பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தால் ஏழை,நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டனத்திற்குரியது. அதோடு அவைகளின் விலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

 *குறைந்திருக்கிறது ஆனால் குறையவில்லை!* 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது;ஆனால் நம் அரசாங்கம் குறைக்காமல் ஏற்றுகிறது என்று சொல்பவர்கள் உண்மையில் அடிப்படை விலை நம் நாட்டிலும் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவார்கள். மே 2014 அன்று ரூ 47.12 ஆக இருந்த அடிப்படை விலை பிப்ரவரி 2021 அன்று ரூ29.34 ஆகக் குறைத்துள்ளது. அப்படியானால்  பெட்ரோல் டீசல் விலை ஏன் கூடுதலாக உள்ளது? இந்த எரிபொருட்களின் விலையில் அடிப்படை விலை, மத்திய மாநில அரசுகளின் வரிகள் மற்றும் முகவர்களின் கமிஷன் ஆகியவை அடங்கியுள்ளன. இவை எப்படி மாற்றம் பெற்றுள்ளன என்பதை டெல்லி நகர பெட்ரோல் விலையை எடுத்துக்கொண்டு பார்க்கலாம்.

மே 2014 பிப்ரவரி 2021 மொத்த விலையில் சதவீதம்

2014    2021

*அடிப்படை விலை* *47.12* *29.34* *66*      *34*
மத்திய வரி 10.39 32.98 14          38
மாநில வரி  11.9 19.92 17           23
முகவர் கமிஷன்  2 3.69 3                4
மொத்த விலை   71.41 86.3

அடிப்படை விலை 2014 ஆம் ஆண்டில் 66%இலிருந்து 2021ஆம் ஆண்டில்  34%ஆக குறைந்துள்ளது. அதே காலத்தில் வரிகள் 34%இலிருந்து 66%ஆக அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களில் இதுவே நிலைமை.*ஏறியும் ஏறவில்லை!* 

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் *விவசாயக் கட்டுமானம் மற்றும் வளர்ச்சி துணை வரி* (*agricultural infrastructrue and development cess – AIDS*) என்கிற புது வரி இந்த பட்ஜெட்டில் விதிக்கப்பட்டபோதும் மேற்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ள மத்திய வரியான 32.98% என்பது மாறவில்லை. இதை எப்படி செய்துள்ளார்கள்,அதன் முக்கியத்துவம் என்னவென்று பார்க்கலாம்.(பெட்ரோலுக்கான அட்டவணை.)

ஜூன் 2020 பிப்ரவரி 2021
அடிப்படைகலால்வரி  2.98 1.4
கூடுதல் கலால் வரி  12 11
*விவசாய செஸ் AIDS* *2.5*
சாலை கட்டுமான வரி  18 18
மொத்தம் 32.98 32.9

   கலால் வரியை குறைத்து புதிய விவசாய துணைவரியை(CESS) விதித்து மொத்த வரி அப்படியே இருப்பது போலக் காட்டியிருக்கிறார்கள். *துணை வரிகள் எனும் தந்திரம்* 

அதனாலென்ன என்கிறீர்களா? முதல் சூட்சுமம் துணைவரிகள் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டாம் என்பது. இரண்டாவது, துணை வரிகள் எந்த நோக்கத்திற்காக விதிக்கப்பட்டதோ அதற்காக மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். அதையாவது செய்வார்களா என்றால் மத்திய அரசின் முதன்மைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கை நேர் மாறாக உள்ளது. 

வசூலிக்கப்பட்ட  துணை வரி(கோடிகளில்)  செலவழிக்காமல் தக்க வைத்துக் கொண்டது 
2019 மொத்த துணை வரி  274592 40%
2019 ஜிஎஸ்டி துணை வரி  95081 43%
2019 சாலை கட்டுமான துணைவரி   110847 9%
2010-2019 கச்சா எண்ணெய் துணை வரி  124399 100%

  ஆக இந்த விவசாய துணை வரியையும் மத்திய அரசாங்கம் அந்த நோக்கத்திற்காக செலவழிக்குமா என்பது கேள்விக்குறியே.

சுமந்த் சென் மற்றும் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் (தி இந்து ஆங்கில நாளிதழ் 15.02.2021 கட்டுரையின் தமிழாக்கம்)
நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்
https://www.thehindu.com/data/as-petrol-prices-cross-90-per-litre-new-cess-could-deepen-centres-coffers/article33841260.eceLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *