உன்னை நான் அவதானித்திருக்கிறேன்.
என்னருமை உலகே !
உன்னை நான் அவதானித்திருக்கிறேன்.
சுழன்றடித்த புயல்களில்
மீண்டிருக்கிறாய்.
மலரும் ஒவ்வொரு ஆன்மாவையும்
போற்றுகிறாய்
போர்கள்,எரிகற்கள்,வெப்பம்,
நச்சுப் புகைகள்,பிளாஸ்டிக்
எத்தனை வகை சித்திரவதைகள்?
அத்தனையும் தாண்டியிருக்கிறாய்.
எத்தனைக் கொடுமைகள்?
ஆனாலும் அவையனைத்தும் மன்னித்தாய்.
இப்போது இந்தக் கொரோனா.
இது மற்றுமொரு கிருமிதான்.
அதனால், என்னருமை உலகே
ஒருபோதும் நம்பிக்கை இழக்காதே.
இளைப்பாறி புத்தாக்கம் பெற
இன்னும் காலம் இருக்கிறது.
அன்புடை உலகே !
கொஞ்சம் குணமடைந்து கொள்.
கடும் இழப்புகள் ஏற்றோம்.
இதையும் கடந்து போவோம்.
அழிந்துகொண்டிருக்கும் ஆத்மாக்களை
இப்போது கடைத்தேற்றம் செய்ய வேண்டும்.
(தஞ்சை லிட்ரரி ஸ்காலர்ஸ் சொசைட்டியும் இந்தியன் யூனிவர்சிட்டி பிரெஸ்சும் (பாரதி புத்தாகாலயம்)இணைந்து வெளியிட்டுள்ள ‘POEMS APLENTY (A CHOICE OF VERSE) புத்தகத்திலிருந்து என்.கஜேஸ்வரி அவர்களின் ‘Unity In Solititude’ கவிதையின் தமிழாக்கம். இவர் ஒரத்த நாடு அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணி புரிகிறார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார்.)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments