தி முடித்தனர் .

மருநாள் பொழுது விடியும் தருவாயில் மார்கழி கடைசி நாள் என்பதால்“சங்கு ஊதி” “இறைவனின் நாதமாக” இருக்கக் கூடிய  “சங்கு” , “மணி” ஓசையயை தெருவில் கடந்த நாட்களை விட அதிகமாக  தொடர்ந்து இசைத்தபடி விடியலையும் , இறைவனையும் உணர்த்தி சென்றார்… வீட்டின் பின்புறம் உள்ள நெல்களை பாது காத்து வைத்திருக்கும் “நிலக்கோட்டையில்” மேல் சேவல் ஏறி நின்று வழக்கம் போல் கூவி இரவை விரட்டி கொண்டிருந்தது… வீட்டின் முற்றத்தில் மாக்கோலம் இட்டு கொண்டிருந்தனர்  வீட்டின் வாசலில் தாடி தாத்தா மாவிலை தோரணம் கட்டிக்கொண்டிருந்தார் , கண்ணாடி தாத்தா பொங்கல் பானை வைப்பதற்கு தகுந்த நேரம் எது என்று “பஞ்சாங்கம்” பார்த்து கொண்டிருந்தார் சித்தப்பாக்கள் கரும்பு தோரணம் கட்டி கொண்டிருந்தனர் இளமுருகு அப்பா வாழை இலை அறுத்து கொண்டுவந்தார் அப்போது வாசலில் ஐயா என்று குரல் ஒலித்தது கோவிந்தன் தோளில் பெரிய பறங்கி காயும் , மருதவாணனும் தோளில் பெரிய வாழை தாரும்  , ஆளுக்கொரு கையில் கரும்போடு வந்து வாசலில் வந்து நின்று கும்பிடுகிறேன் ஐயா என்றனர் தாடி தாத்தா அன்போடு வாங்கப்பா என்று வரவேற்றார் ஐயா இதை வாங்கிக் கொல்லுங்கள் என்றனர் , தாடி தாத்தா தனது மூத்த மகனை இளவரசா இங்கே வாடா என்று அழைத்தார் கையில் வாழை இலையோடு ஓடி வந்தார் இதை வாங்கி வைத்து விட்டு உள்ளே இரண்டு வேட்டி , சட்டை ,புடவை “கள்ளி” பெட்டியின்  மேல் வைத்து இருக்கேன் எடுத்துவா என்றார் .. வாங்கி துணிகளை கோவிந்தனுக்கும் , மருதவாணனுக்கும் கொடுத்தார் தனது இரண்டாவது மகன் இளஞ்சேரணை  கூப்பிட்டு உள்ளே நான்கு நெல் மூட்டையை எடுத்துவா என்றார் தனது மூன்றாவது மகன் இளமாரனை கூப்பிட்டு நீ போய் பாரை வண்டியையும் மாட்டையும் பூட்டி நெல் மூட்டைகளையும் சேர்த்து அனுப்பிவிடு என்றார்  நெல் அறுவடை  இருக்கு ஆள் சொல்லிவிட்டீர்களா என்றார்   ஏற்கனவே சொல்லியாச்சு ஐயா என்றனர் கோவிந்தனும் , மருதவாணனும்,  சரிங்க ஐயா நாங்கள் புறப்படுகிறோம் என்று தனக்கு கொடுத்த நெல் மூட்டைகலை பெற்றுகொண்டு அவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டு திரும்ப வந்து மாட்டையும் , வண்டியையும் விட்டு சென்றனர், வீட்டின் வாசலில் வண்ணக் கோலத்தின் நடுவே பசு மாட்டின் சானத்தை கையால் பிடித்து வைத்து பூசனி  , பரங்கி ஃபூக்களை அதில் சொருகி வைத்து இருந்தனர் வீட்டின் வாசலை அழகாக அலங்கரித்து கொண்டிருந்தன …

அப்போது கண்ணாடி தாத்தா அடுப்பில் பொங்கல் பானை வைக்கலாம் நேரம் சரியாக இருக்கு என்றார்  சானத்தால் மொழுகி  கோலம் இட்டு  சூரியன் எழும் திசை நோக்கி இருந்த கள்அடுப்பில் மருமகளும், சின்ன மாமியாரும் கற்பூரம் ஏற்றி விறகை பற்ற வைத்தனர்   , மஞ்சள் கொத்து  கட்டி இருந்த இருந்த மண் பானையை மருமகளும்,  சின்ன மாமியாரும்  ஆளுக்கொரு அடுப்பில் எடுத்து வைத்தனர் பிறகு பானையில் அருகம்பிள்ளும் ,கடலாழி ஆற்றில் இருந்து எடுக்கப்பட நீரை சிறிதும் , பசும் பாலையும் , அரிசி களைந்த நீரையும் சேர்த்து பானையில் ஊற்றினார்கல்  மருமகள் சர்க்கரை பொங்கலும் சின்ன மாமியார் வெண்பொங்கலையும் பிறித்துகொண்டு அடுப்பில் விறகை வைத்து போட்டி போட்டு எரித்தனர் யாரோடு பானையில் முதலில் பொங்க போகிறது என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தனர் முதலில் மருமகளோட பானையில் பொங்கி வழிந்தது சுற்றி இருந்த அனைவரும் “பொங்கலோ பொங்கல்” “பொங்கலோ பொங்கல்” “பொங்கலோ பொங்கல்”…. என்று தெருவே கேட்கும் படி கூவினர்  உடனே சின்ன மாமியார் பானையும் பொங்கி வழிந்தது மறுபடியும் “பொங்கலோ பொங்கல்” “பொங்கலோ பொங்கல்” “பொங்கலோ பொங்கல்… என்று அனைவரும் கூவினர்  தங்கள் வயலில் விளைந்த தயார் நிலையில் வைத்து இருந்த கைகுத்தல் அரிசியை பானையில் இட்டு பொங்கல் பொங்கினார்கள் பிறகு மாட்டு சானத்தை பிடித்து அதில் அருகம் பில்லை சொருகி முகப்பில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் சிறிய பூமாலை அணிந்து தும்பை பூவை தூவி   அதற்கு முன்பு தலை வாழை இலையில் தேங்காய் , பழம் ,வெற்றிலை , பாக்கு, நெற்க்கதிர் , தெண்ணை குருத்து , பொங்கல் , புது துணி என படையல் இட்டு சூரியனை  நோக்கி வழிபட்டனர் , படைத்த பொங்கலை சிறிது காக்கைக்கு உணவலித்தால் சின்ன மாமியார் , எல்லோருக்கும் புது துணிகளை வழங்கினார் தாடி தாத்தா பிறகு படையலில் இருந்த நெற்க்கதிரை வைக்கோல் திரியினால் வீட்டின் வாசலில் கட்டினார் கண்ணாடி தாத்தா , பிறகு எல்லோரும் சாப்பிட  வந்தனர் படைத்த இலையை முற்றத்தில் இருந்து கையில் சூடோடு தூக்கி கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்து  பெரியமாமனார் முன்பு வைத்தால் மருமகள் பெரிய மாமனார் எல்லோருக்கும் ஒரு கைப்பிடி பொங்கலை வழங்கினார் எல்லோரும் கையில் வாங்கி சாப்பிட்டபடியே அவர்கள் இருக்கையில் அமர்ந்தனர் இளமுருகு தாத்தா எனக்கும் கையில் கொடுங்கள் என்றான் வேண்டாம்டா தாத்தா உனக்கு ஊட்டி விடுகிறேன் என்றார் வேண்டாம் தாத்தா எனக்கும் கையில் கொடுங்கள் என்று கையில் வாங்கினான் கை சுட்டு விட்டது தாத்தா கை சுடுது என்று கத்தினான் சரி கத்தாதே என்று கையயை துடைத்தபடி மடியில் அமரவைத்து  ஊட்டி விட்டார்… மருமகள் எல்லோருக்கும் பரிமாரினார்   …மறுநாள் மாட்டு பொங்கல் காலையிலேயே அருகில் உள்ள குளத்தில் மாட்டை குளிப்பாட்டி புதிய மூக்கனான் கயிறு , புதிய சலங்கையும் மாட்டினர் பிறகு அறைத்த மஞ்சளை எடுத்து மாட்டின் பாதம் , வயிறு என எல்லா இடத்திலும் தடவிவிட்டு சிறிது நேரம் காலை சூரியஒளியில் நிர்க்க வைத்து பிறகு மாட்டை மாட்டு கொட்டகையில் கட்டினார் மாலை வந்ததும் பொங்கலிட்டு வீட்டின் ஓரம் உள்ள முற்றத்தில் இரண்டு மாடுகளையும் அழைத்து வந்து நெற்றியில் மஞ்சள் குங்குமம் திலகம் இட்டு மாலைகல் அணிவித்து தீபத்தால் ஆராதானை செய்து பொங்கலை மாட்டிற்கு  ஊட்டிவிட்டார் தாடி தாத்தா, மாட்டின் தலையயை தொட்டு எல்லோரும் வணங்கினார்கல் பிறகு மாட்டின் மூக்கனான் கையிறை பிடித்தபடி ஊரில் உள்ள மந்தை வெளிக்கு அழைத்து சென்றார்  கூடவே இளமுருகும் அவன் வீட்டின் எதிரில் உள்ள நண்பர்கள் காசிநாதன் , சுரேசும் கையில் சிறிய கன்று குட்டியை பிடித்தபடி ஓடிவந்தார்கள்… பக்கத்தில் உள்ள பங்காளிகள் , ஊரார்கள் என எல்லோரும் அவரவர்  மாடுகளை அழைத்து கொண்டு மந்தை வெளியை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர் , மந்தை வெளியே திருவிழாவாக  காட்சியளித்தது ஊரில் உள்ள வயது முதிர்ந்த பெரியவர் சிவபுரியார் எல்லா மாடுகளையும் நிற்க்க வைத்து படையளிட்டார் பிறகு மாட்டை தனி தனியாக நிர்க்க வைத்து “மஞ்சு விரட்டுக்கு” தயார் படுத்தினர்  எல்லோரும் அவர் அவர் மாடுகளை விரட்டினர் , காளைகள் துள்ளி பாய்ந்து ஓடி சுற்றி இருப்பவர்களை முட்ட ஓடியது அனைவரும் சிதறி ஓடினர்  தாடி தாத்தா  இளமுருகை மரத்தின் மீது அமர வைத்து விட்டு ஓடிய காளையை பிடிக்க ஓடினார்… மந்தைவெளி புழுதி காடாக மாறியது ஒரு சில காளைகள் முட்ட ஓடிவந்தும் ஒரு சிலர் மரத்தில் ஏரியும் , புதரில் பதுங்கியும் ,மந்தைவெளி ஒட்டியுள்ள “கடலாழி” ஆற்றில் குதித்தும் விளையாடினர் பிறகு  ஒருவழியாக அவரவர் அவர்களது மாட்டினை விரட்டியபடி வீட்டிற்கு ஓடிக் கொண்டிருந்தனர்  தாடி தாத்தா தனது இரண்டு மாட்டினை வீட்டிற்கு விரட்டியபடி “சின்னகுட்டி” வாடா என்று கையசைத்தபடி மாட்டை பிடிக்க ஓடி கொண்டிருந்தார் சரி தாத்தா நானும் வரேன் என்று புங்கை மரத்தின் கிலையயை பிடித்து கீழே தொங்கியபடி குதித்து தாத்தா பின்னாடி ஓடினான் தாத்தா படு வேகமாக ஓடி போய் இரண்டு மாட்டின் மூக்கனான் கையிறை இழுத்து பிடித்தபடி வீட்டின் வாசலை வந்தடைந்தார் தலையை ஆட்டி பெருமூச்சு விட்டபடி காளை திமிறி நின்றது இரண்டு கைகளிலும் காளையை பிடித்தபடி வெண்ணிற காளைகளுக்கு நடுவே வெண்தாடி காளையாக நின்றார் தாடி தாத்தா மூச்சு இரைக்க நண்பர்களோடு ஓடிவந்து நின்றான் இளமுருகு வீட்டின் வாசலில் மருமகள் ஆரத்தி எடுத்து வரவேற்றால்  ஓடிவந்து இரைப்பு தாங்கமுடியாமல் இளமுருகு வீட்டின் திண்ணையில் போய் படுத்தான், தாத்தா மாட்டு கொட்டகையில் மாட்டை கட்டிவிட்டு இளமுருகு காலை பிடித்து விட்டபடி திண்ணையில் அமர்ந்தார் மறுநாள் காணும் பொங்கல் தெருவில் உள்ள கன்னி பெண்கள் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு வீட்டின் வாசலில் பூக்களால் அலங்கரித்து , மஞ்சள் நீர் ஊற்றி சானத்தல் கட்டியிருந்த சிறிய தொட்டியை கைகளில் வைத்து இருந்த கூடையில் எடுத்து ஆற்றில் போய் கரைத்து வந்தனர் பிறகு  பொங்கலிட்டு கும்மியடித்து “கண்ணியம்மன்” பாடல் பாடி மகிழ்ந்தனர் , ஒருசில பெண்களுக்கு “கண்ணியம்மன்” அருள் வந்து ஆடத்தொடங்கினர் ,  இளையவர்கள் ஒன்று கூடி கோலாட்டம் , சிலம்பம் , கபடி , குஸ்தி என விளையாடி கொண்டிருந்தனர் இரவு நெருங்கியதும் வீட்டில் தீபம் ஏற்றி  வழிபட்டனர் சிறியவர்கள் ,பெரியவர்கள் காளில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் இளமுருகு தன் வீட்டில் உள்ளவர்கள் , பக்கத்து வீட்டில் உள்ள பெரியப்பா , அண்ணன் … போன்றவர்களின் காளில் விழுந்து  தனது காள்சட்டை பையில் சில்லரை காசுகளையும் , நெற்றி நிறைய விபூதியையும் பரிசாக பெற்றான்,  ஊரில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு வீட்டில் உள்ள பெரியவர்கள் காளில் விழுந்து அவர்கள் கொடுக்கும் சில்லரைகாசு, பணம் , திண்பண்டம் எல்லாவற்றையும் வாங்கியபடி ஏழை, பணக்காரன் , சாதி என்ற பாகுபாடில்லாமல் ஆசீர்வாதங்களை பெற்று சென்றனர்.. மறுநாள் கண்ணாடி தாத்தா , பாட்டி ,அத்தை , சித்தப்பாக்கள் எல்லோரும் கூண்டு வண்டியில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர்  வீட்டில் எல்லோரும் வாசலில் நின்றபடி வழியனுப்பி வைத்தனர் இளமுருகு கையில் மரப்பாச்சி பொம்மையோடு கையசைத்தபடி அம்மாவின் ஓரம் நின்று கொண்டிருந்தான் தாடி தாத்தா மாட்டை விரட்டி ஓட்டினார் …ஓரிரு நாட்கள் கடந்தது… தைமாதம் முதல் செவ்வாய் கிழமை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் ஒன்று கூடி தாழம் குருத்து , புங்கை, புளியங்கா மரத்தின் நுனி இலை, வைக்கோல்  , அரிசிமாவு… என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பூசை அரைக்குள் போய் தாழிட்டு கொண்டனர் பக்கத்தில் உள்ள பங்காளி பசங்கள் அண்ணன் தம்பி என எல்லோரையும் வெளி திண்ணையில் படுக்க வைத்தார்கள் இளமுருகுக்கு தூக்கம் வரவில்லை பக்கத்தில் படுத்து இருந்த பங்காளி பசங்களை எழுப்பி டேய் எழுந்திரிங்கடா உள்ள என்ன நடக்குதுன்னு பார்போம் என்று அழைத்து கொண்டு சத்தம் போடாமல் மரக்கதவின் லேசான இடுக்கின் வழியாக பார்த்து கொண்டிருந்தனர் …இளமுருகு அம்மா கையில் சிறிய பித்தளை தாம்பூலத்தட்டில் வைக்கோல் குச்சியால் லேசாக இசைத்துக்கொண்டு வாயில் ஏதோ சொல்லியபடி இருந்தாள் இதை பார்த்த பங்காளி அருண் சிரித்து விட்டான் அவன் சிரித்ததும் எல்லோரும் சிரித்துவிட்டனர்  சிரிப்பு சத்தம் கேட்டதும் உள்ளே இருந்து டேய் என்று எழுந்து வந்தால் பக்கத்து வீட்டு பெரியம்மா … எல்லோரும் ஓடிபோய் அவர் அவர் படுக்கையில் போர்வைக்குள் புகுந்து கொண்டனர்  டேய் நடிக்காதீங்கடா இந்த மாதிரி இடையூறு செய்தால் சாமி சூலத்தால் கண்ணை குற்றிவிடும் பேசாம தூங்குங்க என்று அதட்டினால்  எல்லோரும் பயத்தில் தூங்கி விட்டனர் இளமுருகுக்கு மட்டும் தூக்கம் வரவேயில்லை வீட்டின் மேல் உள்ள உத்திரத்தை பார்த்தபடியே படுத்து கிடந்தான் சிறிது நேரம் ஆனதும் எல்லோரும் வாயில் ஏதோ தின்றபடி அவர்களது வீட்டிற்கு சென்றனர் ..எல்லோரும் சென்ற பிறகு எல்லோரையும் தட்டி எழுப்பினாள் இளமுருகு அம்மா எல்லோருடைய கையிலையும் சாப்பிடுங்க என்று கொழுக்கட்டை கொடுத்து யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்றாள் இது என்ன கொழுக்கட்டை சித்தி என்று கேட்டான் அருண் இது செவ்வாய் பூசை கொழுக்கட்டை சாப்பிட்டு தூங்குங்கள் என்றாள் எல்லோரும் தூக்க கலக்கத்தோடு சாப்பிட்டு தூங்கினர்  …மறுநாள் அருகில் உள்ள பள்ளிக்கூடம் சென்று திரும்பி நண்பர்களோடு விளையாடிக்கொண்டு கையில் புத்தகப்பையயை தோளில் மாட்டியபடி தெருவில் ஓடிவந்தான் அங்கே காளிமுத்து என்பவரின் வீட்டை நோக்கி ஒருசிலர் ஓடி கொண்டிருந்தனர் வீட்டின் உள்ளே ஒரே சத்தம் என்னவென்று போய் எட்டிபார்த்தான் ராஜா என்பவர் வாயில் நுரை தள்ளி கைக்காள் வெட்டி வெட்டி இழுத்தப்படி அவனோட அம்மாவின் மடியில் படுத்தப்படி துடித்து கொண்டிருந்தார் அவனோட அம்மா என்னப்பா ஆச்சு உனக்கு கதறினாள் யாராவது சீக்கிரம் வண்டிய பூட்டுங்க என்று கத்தினாள் அருகில் இருந்த ஒருவர் கையில் மணிக்கட்டை பிடித்து வாயை நுகர்ந்தும் பார்த்தார் பால்டாயில் குடித்திருக்காமா என்றார் ஐயோ நான் என்ன செய்வேன் ஏண்டா இப்படி பண்ணின தலையில் அடித்து கொண்டு ஏதாவது செய்யுங்களேன் என்று அழுதாள் புலியை கறைத்து கொண்டு வாயில் ஊற்ற ஓடிவந்தால் பக்கத்து வீட்டு மாரியம்மாள் , வண்டியை பூட்டிக்கொண்டு மருத்துவமனை அழைத்து செல்ல ஓடிவந்தார்கள் அங்கே அதிவேகமாக கைகள் உதைத்த படி கண்கள் மேல்நோக்கி பார்த்தபடி துடிக்க துடிக்க உயிர் பிறிந்தது அவருடை பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதமும், ஒரு பெண்ணோட புகைப்படமும் கீழே விழுந்தது அருகில் நின்றுகொண்டிருந்த இளமுருகு , அவனின் நண்பர்களையும் சுற்றி நின்ற ஊர்காரர்கள் எல்லோரும் வீட்டிற்கு ஒடுங்க என்று விரட்டினர் …

சிறிது நேரம் கழித்து மாரியம்மாள் , ஊர்காரர்களோடு இளமுருகு அப்பாவை பார்க்க ஓடிவந்தால் தபால் காரர் அண்ணே இந்த போட்டோவும் , கடுதாசியும் நம்ம ராஜா வோட சொக்காவுல இருந்துது அண்ணே  போட்டோவுல இருக்கிறது யாரு? எங்கயையாவது பார்த்து இருக்கீங்களா , இந்த கடுதாசில என்ன எழுதி இருக்குனு படிச்சு சொல்லுங்க என்றாள் பதட்டத்தோடு …இளமுருகு அப்பா பதட்டப்படாத பொறுமையா இரும்மா  என்றபடி கடிதத்தை வாங்கி படித்தார்… படித்து முடித்து மாரியம்மாளிடமும் , ஊர்க்காரர்களிடம் இந்த போட்டோவுல இருக்கிற பொண்ணு நம்ம ஊர் கிடையாது இந்த பொண்ணு மெட்ராஸ்ல  இருக்கா நம்ம ராஜா இந்த பெண்ணை காதிலிச்சு இருக்கான் ஒன்னா பழகி இருக்காங்க இந்த பொண்ணோட வீட்ல வேற ஒரு  பையனை கல்யாணம் முடிச்சுட்டாங்க இதை இவனாள தாங்கி கொள்ள முடியல அதாம்மா இவன் இப்படி பண்ணிக்கிட்டான் போய் ஆக வேண்டியதை பாருங்கள் என்றார் ..சென்னைக்கு வேளைக்கு போறேன்னு போயி ஏன் இப்படி அநியாயமா செத்துபோயிட்டானே பாவி நம் ஊர்ல இல்லாத பொண்ணுங்களா…என்று அழுதபடியே இழவு வீட்டை நோக்கி ஓடி போயி மாரியம்மாள் நம்ம ராஜா செத்து போனதுக்கு காரணம் இவள்தானாம்…. என்று மாறடித்து அழுது கொண்டிருந்த ராஜாவின் அம்மாவிடம் கூறினாள் ஏண்டா ஏ… ராசா உனக்கு பொண்ணு வேணும்னா அம்மா உனக்கு பார்க்க மாட்டேனாடா யாரோ ஒருத்திக்காக அம்மாவ விட்டு போய்ட்டியே என்று  தறையில் அழுது புறன்டால்  பார்ப்பவர் கண்கள் குளமாகி போனது ஊரே சோகத்தில் உறைந்தது இறுதி சடங்கை முடித்து ஆற்றில் குளித்தப்படி ஊர்க்காரர்கள் வீட்டின் வாசலில் காலை கழுவியபடி வீட்டினுள் சென்றார்கள்…சில மாதங்கள் கடந்தது இளமுருகு அப்பா வழக்கம் போல் வேளையை முடித்து தனது சிவப்பு நிற “சுவேகா” பைக்கில் டுர்….. என்று சத்தத்தோடு வாசலில் வந்து நின்றார் அப்பா எங்க என்று தனது மனைவியிடம் கேட்டார் இப்போதான் டீ கடைக்கு போறேன் என்று போனாங்க என்றாள்… “பனங்காய் வண்டியை” ஒட்டியபடி ஓடிவந்தான் இளமுருகு , டேய் அப்பு போயி தாத்தா டீ கடையில இருக்காங்க அழைத்துவிட்டு வா என்றார் எதுக்கு அப்பா டேய் போடா தாத்தாவுக்கு லெட்டர் வந்திருக்கு கூட்டி வா என்றார் சரிப்பா என்றபடியே பனங்காய் வண்டியை வேகமாக ஒட்டியபடி டீ கடைக்கு சென்றான்  அங்கே கடை வெளிப்புறமாக உள்ள சிறிய ஓட்டையில் அலுமினிய குவலையை நீட்டியபடி சாமி ஒரு டீ கொடுங்க என்று கையில் பெரிய தடியோடு முறுக்கு மீசையோடு நின்று கொண்டிருந்தார் செல்லப்பா .. தாத்தா உள்ளே டீ சாப்பிட்டபடி கையில் நாளிதழ் படித்து கொண்டிருந்தார்… தாத்தா அப்பா கூப்பிடுறாங்க வாங்க வீட்டுக்கு போலாம் என்றான் கையை பிடித்து இழுத்தான் இளமுருகு என்னடா அவசரம்  என்றார் ? உங்களுக்கு லெட்டர் வந்திருக்கான் வாங்க தாத்தா என்று கையயை பிடித்து இழுத்தபடியே கடைக்கு வெளியே வந்தான் …வெளியே டீ சாப்பிட்டபடி நின்று கொண்டிருந்தார் செல்லப்பா என்ன தாடி ஐயா பேரன் விடமாட்டான் போலையை என்று இளமுருகு இரண்டு காதையும் திருகியபடி விளையாடினார்  என்ன விடுங்க… என்றபடி தாத்தோவோடு “பனங்காய் வண்டியை ஒட்டிக்கொண்டே நடந்து சென்றான் யாரு தாத்தா இவரு ? உங்கள மாதிரியே பெரிய மீசை வச்சு இருக்காரு என்று கேட்டான் நம்ம ஊரையும் , ஊரை சுற்றி இருக்கின்ற நிலத்தையும் பாதுகாக்கிற தலையாரி என்றார், அப்படின்னா என்ன தாத்தா? காவல் காரர் என்றார் ஓ!  அப்படியா பிறகு ஏன் தாத்தா அவருக்கு டீ வெளியே கொடுக்கிறாங்க ஊர் வழக்கம் அப்படித்தான் இருக்கும் என்று பேசியபடியே வீட்டிற்கு வந்து சாய்நாற்காலியில் அமர்ந்தார் … அப்பாவிடம் கடிதத்தை வாங்கிகொண்டுபோய் தாத்தாவிடம் கொடுத்தான் இளமுருகு தாத்தா வழக்கம் போல் படித்துவிட்டு “ஊசி வளையத்தில்” சொருகிவைத்தார்…மறுநாள் காலை வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு தாடிதாத்தா பேசினார்   என் தம்பிக்கு சேரவேண்டிய நிலத்தை விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன் அதுக்கு என்ன அவசரம் என்றார்கள் நேற்று தம்பிக்கிட்டேயிருந்து இருந்து வந்த லெட்டர்ல வீடு கட்ட போகிறேன் பணம் கேட்டு எழுதிஇருந்தான் என் கையில வீடு கட்டுகின்ற அளவுக்கு ஏது பணம் அதான் உங்ககிட்ட ஒருவார்த்தை சொல்லி விடலாம் என்றார் சரிப்பா உங்கவிருப்பம் போல் செய்யுங்க என்று மூன்று மகன்களும் , மருமகளும் தலையசைத்தனர்  நாளைக்கு தம்பியை வரச்சொல்லி தந்தி அனுப்பு என்றார் பெரிய மகனிடம் சரிப்பா என்றபடி வழக்கம் போல் தங்களுடைய வேலையை தொடர்ந்தனர் …மறுநாள் கண்ணாடி தாத்தா வந்தார் பத்திரத்தில் எல்லோரும் கையழுத்து போட்டனர் பக்கத்து தெருவில் இருக்கும் ராஜதுரை என்கிற பெரும்நிலக்கிழார் எல்லா கையழுத்தும் சரியா இருக்கா என்று தனது கணக்கு பிள்ளையிடம் சொல்லியபடி வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார் எல்லாம் சரியா இருக்கு ஐயா அருகில் இருந்த ரூபாய் கட்டுகளை  எடுத்து தாடி தாத்தாவிடம் கொடுத்தார் கணக்கு பிள்ளை பணத்தை பெற்றுகொண்டு வீட்டிற்கு வந்தார்கள்… தாடி தாத்தா தனது அம்மா , மனைவியின் புகைபடத்தின் முன்பு பணக்கட்டை சிறிது நேரம் வைத்து தனது தம்பியின் கையில் எடுத்து கொடுத்தார் அண்ணே உங்களுக்கு எடுத்துட்டு மீதியை கொடுங்க என்றார் தம்பி எனக்கு வேண்டாம் தம்பி இது உனக்கு சேரவேண்டியது நீயே எடுத்துக்கோ என்றார் சரிஅண்ணே என்று தயங்கியபடி பணத்தை பெற்றுக்கொண்டு புறப்பட்டார் …ஓரிரு மாதங்களில் வீடுகட்டி உறவுகளையும் , தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களையும் , மானவர்களையும் வரவேற்றியபடி வீட்டின் வாசலில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார் கண்ணாடி தாத்தா …அப்போது அங்கே ஒருசிலர் வீட்டின் வாசலில் வந்து நின்றபடி வாத்தி இங்க வாயா என்று மிரட்டலாக கூப்பிட்டனர் ஓடி போய் நின்றார் ..நாங்கதான் இங்க உன்ன வீடு கட்டக்கூடாதுன்னு சொல்லியாச்சுல இது எங்க ஆளுங்க இருக்கிற தெருவு இதை நான் பலமுறை உன்கிட்ட சொல்லிட்டேன் நீ கேட்கின்ற மாதிரி இல்ல இன்னைக்கு நீ குடி போரியோ என்று சட்டென்று  சட்டையை பிடித்து இழுத்தனர் வீட்டில் உறவினர்களோடு பேசி கொண்டிருந்த தாடி தாத்தா இதனை பார்ததும் ஓடிவந்து யாருப்பா நீங்க? மேல கைவைக்குறீங்க கையை பிடித்து தள்ளிவிட்டபடி என்னப்பா பிரச்சனை என்று தம்பியிடம் கேட்டார் இது அவுங்க சாதிகாரங்க இருக்கிற தெருவாம் இங்கு குடி வரக்கூடாதுன்னு சொல்றாங்க அண்ணே என்றார் … உறவுகாரர்கள் கூட்டம் கூடியது சரி சரி நீங்க எல்லோரும் போங்க நான் பேசிவிட்டு வருகிறேன் ஆகவேண்டியதை பாருங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம் என்று தம்பியையும் சேர்த்து அனுப்பி வைத்தார் … வாங்க எதுவாக இருந்தாலும் பேசிதீர்த்துகலாம் என்று மூவரையும் அருகில் தோப்புக்கு அழைத்து சென்றார் … இங்க பாருங்கப்பா உங்க ஆளுங்க இங்க வருவதற்க்கு முன்னாடியே என் தம்பி இங்க இடம் வாங்கிட்டான் என்ன இங்க வீடு கட்டுவதற்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அக்கம் பக்கத்துல உள்ள யாரும் பிரச்சனை செய்யல நீங்க ஏன் பிரச்சனை பன்றிங்க இது ஒன்னும் கிராமம் இல்லையயே “டவுன்” ஏரியா தான போங்கப்பா என்றார் நாங்க சாதிசங்க தளைவர்கள் நாங்க கேட்காம வேற யாருகேட்பா என்றார்கள் அதெல்லாம் முடியாது விசேச நாள் அதுவுமா பிரச்சனை செய்யாதீங்க கிளம்புங்க என்றார் தாடி தாத்தா … சொல்லிக்கிட்டே இருக்கோம் கேட்க மாற்ற உன் சாதிக்கே இவ்வளவு திமிர்ணா எங்க சாதிக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று பேசியபடி இடுப்பில் சொருகி வைத்து இருந்த பிச்சுவா கத்திய எடுத்து டக் என்று தாடி தாத்தாவின் விலாவில் குத்தினான்  சற்றும் எதிபாராமல் அதிர்ந்தபடியே அவன் கையயை தட்டி விட்டார் கத்தி விலாவில் குத்தி நின்றது உடனே அவர் அருகில் கிடந்த தென்னமட்டையயை எடுத்து அவர்களை ஓட ஓட  அடித்து விரட்டினார் அவர்கள் ஓடிவிட்டனர்… இரத்தம் லேசாக கசிந்தபடியே தென்னை மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார் கத்தியை எடுக்க முயற்சி செய்து பார்த்தார் எடுக்க முடியவில்லை லேசான மயக்கத்தோடு நடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார் … ரொம்ப நேரம் ஆயிடுச்சு குடியும் போயாச்சு இன்னும் அண்ணன் வரவில்லையே என்று கண்ணாடி தாத்தா தோப்பிற்குள் ஓடி வந்து பார்த்தார் தாடி தாத்தா இரத்தம் சொட்டி கொண்டிருந்த நிலையில்  மயங்கி கீழேவிழுந்து கிடந்தார் அண்ணே என்று ஓடி போய் தூக்கியபடி டேய் பாவிகளா ஏண்டா இப்படி பண்ணிட்டீங்க என்று கதறினார் அவரை தோளில் சுமந்தபடி வீட்டின் வாசலுக்கு ஓடிவந்தார்  வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ந்து ஐயோ  என்று கத்தி கதறினார்கள் இளமுருகு தாத்தாவை கத்தியோடு குத்தியிருந்ததை பார்த்ததும் தாத்தாவுக்கு என்னாச்சு தாத்தா !தாத்தா! அழுது துடித்தான் … இளமுருகு அப்பா வாசலில் நின்று கொண்டிருந்த உறவினரின் காரில் தாடி தாத்தாவை ஏற்றிகொண்டு அருகில் உள்ள மருதுவமனைக்கு அழைத்து சென்றனர் லேசான காயம்தான் பயபடுகின்ற மாதிரி ஒன்னும் இல்லை நீங்கள் வீட்டுக்கு அழைத்து கொண்டு போகலாம் என்று டாக்டர் சொன்னார் , மருத்துவமனையே கூட்டமாக நின்றது… கண்விழித்த தாடி தாத்தா தனது தம்பியிடம் விசேசம் நல்ல படிய முடிஞ்சுதா என்று கேட்டார் முடிஞ்சுது அண்ணே வாங்க அண்ணே வீட்டுக்கு போலாம் என்றார் இல்ல தம்பி நம்ம கிராமத்தில் உள்ள நம்ம வீட்டுக்கு போறேன் நீ பயப்படாம இரு  அவர்களை  நான் பார்த்துகிறேன் போலீஸ் கேஸ் என்று பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் சரியா என்று தனது மகன்கள், மருமகள், பேரனோடு தனது வீட்டிற்கு வந்தார் தான் படுத்து இருக்கும் கட்டில் தலைமாட்டின்  சுவற்றில் மாட்டி உள்ள தனது மனைவி போட்டோவை சிறிது நேரம் வழக்கம்போல் பார்த்தபடி போய் படுத்தார் இளமுருகு தாத்தாவின் தாடியை வருடி கொடுத்தபடி தாத்தா ரொம்ப வளிக்குதா என்று கேட்டபடி  அவர்கூடவே படுத்து தூங்கினான் ஓரிரு வருடங்கள் கழிந்தது தனது இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்துமுடித்தார் … சித்திரை மாதம் துவங்கியது அருகில் உள்ள “ஆதனூர்” என்ற கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு காப்பு கட்டி தீமிதி உற்சவத்துக்கு நாள் குறித்தனர்  ஊரே திருவிழாகோலம் பூண்டது வழக்கம் போல் பால்குடம் , அலகு காவடி, என சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து தனி தனியாக கோலாட்டம் ஆடிக்கொண்டு கோவிலை நோக்கி விரைந்தனர் கோவிலை வந்தடைந்ததும் தாய்மார்கள் மாவிளக்கில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர் … இராமநாதன் , கண்ணையனும் ஊர் வழக்கப்படி குஸ்தி , சிலம்பம் விளையாட்டுகளை ஆடிகாட்டினார்கல் இளமுருகு தனது சித்தப்பா தோளில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்… அம்மனை நினைத்தபடி” தீ” குழியில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள் பக்தர்கள் … திருவிழாமுடிந்தது வாயில் குச்சி மிட்டாய்யை சப்பிகொண்டு கையில் பலூனை பறக்க விட்டபடி சித்தப்பா தோளில் அமர்ந்தபடி வீட்டிற்க்கு வந்தான் இளமுருகு … வழக்கம் போல் இளமுருகு அப்பா வேளையை முடித்து வீட்டிற்கு வந்தார் மிகவும் சந்தோசமாக இருந்தார் தனது மனைவி கொடுத்த கோயில் விபூதி , குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு தனது அப்பா காளில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் பிறகு தனது , அம்மா ,பாட்டி போட்டோவின் முன்பு விழுந்து வணங்கினார் என்னப்பா என்று தாடி தாத்தா கேட்டார் அப்பா எனக்கு வேலை ட்ரான்ஸ்பர் ஆயிடுச்சு “குரூப் டி” போஸ்டிங் போட்டு இருக்காங்க இந்த மாதிரி வெளியில போயி லெட்டர் கொடுக்கிற மாதிரி இல்ல போஸ்ட் ஆஃபிஸ் உள்ளையே தான் வேலை அதுவும் “மெட்ராஸ்” ல தான்  என்னப்பா சொல்ற …. ஆமாம்பா அவ்வளவு தூரம் எப்படிப்பா …என்னப்பா பன்றது இளமுருகையும் நல்ல ஸ்கூலில் சேர்க்கலாம் சரிப்பா… எல்லாம் நல்லதுக்குதான் என்றார் தாடி தாத்தா …. தாத்தா , இரண்டு சித்தப்பா , சித்தி, பங்காளிகள் , நண்பர்கள் இவர்களை விட்டு பிரிய மனமின்றி அழுகையோடு இளமுருகு , அப்பா , அம்மாவோடு மெட்ராஸில் வந்து குடிபெயர்ந்தான் வழக்கம் போல் இளமுருகு அப்பா தனது வேளையயை தொடர்ந்தார் இளமுருகு புதிய ஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேர்ந்து படிக்க தொடங்கினான் ஓரிரு வருடங்கள் கடந்தது தாடி தாத்தாவிடம் இருந்து கடிதம் வந்தது எல்லோரும் புறப்பட்டு வரவும் என்று எழுதி இருந்தார் பதில் கடிதம் போட்டபடி நாங்கள் இரயிலில் வருகின்றோம் என்று தேதியையும் நேரத்தையும் குறித்து அனுப்பினார் இளமுருகு அப்பா… இரயிலில் குடும்பத்தோடு வந்தார்கள் இளமுருகு செம்பொன்னார் கோயில் புகைவண்டி நிலையம் என்று எழுதியிருந்ததை படித்தபடியே அம்மாவின் கையை பிடித்தபடி கீழே இறங்கினான் தூரத்தில் இருந்து கோவிந்தன் ஓடிவந்தார் வாங்க தம்பி என்று அழைத்தபடி கூண்டு வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்தனர் யாரும் வாங்க என்று கூட கூப்பிட வில்லை வீடே அமைதியாக இருந்தது தாடிதாத்தா மட்டும் வாங்க என்று கூப்பிட்டபடி இளமுருகை கட்டியணைத்து முத்தமழை பொழிந்தார் …இளமுருகு அப்பா என்னப்பா யாரும் பேச மாற்றாங்க என்னாச்சு எல்லோருக்கும் என்றார் உன் தம்பிகளுக்கு சொத்தை பிறித்து கொடுக்கணுமாம் அதான் எல்லோறும் இப்படி இருக்காங்க என்றார் தனது சிறிய தம்பி ஓடிவந்து தேவையில்லாம எதுவும் பேசிக்கிட்டு இருக்க வேண்டாம் முதலில் பத்திரத்தில் கையழுத்து போட்டு நீ கிளம்புகின்ற வழிய பாரு என்றார்… இளமுருகு அப்பாவுக்கு கோவம் தலைக்கு ஏறியது என்னடா பேசுற என்று  அடிக்க கையயை ஓங்கினார் அவருடைய மனைவி ஓடிவந்து  தடுத்தார் இதோ பாருங்க என் வீட்டு காரர் மேல் கை வைக்காதீங்க என்று பதில் பேச சண்டை மூண்டது தாடி தாத்தா எல்லோரையும் சமாதானப்படுத்தினார் … தம்பி காரர்கள் இருவரும் எல்லா சொத்தையும் எங்க இரண்டு பேருக்கு மட்டும் எழுதி வையுங்க அண்ணனுக்கு தேவையில்லை என்றனர் அதெல்லாம் முடியாது என்றார் தாடி தாத்தா ,அண்ணனை மட்டும் படிக்க வச்சு கவர்ன்மெண்ட் வேளை வாங்கி கொடுத்துட்ட  எங்களுக்கு என்று நீ எதுவும் செய்யவில்லையே என்று குற்றம் சாட்டினர் உங்கள மாதிரிதான் அவனையும் படிக்க வச்சேன் அவன் படிச்சான் நீங்க படிக்கல நான் செய்வது என்றார் தாடி தாத்தா பொருமை இழந்த இளமுருகு அப்பா டேபிள் மேல் இருந்த நான்கு ஐந்து வெற்றுபத்திரத்தில் கையெழுத்து போட்டு உங்க சொத்தும் தேவையில்லை , உறவும் தேவையில்லை  என்று இளமுருகை தோளில் தூக்கியபடி வாடி என்று மனைவியை கையயை பிடித்து இழுத்தப்படி வீட்டை விட்டு வெளியே வந்தார் தெருவே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது… தாடிதாத்தா ஓடிவந்து சமாதானப்படுத்தினார் என்னை விடுங்க என்று கோவத்தில் புகைவண்டி நிலையம் நோக்கி நடந்தார் …தாத்தா ! தாத்தா!.. என்று கத்தினான் இளமுருகு …. 12 மைல் தூரம் நடேந்தே புகைவண்டி நிலையத்துக்கு வந்து பிறகு இரயிலில் ஏறி மெட்ராஸ் வந்து சேர்ந்தார்கள் .. வருடங்கள் கடந்தது இளமுருகு அப்பா வழக்கம் போல் வேளைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார் , இளமுருகும் “காலேஜ்”  கிளம்பி கொண்டிருந்தான் அப்போது வீட்டில் உள்ள “லாண்ட் லைன் ஃபோன்” ஒலித்தது இளமுருகு அப்பா ஃபோனை எடுத்து ஹலோ யாரு ? என்றார் மறுமுனையில் தம்பி நீங்க இளவரசனா ஆமாம் ,நீங்க ? நான்தான் ராஜன் நம்ம ஊர் பிரெஸிடெண்ட் பேசுறேன் என்றார்…  அண்ணே சொல்லுங்க.. என்ன அண்ணே திடீர்னு ஃபோன் என்று கேட்டார் இளமுருகு அப்பா தம்பி உங்க அப்பா … இன்று காலையிலே “தவறிட்டார்”  ஊருக்கு உடனே வாங்க என்றார்  சரிண்ணே என்று களங்கிய கண்களோடு ஃபோனை கட் செய்தார் …உடனே குடும்பத்தோடு காரை ஒட்டிக்கொண்டு தனது கிராமத்தை நோக்கி வந்தார் மண்ரோடு தார் சாலையாக மாறி இருந்தது வயல்கள் இருந்த இடத்தில் அங்கெங்கே ஒரு சில வீடுகள் நீர் வற்றிய “கடலாழி” ஆறு அங்கெங்கே கட்டியிருந்த மோட்டார் பம்புகள் ஆனால் பசுமை மட்டும் மாறாமல் இருந்தது … பள்ளிக்கூடம் விட்டு சைக்கலில் ஒரு சிலர் பள்ளி சீருடையோடு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் .. பறவைகள் சத்தமிட்டு மரத்தில் அடைந்து கொண்டிருந்தன.. தெருவுக்குள் நுழைந்தார் குடிசையான வீடுகள் மாடி வீடுகளாக மாறி இருந்தது தனது வீட்டின் வாசலில் ஓரமாய் போய் காரை நிறுத்தினார்  மிகப்பெரியதாக இருந்த  ஓட்டு வீடு தடையமே இல்லாமல் ஓலை குடிசையாக மாறி இருந்தது வீட்டின் அருகில் இருந்த முற்றத்தில் செடிகள் முலைத்து காடாய் மண்டிகிடந்தன .. வாசலில் கீற்று பந்தலிட்டு இருந்தது  ஊர் பெரியவர்கள் , உறவினர்கள் நாற்காலியில் அமர்ந்து இருந்தனர் உள்ளே ஒப்பாரி சத்தமும்… வெளியே தப்பு சத்தமும்… கேட்டு கொண்டிருந்தது மணைவி , மகனோடு காரை விட்டு இறங்கி கையில் பெரிய மாலையோடு வீட்டிற்குள் நுழைந்தார்  வடக்கே தலை வைத்தபடி தாடி தாத்தாவை கயிற்று கட்டிலில் படுக்க வைத்து இருந்தனர் தலைமாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது இளமுருகு அப்பா மாலையை போட்டபடி அப்பா ! அப்பா என்று கதறிய படி இத்தனை வருசமா கோவத்துல உண்ண பார்க்காம இருந்துவிட்டேன அப்பா என்று சொல்லி அழுதார்… இளமுருகு தாத்தாவின் தலைமாட்டில் வெண்ணிற தாடியை வருடியபடி தாத்தா தாத்தா என்று கதறி அழுதான்.. மருமகள் எங்கள மன்னிச்சிடுங்க அப்பா என்று கால்மாட்டில் உட்கார்ந்து அழுதாள்… ஊர் பெரியவர்கள்  சிறிது நேரம் கழித்து இளமுருகு அப்பாவிடம் வந்து நாளைக்கு கோவிலில் காப்புகட்டு இருக்கு… பொழுது சாய்ர நேரம் வேற நெருங்கிடுச்சி எல்லா காரியத்தையும் இப்பவே முடிச்சுடிலாம் தம்பி என்றார் சரிங்க ஊர் வழக்கம் என்னவோ அப்படியே செய்திடுங்க என்றார்… அப்போது கோவிந்தனும், மருதவாணனும் ஓடிவந்து எல்லோருக்கும் ஐயா இறந்த சேதியை சொல்லி முடிச்சாச்சு என்று கண்ணாடி தாத்தாவிடம் சொல்லி தங்களது விசுவாசத்தை காண்பித்தனர் தாடி தத்தாவை வீட்டின் வாசலில் முன்புறம் கொண்டுவந்து தலையை நிமிர்த்தி உட்கார வைத்தபடி உறவினர்களின் இடது கையயால் நல்ல எண்ணையயை தொட்டு தலையில் வைக்க சொன்னார்கள் பிறகு அருகில் உள்ள குளத்தில் இருந்து கொடி பிடித்து எடுத்துவந்த நீரால் குளிப்பாட்டினர் .. குளிப்பாட்டிய தண்ணியை வாசலில் வெட்டிய குழியில் நிறப்பி மூடினர்  அருகில் நின்ற கண்ணாடி தாத்தா கையில் வைத்து இருந்த புது வேட்டி சட்டையை எடுத்து கொடுத்தார்  புது வேட்டி சட்டை அணிந்த பிறகு நெற்றியில் விபூதி சந்தனம் இட்டு ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்டிவிட்டனர் சுற்றி இருந்த உறவினர்கள் ,ஊரார்கள் அவரிடம் இருந்த நற்குணங்களை சொல்லியபடி அழுது கொண்டிருந்தனர்  இளமுருகு கையில்  “தீ” பந்தம் பிடித்து அழுதபடி நின்று கொண்டிருந்தான் பிறகு தாடி தாத்தாவை அலங்கரிக்கபட்ட பச்சை மூங்கில் பாடையில் படுக்க வைத்தனர் உறவினர்கள் மூன்று முறை பாடையயை சுற்றிவந்து காலில் விழுந்து தொட்டு வணங்கினார்கள் ஊரில் உள்ள உயரமான நான்கு பேர் நான்கு பக்கமும் உள்ள மூங்கில் காலை பிடித்து தூக்கினார்கள் சுற்றி இருந்தவர்கள் வேகமாக கதறி அழுதனர்  பாடை போன திசை நோக்கி சிலர் கீழே விழுந்து வணங்கினார்கள் … தாடி தத்தாவை ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டை நோக்கி தூக்கி சென்றனர் சடங்குகளை செய்து முடித்து வெட்டப்பட்டு இருந்த குழியில் அடக்கம் செய்து பால் ஊற்றி வழிபட்டு திரும்பி பார்க்காமல் வந்தனர் சற்று தூரத்தில் உள்ள ஊர் களத்து மேட்டில் ஊர் பெரியவர்கள் , உறவினர்கள் எல்லோரும் அமர்ந்து பந்தலிட்டவர் , இழவு செய்தி சொன்னவர், பிணத்தை புதைப்பவர், தப்பு அடித்தவர் , முடிதிருத்துவர் என எல்லோருக்கும் கூலி எவ்வளவு என கணக்கிட்டு கூறினார் ஊர் “பிரெஸிடெண்ட்”  ராஜன் கூட்டத்தில் அருகே நின்று கொண்டிருந்த இளைய மகன்கள் இருவரும் எங்ககிட்ட எந்த பணமும் இல்லை எங்களாள எதுவும் கொடுக்க முடியாது என்று போதையில் ஆடியபடி பதில் சொன்னணர் நீங்கலாம் திருந்தவே மாட்டீங்க இங்கிருந்து கிளம்புங்கடா என்று ஊரார் இருவரையும் விறட்டி அனுப்பினார்கள் அப்போது இளமுருகு அப்பாவும் , கண்ணாடி தாத்தாவும் பணத்தை எடுத்து நீட்டினார்கள் அப்போது பெரும் நிலக்கிழார் ராஜதுரை அமர்ந்து இருந்த ஊர்க்காரர்களிடம் செத்துபோன தாடி ஒண்ணும் சாதார்ண ஆள் இல்லை அவரும் இந்தஊர்ல பெரிய நிலக்கிழார் தான் அவரு தனக்கு என்று கடைசியா வைத்து இருந்த நிலத்தை என்கிட்டதான் வித்தாறு முழு பணத்தையும் அவர் வாங்கவில்லை மீதி பணத்தை நான் இறந்த பிறகு அந்த பணத்தில் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்னிடம் கூறியிருந்தார் இந்தாங்க மீதி பணம் என்று சபையில் சமர்ப்பித்தார் சுற்றியிருந்த ஊர்காரர்கள் , உறவினர்கள் ஆச்சரியத்தோடு தாடி ரோசக்காரன் என்று ஆளுக்கொரு விதமாய் பேசி கொண்டிருந்தனர் அந்த பணத்தில் கூலியயை கொடுத்துமுடித்து அருகில் உள்ள பம்பு செட்டில் குளித்து எல்லோரும் அவர் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்..இளமுருகுக்கு தாத்தாவின் நினைவாகவே இருந்தது மறுநாள் இளமுருகு அப்பா , அம்மா வோடு காரில் மெட்ராஸ் புறப்பட்டான் தனது தாடி தாத்தா டீ குடிக்கும் கடையயை பார்த்தான் அங்கே செல்லப்பா “ஊர் தலையாரி” கடையின் உள்ளே டீ சாப்பிட்டபடி அமர்ந்திருந்தார் இவரை பார்ததும் அப்பா காரை நிறுத்துங்கள் என்றான் ஏண்டா என்றார் கொஞ்ச நேரம்பா இதோ வந்து விடுகிறேன்  டீ கடையை நோக்கி ஓடினான் உள்ளே அமர்ந்து இருந்த செல்லப்பாவிடம் நல்லா இருக்கீங்களா தாத்தா என்றான் நல்லா இருக்கேன் யாருப்பா நீ என்றார் நான்தான் தாடி ஐயா பேரன் ஓ அப்படியா வாய்யா என்று கன்னத்தை தடவி கொடுத்தார் பிறகு அவர் காலை தொட்டு வணங்கினான் நல்லா இருயா என்று ஆசிர்வதித்தபடி காதை பிடித்து லேசாக திருகினார் சுற்றி நின்ற ஊர்க்காரர்கள் சிலர்  இவன் ஏன் இவர் காளில் போய் விழுகிறான் என்று முகம் சுளித்தனர் … தாத்தாவை போன்று மீசை வைத்து இருந்த அவரின் மீசையயை பார்த்தபடி அவரிடம் இருந்து விடை பெற்று காரில் ஏறி  தாடி தாத்தாவின் நினைவுகளோடு புறப்பட்டான்  ஊர் எல்லை முடிந்தது அங்கேசாலையோரம் நட்டு வைத்து இருந்த மஞ்சள்நிற இரும்பு பலகையில் எழுதியிருந்தது “நரசிங்க நத்தம்” கிராமம் நன்றி மீண்டும் வருக ! 

உறுதி மொழி:

கதை எனது சொந்த கற்பனையில் உருவான புனைவுகளே . அவை தழுவலோ, மொழிபெயர்போ பிரிதொன்றின் நகலோ அல்ல.

முகவரி:

இ. சதீஷ்குமார் ,

No. 583 / சன் சிட்டி,

அகரம் கிராமம்,

கடம்பத்தூர்  – 631203 (அஞ்சல்),

திருவள்ளூர் (மாவட்டம்),

தமிழ்நாடு,

இந்தியா.


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *